விஜய் தேவரகொண்டா
தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் விஜய் தேவரகொண்டா. மே 9, 1989 அன்று ஹைதராபாத்தில் பிறந்த விஜய், 2011 ஆம் ஆண்டு நுவ்விலா திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தனது ஆரம்ப ஆண்டுகளில், பல படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார். 2016 ஆம் ஆண்டு, பெல்லி சூப்புலு திரைப்படத்தின் மூலம் ஹீரோவானார். இந்த படம் நல்ல வெற்றியைப் பெற்றது. அதன் பிறகு, இயக்குனர் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மூலம் அவர் ஒரு பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றார். 2017 இல் வெளியான இந்த படம் விஜய்யின் வாழ்க்கையையே மாற்றியது. அதன் பிறகு, தெலுங்கு ரசிகர்கள் அவரை ‘ரவுடி’ ஹீரோ என்று அன்பாக அழைத்தனர். மகாநதி, ஈ நகரானிகி எமிண்டி, டாக்ஸிவாலா போன்ற படங்களில் விஜய் நடித்துள்ளார். எந்த பின்னணி ஆதரவும் இல்லாமல் நடிப்பில் ஆர்வத்துடன் திரையுலகில் நுழைந்த விஜய், இப்போது வெற்றி தோல்விகளைப் பொருட்படுத்தாமல் தொடர்ச்சியான படங்களைத் கொடுத்து வருகிறார். காதல், நகைச்சுவை மற்றும் மாஸ் ஆக்ஷன் போன்ற அனைத்து வகையான பொழுதுபோக்கு படங்களாலும் விஜய் ஈர்க்கப்படுகிறார்.
Ranabaali: விஜய் தேவரகொண்டாவின் ரணபாலி படத்தின் ‘தீரம் தீரம்’ பாடல் வெளியீடு!
Dheeram Dheeram song ; தென்னிந்திய சினிமாவில் மக்கள் மத்தியில் சிறந்த இளம் நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் விஜய் தேவரகொண்டா. இவரின் நடிப்பில் ரணபாலி என்ற படமானது உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்திலிருந்து தீரம் தீரம் என்ற 2வது சிங்கிள் வெளியாகியுள்ளது. இது இணையத்தில் வைரலாகிவருகிறது.
- Barath Murugan
- Updated on: Oct 11, 2026
- 20:10 pm IST
Vijay Devarkonda: ரணபாலி மொக்க… ஜெயிலர் 2 போகலாம்.. இணையத்தில் தனது படத்தை பற்றி பரவும் விமர்சனங்கள் – விஜய் தேவரகொண்டா பேச்சு!
Vijay Deverakonda Addresses Critics: தென்னிந்திய சினிமாவில் மக்கள் மத்தில் கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் விஜய் தேவரகொண்டா. இவரின் நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராகி காத்திருக்கும் திரைப்படம்தான் ரணபாலி. இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சியில், தனது படம் குறித்து இணையத்தில் பரப்பப்பட்டுவரும் நெகட்டிவ் குறித்து மனம் திறந்துள்ளார்.
- Barath Murugan
- Updated on: Oct 9, 2026
- 12:15 pm IST
Ranabaali: இந்தியாவின் வறட்சி காலத்தில் ஒரு நாயகன்.. வெளியானது விஜய் தேவரகொண்டாவின் அதிரடி ஆக்ஷன் ரணபாலி ட்ரெய்லர்
Ranabaali Movie Trailer: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் விஜய் தேவரகொண்டா. இவரின் நடிப்பில் தென்னிந்திய மொழிகளில் மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம்தான் ரணபாலி. இப்படமானது அதிரடி ஆக்ஷன் மற்றும் 60-களில் நடந்த உண்மையான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதன் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
- Barath Murugan
- Updated on: Oct 8, 2026
- 19:46 pm IST
Rashmika Mannndana: அவர் எதையும் கொண்டாடுவதில்லை.. கணவர் விஜய் தேவரகொண்டா குறித்து வெளிப்படையாக சொன்ன ராஷ்மிகா மந்தனா!
Rashmika Mannndana About Vijay Deverakonda: மக்கள் மத்தியில் பிரபலமான ரீல் மற்றும் ரியல் ஜோடியாக இருந்துவருபவர்கள்தான் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா. இவர்கள் இருவரும் ரணபாலி என்ற படத்தில் இணைந்து நடித்துள்ள நிலையில், அதன் புரோமோஷன் பணிகள் நடக்கிறது. இதில் ஜோடியாக பேசிய நிலையில், அதில் விஜய் தேவரகொண்டா குறித்த முக்கியமான விஷயத்தை ராஷ்மிகா பகிர்ந்துள்ளார்.
- Barath Murugan
- Updated on: Oct 3, 2026
- 21:30 pm IST
விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா மந்தனாவின் ரணபாலி பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Yedhayya Saami song Release: தென்னிந்திய சினிமாவில் ரீல் மற்றும் நிஜ ஜோடியாகவும் இருந்துவருபவர்கள்தான் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா. இவர்கள் இருவரும் பல ஆண்டுகளுக்கு பின் இணைந்து நடித்துள்ள புதிய படம் ரணபாலி. இப்படத்தின் ரிலீஸ் கிட்ட நெருங்கும் நிலையில், இதன் முதல் சிங்கிள் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
- Barath Murugan
- Updated on: Sep 18, 2026
- 12:29 pm IST
விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனாவின் ரணபாலி பட டீசர் ரிலீஸ் தேதி எப்போது? வெளியான அறிவிப்பு இதோ!
Ranabaali Teaser Update: தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா இருவரும் கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படம்தான் ரணபாலி. இப்படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
- Barath Murugan
- Updated on: Sep 7, 2026
- 17:37 pm IST
விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனாவின் ரணபாலி ரிலீஸ் தேதி இதுதான்… வெளியானது அப்டேட்
Ranabaali Movie Release Date Update | தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகர்களாக வலம் வரும் நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பில் உருவாகி வரும் ரணபாலி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது வைரலாகி வருகின்றது.
- Vinothini Aandisamy
- Updated on: Aug 27, 2026
- 12:24 pm IST
திருமணத்தின் விழாவில் சொன்ன சபதத்தை நிறைவேற்றிய விஜய் தேவரகொண்டா.. அவரே வெளியிட்ட விஷயம் இதை பாருங்க!
Vijay Deverakondas Education Initiative: விஜய் தேவரகொண்டா கடந்த 2026 ஆண்டு பிப்ரவரி மாதத்தில், தனது தந்தையின் கிராமத்தில் நடந்த திருமண விழாவின்போது பள்ளி கல்வி தொகை வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறினார். இந்நிலையில் அதை நிறைவேற்றும் வகையில் கிட்டத்தட்ட 180 குழந்தைகளுக்கு கல்வி தொகை வழங்குவதாக அறிவித்துள்ளார்.
- Barath Murugan
- Updated on: Jun 14, 2026
- 13:07 pm IST
Karuppu: திரையரங்குகளில் வெற்றிநடைபோடும் கருப்பு.. பாராட்டி பதிவை வெளியிட்ட விஜய் தேவரகொண்டா மற்றும் விஷ்ணு விஷால்!
Vishnu Vishal And Vijay Deverakonda Praise Karuppu: தென்னிந்திய மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் சூர்யா. இவரின் நடிப்பில் கருப்பு திரைப்படமானது திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடைப் போட்டு வருகிறது. அந்த வகையில் இப்படத்தை வாழ்த்தி, நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் விஷ்ணு விஷால் பதிவை வெளியிட்டுள்ளார்.
- Barath Murugan
- Updated on: May 16, 2026
- 15:03 pm IST
VD: வீட்டின் முன் குவிந்த ரசிகர்கள்… கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய விஜய் தேவரகொண்டா – வைரலாகும் வீடியோ!
Vijay Deverakonda Birthday Celebration: தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்திவரும் நாயகனாக இருந்துவருபவர் விஜய் தேவரகொண்டா. இன்று 2026 மே 9ம் தேதியில் தனது 37வது பிறந்தநாளை அவர் கொண்டாடிவரும் நிலையில், வீட்டின் முன் குவிந்த ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
- Barath Murugan
- Updated on: May 9, 2026
- 16:50 pm IST
பூஜைகளுடன் தொடங்கியது விஜய் தேவரகொண்டாவின் புது பட ஷூட்டிங் – வீடியோ இதோ!
VDxSHOURYUV Movie: தென்னிந்திய சினிமாவில் இளம் நயகனாக ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துவருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் புது புது படங்களில் ஒப்பந்தமாகி நடித்துவரும் நிலையில், தற்போது ஹாய் நானா பட இயக்குநர் ஷௌர்யுவ் இயக்கத்தில் புது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் இன்று (20/04/2026) பூஜைகளுடன் தொடங்கியுள்ளது.
- Barath Murugan
- Updated on: Apr 20, 2026
- 16:21 pm IST
ViRosh: திருமணம் கொண்டாட்டம் முடிந்து ஷூட்டிங் வந்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா.. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!
ViRosh Couple Ranabaali Movie: தெலுங்கு சினிமாவில் பிரபலமான ஜோடியாக இருந்துவருபவர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா. இவர்கள் இருவருமே இணைந்து நடித்துவரும் புது படம்தான் ரணபாலி. இந்நிலையில் திருமணம் முடிந்து இப்பட ஷூட்டிங்கில், இந்த ஜோடி இணைந்துள்ள நிலையில், படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது.
- Barath Murugan
- Updated on: Apr 12, 2026
- 08:23 am IST
ஒன்றாக தாய்லாந்திற்கு ஹனிமூன் சென்ற விரோஷ் தம்பதி- ஜோடியாக வெளியிட்ட வீடியோ!
ViRosh Honeymoon: விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா இருவருமே, கடந்த 2026 பிப்ரவரி இறுதியில் பிரம்மாண்டமாக திருமணம் செய்துகொண்டனர். அந்த விதத்தில் இவர்கள் இருவருமே, திருமணத்திற்கு பிந்தைய கொண்டாட்டம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இது தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
- Barath Murugan
- Updated on: Mar 25, 2026
- 14:41 pm IST
ஹனிமூனுக்கு தாய்லாந்து சென்ற விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா – வைரலாகும் பதிவு!
ViRosh Thailand Honeymoon: தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திர ஜோடியாக இருந்துவருபவர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ரஷ்மிகா மந்தனா. இவர்கள் இருவருமே கடந்த 2026 பிப்ரவரி மாத இறுதியில் திருமணம் செய்துகொண்ட நிலையில், ஹனிமூனுக்காக தாய்லாந்து சென்றுள்ளனர். அது தொடர்பான பதிவு இணையத்தில் வைரலாகிவருகிறது.
- Barath Murugan
- Updated on: Mar 22, 2026
- 12:49 pm IST
ViRosh: திருமணத்திற்கு அழைக்கவில்லை என வீடியோ போட்ட கியூட் சிறுமி.. வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்த விரோஷ் தம்பதியினர் – வீடியோ!
ViRosh Meets Cute little Fan: விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா இருவருமே கடந்த 2026 பிப்ரவரி மாதத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றிருந்தது. இவர்களின் திருமண செய்தியறிந்து, சிறுமி ஒருவர் தன்னை திருமணத்திற்கு அழைக்கவில்லை என வீடியோ போட்டிருந்த நிலையில், அது வைரலானது. அந்த வகையில் அந்த சிறுமியை அழைத்து விரோஷ் தம்பதி விருந்து கொடுத்துள்ளனர்.
- Barath Murugan
- Updated on: Mar 21, 2026
- 12:36 pm IST