AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஆன்லைனில் இ பான் கார்டு பதிவிறக்கம் செய்வது எப்படி?.. Step By Step Guide இதோ!

How To Download e Pan Card In Online | இந்திய குடிமக்களுக்கான மிக முக்கிய ஆவணமாக பான் கார்டு உள்ளது. இந்த நிலையில், இ பான் கார்டை சுலபமாக ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 07 Mar 2026 14:21 PM IST
இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட தனியாக வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் பான் கார்டு மிக முக்கிய ஆவணமாக உள்ளது. பல இடங்களில் பான் கார்டை பயன்படுத்த வேண்டிய தேவை உள்ளது. ஆனால், எல்லா இடங்களிலும் பான் கார்டை கையில் எடுத்துச் செல்ல முடியாது.

1 / 5
இதற்காக தான் இ பான் கார்டு உள்ளது. இ பான் கார்டை மொபைல் போனில் பதிவிறக்கம் செய்யும் பட்சத்தில் அதனை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த நிலையில், இ பான் கார்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 

2 / 5
அதற்கு https://www.incometax.gov.in/iec/foportal என்ற மத்திய அரசுன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் கொடுக்கப்பட்டு இருக்கும் Quick Links என்ற அம்சத்தை கிளிக் செய்ய வேண்டும். அதில் Check Status என்ற அம்சத்தின் கீழ் இருக்கும் Download e-Pan என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அதன் கீழ் இருக்கும் Continue என்பதை கிளிக் செய்யுங்கள். 

3 / 5
அந்த பக்கத்தில் உங்களது ஆதார் எண் கொடுக்கும். அதனை கிளிக் செய்து, Continue என்பதை கிளிக் செய்ய வேண்டும். பிறகு உங்களுடைய ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபியை பதிவிட்டு Continue என்பதை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அங்கு கொடுக்கப்பட்டு இருக்கும் Download e-Pan என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, டவுன்லோட் செய்ய வேண்டும். 

4 / 5
மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றி மிக எளிதாக உங்களால் இ பான் கார்டை பதிவிறக்கம் செய்துக்கொள்ள முடியும். இதன் மூலம் நீங்கள் செல்லும் அனைத்து இடத்திற்கு பான் கார்டை எடுத்துக்கொண்டு செல்ல வேண்டிய தேவை இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. 

5 / 5
Follow Us