AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்தியர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்த தங்க ETF.. ஒரே மாதத்தில் கடுமையாக சரிந்த முதலீடுகள்!

Gold ETF's Got Huge Dip In February | இந்தியாவை பொருத்தவரை தங்கத்தை போலவே தங்க ஈடிஎஃப்களிலும் ஏராளமானவர்கள் முதலீடு செய்து வருகின்றனர். இந்த நிலையில் 2026, ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பிப்ரவரி மாதத்தில் தங்க ஈடிஎஃப் முதலீடு குறைந்துள்ளது.

இந்தியர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்த தங்க ETF.. ஒரே மாதத்தில் கடுமையாக சரிந்த முதலீடுகள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 10 Mar 2026 18:01 PM IST

இந்தியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள முதலீடு என்றால் அது தங்க (Gold) முதலீடு தான். இந்தியர்கள் காலம் காலமாக தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். தங்கம் பாரம்பரியத்தின் அடையாளமாக மட்டுமன்றி, சிறந்த பலன்களை தரக்கூடிய பாதுகாப்பான முதலீடாகவும் உள்ளதால் பலரும் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். தங்கம் மீது இந்தியர்கள் எவ்வளவு ஆர்வமாக முதலீடு செய்து வருகின்றனரோ, அதே அளவு தங்க ஈடிஎஃப் (ETF – Exchange Traded Fund) திட்டங்களிலும் முதலீடு செய்து வருகின்றனர். இந்த நிலையில், இந்தியர்கள் மத்தியில் தங்க ஈடிஎஃப் முதலீடு குறைந்துள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கோல்டு ஈடிஎஃப்களில் முதலீடு செய்யும் பொதுமக்கள்

இந்திய குடிமக்கள் எவ்வாறு தங்க நகைகளை வாங்கி முதலீடு செய்கின்றனரோ அதே அளவு தங்க ஈடிஎஃப் திட்டங்களிலும் முதலீடு செய்து வருகின்றனர். செய்கூலி, சேதாரம் எதுவுமின்றி தங்கத்தை வாங்கி அதிக விலைக்கு விற்று லாபம் பெற தங்க ஈடிஎஃப்கள் வழிவகை செய்யும் நிலையில், பலரும் அவற்றில் மிகவும் ஆர்வமாக முதலீடு செய்கின்றனர். இந்த நிலையில், 2026 ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், பிப்ரவரி மாதத்தில் இந்தியர்கள் மத்தியில் தங்க ஈடிஎஃப்கள் மீதான முதலீடு குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : சிலிண்டர் தட்டுப்பாடு.. தமிழகத்தில் ஹோட்டல்கள் மூடப்படும் அபாயம்?.. மத்திய அரசுக்கு அவசர கோரிக்கை

பிப்ரவரியில் கடும் சரிவை சந்தித்த தங்க ஈடிஎஃப் முதலீடு

2026 ஜனவரி மாதத்தில் ரூ.24,039 கோடியாக இருந்த தங்க ஈடிஎஃப் முதலீடு பிப்ரவரி மாதத்தில் கடும் சரிவை சந்தித்துள்ளது. அதாவது, பிப்ரவரி மாதத்தில் வெறும் ரூ.5,255 கோடி மட்டுமே தங்க ஈடிஎஃப்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, இண்டெக்ஸ் ஃபண்டுகள், கோல்டு ஈடிஎஃப்கள் உள்ளிட்ட அனைத்து பாசிவ் ஃபண்ட் பிரிவுகளிலும் மொத்த வரத்து பிப்ரவரியில் ரூ.13,879 கோடி குறைந்துள்ளது. ஜனவரியில் ரூ.39,954 கோடியாக இருந்த முதலீடுகள் தற்போது பிப்ரவரியில் மாதத்தில் கடுமையான சரிவை சந்தித்துள்ளது.

இதையும் படிங்க : ஏப்ரல் 1 முதல் கிரெடிட் கார்டில் வரவுள்ள முக்கிய மாற்றங்கள்.. என்ன என்ன தெரியுமா?

முதலீட்டாளர்கள் பாதுகாப்பான தங்க முதலீட்டை தற்காலிகமாக நிறுத்தியிருக்கலாம் என்பதை இந்த மந்த நிலை உணர்த்துவதாக கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us