விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா மந்தனாவின் ரணபாலி பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Yedhayya Saami song Release: தென்னிந்திய சினிமாவில் ரீல் மற்றும் நிஜ ஜோடியாகவும் இருந்துவருபவர்கள்தான் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா. இவர்கள் இருவரும் பல ஆண்டுகளுக்கு பின் இணைந்து நடித்துள்ள புதிய படம் ரணபாலி. இப்படத்தின் ரிலீஸ் கிட்ட நெருங்கும் நிலையில், இதன் முதல் சிங்கிள் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
தெலுங்கு சினிமாவில் பிரபலமான இளம் ஜோடியாக இருந்துவருபவர்கள்தான் விஜய் தேவரகொண்டா (Vijay Deverakonda) மற்றும் ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna). கீதா கோவிந்தம் என்ற படத்தின் மூலமாக இந்த ஜோடியானது முதல் முறையாக இணைந்திருந்த நிலையில், அதன் பிறகு பல படங்களில் இணைந்து நடித்திருந்தனர். இறுதியாக காம்பரேட் படத்தில் இந்த ஜோடி இணைந்து நடித்திருந்த நிலையில், பின் கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ள திரைப்படம்தான் ரணபாலி (Ranabaali). பீரியாட்டிக் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படமானது சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
இப்படத்தை இயக்குநர் ராகுல் சங்கிருத்யன் (Rahul Sankrityan) இயக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமானது தயாரித்துள்ளது. இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதியில் வெளியாக காத்திருக்கும் நிலையில், தற்போது இப்படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகும் என படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.




இதையும் படிங்க: முனியம்மாவால் முட்டிபோட்டு நடக்கும் வினோத் பாபு.. என்ன நடக்குது பிக்பாஸில்…?
விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகாவின் ரணபாலி படத்தின் முதல் பாடல் ரிலீஸ்அப்டேட் :
ஏற்கனவே விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் திருமணத்தை முன்னிட்டு, இப்படத்திலிருந்து எந்தையா சாமி என்ற பாடல் வெளியிடப்பட்டது. தற்போது இப்பாடலின் முழு வெர்சன் வெளியிடப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்பாடல் வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதியில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ரணபாலி படத்தின் எந்தையா சாமி என்ற பாடல் ரிலீஸ் தேதியை பகிர்ந்த படக்குழு:
Let’s fall in love on September 21st. ❤️❤️❤️#EndhayyaSaami – Telugu#YedhayyaSaami – Tamil#EntheKannaala – Malayalam#EnayyaSaami – Kannada#OMereSaajan – Hindi
An @AjayAtulOnline musical 🎼#Ranabaali pic.twitter.com/O3SZLyK2u5
— RANABAALI (@RanabaaliFilm) September 18, 2026
இந்த ரணபாலி படமானது கடந்த 1960-களில் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் வறுமையில் தவித்த இந்தியாவின் நிஜ கதையை மையப்படுத்தி இயக்கப்பட்டுள்ளதாம். இதில் விஜய் தேவரகொண்டா ரணபாலி என்ற வேடத்திலும், அவருக்கு ஜோடியாக ஜெயாம்மா என்ற வேடத்தில் நடிகை ராஷ்மிகாவும் நடித்துள்ளனர்.
இதையும் படிங்க: கீர்த்தி சுரேஷின் டோரதி படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? – அறிவிப்பை பகிர்ந்த படக்குழு!
இந்த படமானது மிகவும் பிரம்மாண்டமான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதன் மீது எதிர்பார்ப்புகள் இருந்துவருகிறது.இப்படம் 2026ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதியில் வெளியாகும் நிலையில், அதே நாளில் தமிழில் தனுஷின் ஓம் திரைப்படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது .