காஞ்சிபுரம் தொழில் வளர்ச்சி மையத்தில் முதல்வர் ஜோசப் விஜய் ஆய்வு.. அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை!
CM Joseph Vijay Inspects Kanchipuram: காஞ்சிபுரம் தொழில் வளர்ச்சி மையத்தில் செயல்பட்டு வரும் டெய்ம்லர் பஸஸ் இந்தியா நிறுவனத்தில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, நிறுவனத்தின் அதிகாரிகள் உல்ளிட்டோரிடம் பணிகள் உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் அமைந்துள்ள சிப்காட் தொழில் வளர்ச்சி மையத்தில் முதல்வர் ஜோசப் விஜய் இன்று திங்கள்கிழமை ( ஆகஸ்ட் 3- ஆம் தேதி) திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு, தொழில் வளர்ச்சி மையத்தில் டெய்ம்லர் பஸஸ் இந்தியா என்ற நிறுவனம் சார்பில் 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரம்மாண்ட டெய்ம்லர் இந்தியா வர்த்தக வாகனங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனமானது தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதில், பாரத் பென்ஸ் மற்றும் மெர்சிடிஸ்- பென்ஸ் முத்திரை இடப்பட்ட பேருந்துகள் மற்றும் பேருந்து சேஸ்களை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் இன்று பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பிரான்ஸ் நாட்டு நிறுவனத்திலும் முதல்வர் ஆய்வு
இந்த ஆய்வுக்கு முன்னதாக ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மாம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான செயிண்ட் நிறுவனமும், தமிழக அரசுடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த நிறுவனத்திலும் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டு இருந்தார். அப்போது, இந்த நிறுவனத்தின் உலக தரத்திலான கண்ணாடி தயாரிப்பு வளாகத்தை விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. இதனை, முதல் அமைச்சர் ஜோசப் விஜய் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து, நிசான் கார் நிறுவனத்தையும் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் பார்வையிட்டிருந்தார்.
மேலும் படிக்க: திமுக MLA மார்க்கண்டேயனுக்கு கடும் நிபந்தனைகளுடன் ஜாமீன்.. சட்டமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்க விலக்கு!!
நிறுவன அதிகாரிகளுடன் கலந்துரையாடிய முதல்வர்
அப்போது, மேற்கண்ட நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் பணிகள் மற்றும் வளர்ச்சி, தொழில் நுட்பம், மேம்பாடு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொண்டதுடன், பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். தமிழகத்தின் முதல்வராக ஜோசப் விஜய் பொறுப்பேற்று நிலையில், பல்வேறு அரசு மற்றும் அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள நிறுவனங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
தொடர் ஆய்வில் ஈடுபடும் முதல்வர் விஜய்
அந்த வகையில், சென்னை கோயம்பேட்டில் செயல்பட்டு வரும் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை, சமூக நீதி விடுதி, மாமல்லபுரம் அருகே உள்ள நெம்மேலியில் செயல்பட்டு வரும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு இருந்தார். அந்த வகையில், தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. அதன் அடிப்படையில், முதல்வர் விஜய் தனது வழக்கமான ஆய்வுகளை மேற்கொண்டு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்துள்ளார்.
மேலும் படிக்க: பழனி நில முறைகேடு வழக்கு.. நிரந்தர சார்பதிவாளர்- உதவி அலுவலர் சஸ்பெண்ட்!