AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Vijay Devarkonda: ரணபாலி மொக்க… ஜெயிலர் 2 போகலாம்.. இணையத்தில் தனது படத்தை பற்றி பரவும் விமர்சனங்கள் – விஜய் தேவரகொண்டா பேச்சு!

Vijay Deverakonda Addresses Critics: தென்னிந்திய சினிமாவில் மக்கள் மத்தில் கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் விஜய் தேவரகொண்டா. இவரின் நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராகி காத்திருக்கும் திரைப்படம்தான் ரணபாலி. இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சியில், தனது படம் குறித்து இணையத்தில் பரப்பப்பட்டுவரும் நெகட்டிவ் குறித்து மனம் திறந்துள்ளார்.

Vijay Devarkonda: ரணபாலி மொக்க… ஜெயிலர் 2 போகலாம்.. இணையத்தில் தனது படத்தை பற்றி பரவும் விமர்சனங்கள் – விஜய் தேவரகொண்டா பேச்சு!
விஜய் தேவரகொண்டாImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 09 Oct 2026 12:15 PM IST

தெலுங்கு சினிமாவில் இளம் நடிகராக நுழைந்து, தற்போது முன்னணி நடிகர்களின் வரிசையில் ஒருவராக இருந்துவருபவர் விஜய் தேவரகொண்டா (Vijay Devarkonda). இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவிலும் படம் வெளியாகியுள்ளது. இறுதியாக கிங்டம் (Kingdom) என படமானது வெளியான நிலையில், ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பிறகு, தெலுங்கு இயக்குநர் ராகுல் சங்கிருத்யன் (Rahul Sankrityan) இயக்கத்தில் உருவாக்கப்பட்டுவந்த திரைப்படம்தான் ரணபாலி (Ranabaali). இப்படத்தில் விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா (Rashmika Mannnada) நடித்துள்ளார்.

இப்படமானது வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. அந்த விதத்தில் நேற்று (08/10/2026) இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றிருந்தது. அந்த நிகழ்ச்சியின்போது மேடையில் பேசியிருந்த நடிகர் விஜய் தேவரகொண்டா அதில், ரணபாலி படம் குறித்து பரவும் நெகட்டிவ் விமர்சனங்கள் குறித்து பேசியுள்ளார்.

இதையும் படிங்க: உங்கள் அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்… வீடியோ வெளியிட்ட அஜித் குமார்!

ரணபாலி படம் குறித்து பரவும் நெகட்டிவ் விமர்சனங்கள் குறித்து விஜய் தேவரகொண்டா பேச்சு:

அந்த நிகழ்ச்சியின் மேடையில் விஜய் தேவரகொண்டா பேசுகையில், “ஒரு தயாரிப்பு குழுவினால் உருவாக்கப்படுகிறது. அதாவது, 50 பேர் அமர்ந்து 20 கணக்குகளை உருவாக்கி, 1000 கணக்குகளைப் பராமரிக்கிறார்கள். அந்த 1000 கணக்குகளும், ஒரு படம் பிரிட்டிஷ் படம் போலவோ, அல்லது ஒரு தெலுங்குப் படம் போலவோ இருக்கிறது என்று கூறி, ‘ஏய், ரணபாலி மொக்க, வாருங்கள் ஜெயிலர் போகலாம். இந்தப் படம் காலி’ என்று சொல்லி, 50-60 ரீல்கள் பரப்பப்பட்டுவருகிறது. ரணாபாலி நன்றாக இருக்காது, ஜெயிலர் 2 நன்றாக இருக்காது ” தனக்கும், படத்திற்கும் எதிரான “பணம் கொடுத்து நடத்தப்படும் பிரச்சாரம்” நடக்கிறது என அதில் அவர் தெளிவாக பேசியுள்ளார்.

இதையும் படிங்க: அட அர்ஜுனின் இளைய மகளுக்கு திருமணமா? எப்போது தெரியுமா?

ரணபாலி படத்தின் ட்ரெய்லர் குறித்து விஜய் தேவரகொண்டா வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இந்த ரணபாலி படமானது கடந்த 1960-களில் நடந்த பஞ்சம் மற்றும் வெள்ளையர்கள் ஆட்சிக்காலத்தின் கொடுமைகள் குறித்த கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஸ்ட் ஆட்சியாளர்களை எதிர்க்கும் ஒரு தலைவனாக நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படமானது 2026ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாகியுள்ளது.

Follow Us