AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அட அர்ஜுனின் இளைய மகளுக்கு திருமணமா? எப்போது தெரியுமா?

Anjana Arjun Wedding Date: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் அர்ஜுன் சர்ஜா. இவரின் மூத்த மகள் சினிமாவில் நடிகையாக இருக்கும் நிலையில், இளைய மகன் அஞ்சனா, தனது நீண்டநாள் காதலனை திருமணம் செய்யவுள்ளார். அந்த திருமணம் எப்போது நடைபெறுகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

அட அர்ஜுனின் இளைய மகளுக்கு திருமணமா? எப்போது தெரியுமா?
அர்ஜுனின் மகள் திருமணம்Image Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Updated On: 08 Oct 2026 22:18 PM IST

கோலிவுட் மக்கள் மத்தியில் முன்னணி நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் அர்ஜுன் சர்ஜா (Arjun Sarja). இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் பல்வேறு மொழியாக்களில் படங்கள் வெளியாகிவருகிறது. இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் பிளாஸ்ட் (Blast). இந்த படத்தில் அர்ஜுன், அபிராமி மற்றும் ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது கடந்த 2026ம் ஆண்டு மே மாதத்தின் இறுதியில் வெளியாகியிருந்தது. இந்த படமானது மிகவும் பிரம்மாண்டமான வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பிறகு இவர் தனது கைவசத்தில் புதிய படங்களிலும் ஒப்பந்தமாகிவருகிறார்.

இவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா சினிமாவில் படங்களில் நடித்துவந்த நிலையில், நடிகர் உமாபதி ராமையாவை திருமணம் செய்துகொண்டார். அந்த விதத்தில் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா அர்ஜுன் (Anjana Arjun), இங்கிலாந்தை சேர்ந்த இசாய் என்பவரை நீண்ட நாள் காதலித்துவந்த நிலையில், இவர் விரைவில் திருமணம் செய்கிறாராம். இவரின் திருமண தேதி குறித்த தகவல் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: இந்தியாவின் வறட்சி காலத்தில் ஒரு நாயகன்.. வெளியானது விஜய் தேவரகொண்டாவின் அதிரடி ஆக்ஷன் ரணபாலி ட்ரெய்லர்

அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா அர்ஜுனின் திருமணம் எப்போது:

அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா அர்ஜுன், சினிமாவில் எதிலும் ஈடுபடவில்லை. இவர் தனது படிப்பை வெளிநாடுகளிலே தொடர்ந்த நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த நபர் ஒருவரை நீண்ட நாட்களாக காதலித்துவந்தார். இவர் காதல் பெற்றோரின் சம்மதத்துடன் நடந்துள்ளது. அந்த விதத்தில் அர்ஜுன் சர்ஜா மற்றும் அஞ்சனாவின் காதலரின் குடும்பம் இணைந்து எடுத்த புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது அந்த விதத்தில், அஞ்சனா மற்றும் அவரின் காதலர் இசாய் இருவரு திருமணம் வரும் 2026ம் ஆண்டு அக் டோபர் 18ம் தேதியில் நடைபெறவுள்ளதாம்.

இதையும் படிங்க: எனக்கு பிடித்த ஹீரோ அவர்தான்… சமந்தா சொன்ன விஷயத்தால் அதிர்ந்த அரங்கம்!

அஞ்சனா அர்ஜுன் மற்றும் இசாய் இருக்கும் இன்ஸ்டாகிராம் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Anjana Arjun (@anj204)

அஞ்சனா மற்றும் இசாயின் காதல் :

அஞ்சனா மற்றும் இசாய் இருவருமே கிட்டத்தட்ட 13 வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரின் நிச்சயதார்த்தம் கடந்த 2025ம் ஆனது ஜனவரி மாதத்தில் இத்தாலியில் உள்ள கோமா ஏரிக்கரையில் நடைபெற்றிருந்தது. அந்த விதத்தில் இதில் இரு குடும்பமும் இணைந்து கலந்துகொண்டிருந்தனர். இந்நிலையில் தற்போது வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதியில், பெற்றோர்கள் மற்றும் நெருங்கிய சொந்தங்களின் முன்னிலையில் நடைபெறவுள்ளதாம்.

Follow Us