AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முதல்வர் விஜய் கையில் ரகசிய அறிக்கை.. விரைவில் தவெக அமைச்சரவை மாற்றம்.. 4 அமைச்சர்களின் பதவியை பறிக்க முடிவு!

CM Vijay Decides To Strip 4 Ministers: தமிழக வெற்றிக்கழக அமைச்சரவையில் 4 அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்பட இருப்பதாகவும், இது தொடர்பாக ரகசிக அறிக்கை முதல் அமைச்சர் ஜோசப் விஜய் கையில் கிடைத்ததன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக தெரிகிறது.

முதல்வர் விஜய் கையில் ரகசிய அறிக்கை.. விரைவில் தவெக அமைச்சரவை மாற்றம்.. 4 அமைச்சர்களின் பதவியை பறிக்க முடிவு!
முதல்வர் விஜய்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 03 Aug 2026 20:18 PM IST

தமிழகத்தில் திராவிட கட்சிகளின் 59 ஆண்டு கால அரசியல் ஆதிக்கத்தை தவிர்த்து, ஒரு மாற்று ஆட்சியை தமிழக வெற்றி கழகம் அமைத்துள்ளது. இந்த ஆட்சியில் லஞ்சம் இல்லாத ஆட்சியை நடத்துவதற்காக முதல்வர் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதனால், பொதுமக்கள் யாரும் லஞ்சம் கொடுக்காதீர்கள். இதையும் மீறி அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள் என்றும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, ஆட்சி அமைத்ததில் இருந்தே இதை கருத்தை முதல்வர் வலியுறுத்தி வருகிறார். அதன்படி, தனது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் லஞ்சம் வாங்குவதை கண்காணிப்பதற்காக அவர்களின் செயல் திறன் மற்றும் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்காக ரகசிய ஆய்வு அறிக்கை தயார் செய்துள்ளதாக தெரிகிறது.

4 அமைச்சர்களின் பதவியை பறிக்க முடிவு

அதன் அடிப்படையில், சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைந்த பின்னர், அமைச்சர்களான பார்த்திபன், ஜெகதீஸ்வரி, விஸ்வநாதன், சரத்குமார் ஆகிய 4 பேரை நீக்கம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன், கீர்த்தனா, கமலி, ராஜேஷ்குமார் ஆகியோரின் இலாகா மாற்றம் செய்யப்பட இருப்பதாகவு கூறப்படுகிறது. முதல்வர் விஜயால் நியமனம் செய்யப்பட்ட தலைமைச் செயலாளர் சாய் குமார் ரகசிய செயல் திறன் மதிப்பாய்வு அறிக்கை தயார் செய்ததாகவும், அதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காக ஒவ்வொரு அமைச்சரின் செயல் திறன் குறித்தும் முதல்வர் விஜய் விரிவான அறிக்கை கேட்டிருந்தார்.

மேலும் படிக்க: “நடிக்கும் போது வராத ஜோசப், அரசியலுக்கு வந்ததும் வந்தது ஏன்?”.. முதல்வர் விஜய்க்கு சீமான் சரமாரி கேள்வி!!

பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவடைந்த பின்னர்

இந்த அறிக்கையின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் தமிழக வெற்றிக் கழக அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. வருகிற புதன்கிழமை ( ஆகஸ்ட் 5- ஆம் தேதி) சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க இருப்பதால், சட்டமன்ற கூட்டத்தொடர் முடிவடைந்ததும் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று தெரிகிறது. தமிழகத்தில் லஞ்சத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், உயர்மட்ட அதிகாரிகள் யாரும் லஞ்சம் வாங்குவதில்லை எனவும், அரசு அலுவலகங்களில் கீழ்மட்ட அளவில் லஞ்சம் கேட்க அஞ்சுவதாகவும் கூறப்படுகிறது.

அமைச்சர்கள்- எம்எல்ஏக்களை கண்காணிக்கும் போலீசார்

இது மட்டும் இன்றி சென்னை தலைமைச் செயலகத்தில் ஒவ்வொரு அமைச்சர்களின் அறையிலும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும், அமைச்சர்களை யார் யார் சந்திக்க வருகிறார்கள். பணியிட மாற்றங்களுக்கு ஏதேனும் லஞ்சம் பெறுகின்றனரா. சிபாரிசு கடிதம் பெறுவதற்காக லஞ்சம் வாங்குகின்றனரா என்பதை போலீசார் ரகசியமாக கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதில், சில அமைச்சர்கள் மீது மறைமுக குற்றச்சாட்டு புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக தெரிகிறது.

மேலும் படிக்க: தமிழக மின்சார வாரியத்தில் வரலாற்று சாதனை.. ஒரே நேரத்தில் 700 உதவிப் பொறியாளர்களுக்கு பதவி உயர்வு.. முதல்வர் விஜய் அதிரடி!!

Follow Us