AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தவெக அரசின் “பர்ஸ்ட் லுக்” பட்ஜெட்.. மக்களுக்கு காத்திருக்கும் மாஸ் சர்ப்ரைஸ் அறிவிப்புகள் என்னென்ன?

TVK Govt First Budget Key Announcements : தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பட்ஜெட் நாளை புதன்கிழமை தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் மக்களை கவரக்கூடிய என்னென்ன அறிவிப்புகள் மற்றும் புதிய திட்டங்களுக்கான அறிவிபபுகள் வெளியாகும் என்பதை பார்க்கலாம்.

தவெக அரசின் “பர்ஸ்ட் லுக்” பட்ஜெட்.. மக்களுக்கு காத்திருக்கும் மாஸ் சர்ப்ரைஸ் அறிவிப்புகள் என்னென்ன?
தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 04 Aug 2026 06:34 AM IST

தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பட்ஜெட் நாளை புதன்கிழமை ( ஆகஸ்ட் 5- ஆம் தேதி) தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் மரிய வில்சன் தாக்கல் செய்ய உள்ளார். சுமார் 2 மாத காலமாக தயார் செய்யப்பட்டு வந்த இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள், தேர்தல் வாக்குறுதிகளுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் மக்களை கவரக்கூடிய அறிவிப்புகள், புதிய திட்டங்கள், ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்களின் முன்னேற்றம், பல்வேறு துறை செயல்பாடுகள் உள்ளிட்டவை இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில், மதிப்புமிகு மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500- ஆக உயர்த்தி வழங்குவதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதே போல, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு திட்டங்கள், வெற்றித் தமிழகம் என்ற பெயரில் தமிழக அரசின் 5 ஆண்டு தொலைநோக்கு திட்டத்தில் கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்பது.

அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம்

உயர் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.20 லட்சம் வரை பிணையில்லா கல்வி கடன், புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம், செயற்கை நுண்ணறிவு துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் “ஏஐ” குறித்த விழிப்புணர்வு மற்றும் பயிற்சிகள் அளிப்பது, அத்துடன், அனைத்து பேருந்துகளிலும் மகளிர் இலவச பயணம் மேற்கொள்வதற்கான அறிவிப்பு, ஆண்களும் இலவச பயணம் மேற்கொள்வதற்கான அறிவிப்பு, பெண்கள், இளைஞர்கள், சுய தொழில் தொடங்குவதற்கு புதிய திட்டங்கள் ஆகியவை இடம் பெற உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும் படிக்க: காஞ்சிபுரம் தொழில் வளர்ச்சி மையத்தில் முதல்வர் ஜோசப் விஜய் ஆய்வு.. அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை!

புதிய தொழில் பூங்கா மற்றும் தொழிற்பேட்டை

மேலும், பின் தங்கிய மாவட்டங்களில் பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்த புதிய தொழில் பூங்கா மற்றும் தொழிற்பேட்டை, மாணவர்கள் மற்றும் முதியோர்களின் உதவித்தொகை அதிகரிப்பு, அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு பத்து சதவீதமாக உயர்த்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் நிதி நிலை அறிக்கையில் இடம் பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், இந்த பட்ஜெட்டுக்கு பொது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

முதல்வர் தலைமையில் நடந்த துறைவாரியான கூட்டம்

இந்த நிதி நிலை அறிக்கை தயார் செய்வதற்காக கடந்த ஜூலை 2- ஆம் தேதி முதல் முதல்வர் விஜய் தலைமையில் துறை வாரியான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஜூலை 31- ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு கட்ட ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில், ஒவ்வொரு துறைவாரியாகவும், புதிய திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பட்ஜெட் தயார் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: எடப்பாடி அளித்த பதவிகள் தேவையில்லை.. எஸ்.பி. வேலுமணி திடீர் போர்க்கொடி!

Follow Us