AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

EPFO : பணி இழந்துவிட்டால் எவ்வளவு பிஎஃப் பணம் எடுக்கலாம்.. புதிய விதிகள் கூறுவது என்ன?

PF Rules To Withdraw Money After Job Loss | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் ஊழியர்களுக்கான பல்வேறு சிறப்பு அம்சங்களை வழங்கி வருகிறது. இந்த நிலையில், பணியை இழந்த ஒரு ஊழியர் எவ்வளவு பிஎஃப் பணம் எடுக்கலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 04 Aug 2026 02:11 AM IST
தற்போதைய சூழலில் வேலை இழப்பு மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. பொருளாதார சிக்கல், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் உள்ளிட்டவற்றின் காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் பணி இழந்து வருகின்றனர். இந்த நிலையில், வேறு வேலை தேடாமல் ஒருவர் பணி இழப்பை சந்தித்தால் அல்லது ரிசைன் செய்தால் அவர் எவ்வளவு பிஎஃப் பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 

1 / 5
பெரும்பாலான தனியார் துறை ஊழியர்கள் தங்களுக்கு பணி இழப்பு ஏற்படும்போது திடீரென ஏற்படும் பொருளாதார தேவைகளுக்காக பிஎஃப் பணத்தை தான் நாடுகின்றனர். இந்த நிலையில் தான் வேலை இழந்து பொருளாதார சிக்கலில் தவிக்கும் ஊழியர்களுக்காக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் ஒரு சிறப்பு அம்சத்தை வழங்குகிறது. 

2 / 5
அதாவது, 1952 ஆம் ஆண்டின் பழைய பிஎஃப் திட்ட விதிகளின்படி, ஒருவர் தனது வேலையை விட்ட பிறகு 2 மாதங்கள் வரை வேலை இல்லாமல் இருந்தால் அவர் தனது முழு பிஎஃப் பணத்தையும் எடுத்துக்கொள்ள தகுதியானர் என இந்த விதி கூறுகிறது. இந்த விதியின் மூலம் 2 மாதங்கள் வரை புதிய வேலை கிடைக்காமல் இருந்தால் ஊழியர் முழு பணத்தையும் எடுத்துக்கொள்ளலாம்.

3 / 5
இந்த விதியின் மூலம் ஏராளமான பயனர்கள் பயன்பெற்று வந்தனர். ஆனால், தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள 2026 பிஎஃப் விதிகளில் இந்த அம்சம் குறித்து முக்கிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது, ஊழியர் இரண்டு மாதங்கள் வேலை இல்லாமல் இருந்தாலும் அவரது முழு பிஎஃப் தொகையையும் எடுக்க முடியாது. 

4 / 5
புதிய விதியின் படி, பிஎஃப் பயனர் 2 மாதங்கள் வேலை இல்லாமல் இருந்தால் 75 சதவீத பணத்தை மட்டுமே எடுக்க முடியும். இதுவே அந்த நபர் அடுத்த 12 மாதங்களுக்கும் தொடர்ந்து வேலை இல்லாமல் இருக்கிறார் எனும் பட்சத்தில் அவர் அந்த மீதமுள்ள 25 சதவீத பிஎஃப் பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

5 / 5
Follow Us