AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இணையத்தில் வைரலாகும் ஜெயிலர் 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் கதாப்பாத்திர வீடியோ

SJ Suryah As Bodhi in Jailer 2 | தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் எஸ்.ஜே.சூர்யா. இவரது கதாப்பாத்திர வீடியோவை ஜெயிலர் 2 படக்குழு வெளியிட்டுள்ள நிலையில் அது தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இணையத்தில் வைரலாகும் ஜெயிலர் 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் கதாப்பாத்திர வீடியோ
ஜெயிலர் 2Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 20 Sep 2026 13:57 PM IST

தமிழ் சினிமாவில் பெயரிடப்படாத கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த நடிகர் எஸ்.ஜே.சூர்யா. இவர் பிறகு நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான வாலி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் படங்களை இயக்கி வந்த எஸ்.ஜே.சூர்யா பிறகு அவரது படங்களை அவரே இயக்கி அதில் நாயகனாகவும் நடித்து வந்தார். தொடர்ந்து அவரது இயக்கத்தில் மட்டுமே நடித்து வந்த நடிகர் எஸ்.ஜே.சூர்யா மற்ற இயக்குநர்களின் படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார். அதனைத் தொடர்ந்து நாயகனாக மட்டும் இன்றி தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.

அந்த வகையில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி மற்ற தென்னிந்திய மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். மேலும் பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் தென்னிந்திய மொழிகளில் வரிசையாக வெளியாகி வருகின்றது.

வைரலாகும் ஜெயிலர் 2-வில் எஸ்.ஜே.சூர்யாவின் கதாப்பாத்திர வீடியோ:

அதன்படி தற்போது நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள படம் ஜெயிலர் 2. இந்தப் படம் வருகின்ற அக்டோபர் மாதம் 15-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார். அதன்படி நடிகர் எஸ்.ஜே.சூர்யா என்ன கதாப்பாத்திரத்தில் நடித்து உள்ளார் என்று கதாப்பாத்திர வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு போதி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது தெரிகிறது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Also Read… பிக்பாஸில் விஜய் சேதுபதியிடம் கம்ப்ளெயிண்ட் செய்த ஆனந்தி.. கலாய்த்து பேசிய லட்சுமி பிரியா – முனியம்மாள்.. வைரலாகும் புரோமோ!

ஜெயிலர் 2 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… அடுத்த தலைமுறையினர் அரசியலில் வலுவாக இருக்க விஜய் காரணமாக இருப்பார் – இயக்குநர் அட்லி

Follow Us