ஏப்ரல் 1 முதல் கிரெடிட் கார்டில் வரவுள்ள முக்கிய மாற்றங்கள்.. என்ன என்ன தெரியுமா?
Credit Card Changes From April 1, 2026 | இந்தியாவில் உள்ள ஏராளமான பொதுமக்கள் தங்களது நிதி தேவைகளுக்கு கிரெடிட் கார்டு பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஏப்ரல் 1, 2026 முதல் கிரெடிட் கார்டில் முக்கிய மாற்றங்கள் வர உள்ளது.
இந்திய பொதுமக்கள் மத்தியில் கிரெடிட் கார்டு (Credit Card) பயன்பாடு மிக அதிகமாக உள்ளது. தங்களது பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ளும் ஒரு சிறந்த அம்சமாக பலருக்கும் கிரெடிட் கார்டு உள்ளது. இந்த நிலையில், தான் ஏப்ரல் 1, 2026 முதல் கிரெடிட் கார்டு விதிகளில் சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளதாக தவவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், கிரெடிட் கார்டு விதிகளில் வர உள்ள முக்கிய மாற்றங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கிரெடிட் கார்டு விதிகளில் ஏப்ரல் 1 முதல் வரும் முக்கிய மாற்றங்கள்
இனி கிரெடிட் கார்டு விண்ணப்பிக்க பான் கார்டு (PAN Card) கட்டாயமாக மாற உள்ளது. பான் கார்டு இல்லாமல் வங்கிகள் விண்ணப்பங்களை ஏற்காது. இவ்வாறு செய்வதன் மூலம் பயனர்களின் கிரெடிட் கார்டு செலவுகள் வரி அமைப்புடன் இணைக்கப்படும். இதன் மூலம் போலி கணக்குகள் மற்றும் தவறான பயன்பாடு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : போர் நெருக்கடி.. அதிரடியாக உயர்ந்த கச்சா எண்ணெய்.. பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் வருமா?




ரூ.10 லட்சத்திற்கும் மேலான செலவுகளுக்கு இது கட்டாயம்
ஒரு நிதியாண்டில் ரூ.10 லட்சம் அல்லது அதற்கும் மேல் செலவு செய்தால் அந்த விவரங்களை வருமான வரித்துறையிடம் தெரிவிக்க வேண்டும். இதேபோல கிரெடிட் கார்டு மூலம் மேற்கொள்ளப்படும் ரூ.1 லட்சம் அல்லது அதற்கும் மேல் உள்ள ரொக்க பரிவர்த்தனைகள் செய்தாலும் அவையும் கணக்கிடப்படும். இவ்வாறு அதிக தொகைக்கு மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனையும் கணக்கிடப்படும்.
இதையும் படிங்க : மார்ச் மாதத்தில் FD வட்டி விகிதங்களை மாற்றி அமைத்த முக்கிய வங்கிகள்.. லிஸ்ட் இதோ!
கிரெடிட் கார்டு மூலம் வருமான வரி
இந்த புதிய விதிகளின் படி, இனி கிரெடிட் கார்டு மூலம் வருமான வரி செலுத்த முடியும். இது ஒரு சிறந்த அம்சமாக இருந்தாலும், இவ்வாறு கிரெடிட் கார்டு மூலம் வருமான வரி செலுத்தும்போது செயலாக்க கட்டணம் மற்றும் வட்டி விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
கிரெடிட் கார்டில் மேற்கொள்ளப்பட உள்ள இந்த முக்கிய விதிகள் ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.