AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஜெய்ஹிந்த் படத்தின் ஷூட்டிங்கில் கவுண்டமணி பன்ன சேட்டை… கலகலப்பாக பேசிய அர்ஜுன் – வைரலாகும் வீடியோ

Action King Arjun talks about comedian Goundamani timing comedy in Jaihind movie shooting: தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களால் ஆக்‌ஷன் கிங் என்று அன்புடன் அழைக்கப்படுபவர் அர்ஜுன். இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கவுண்டமணி குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஜெய்ஹிந்த் படத்தின் ஷூட்டிங்கில் கவுண்டமணி பன்ன சேட்டை… கலகலப்பாக பேசிய அர்ஜுன் – வைரலாகும் வீடியோ
ஜெய்ஹிந்த்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 19 Mar 2026 18:17 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 1994-ம் ஆண்டு மே மாதம் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ஜெய்ஹிந்த். இந்தப் படத்தை இயக்குநர் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் எழுதி இயக்கி இருந்தார். மேலும் அவரே இந்தப் படத்தில் நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவருக்கு ஜோடியாக நடிகை ரஞ்சிதா நாயகியாக நடித்து இருந்தார்.இவர்களுடன் இணைந்து நடிகர்கள் கவுண்டமணி, மனோரமா, செந்தில், மேஜர் சுந்தர்ராஜன், கல்யாண் குமார், தேவன், ராஜேஷ், பண்டரி பாய், சந்திரசேகர், வைஷ்ணவி, சாருஹாசன், சொக்கலிங்க பாகவதர். இடிச்சபுலி செல்வராஜ், விமல்ராஜ், பயில்வான் ரங்கநாதன், கௌதம், கமலா கமேஷ், குழந்தை விசித்ரா, கவிதாஸ்ரீ, ராஜு சுந்தரம் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான மிஷ்ரி எண்டர்பிரைசஸ் சார்பாக தயாரிப்பாளர் எஸ். செயின் ராஜ் தலேடா தயாரித்து இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்று இருந்தது. மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் கவுண்டமணி செய்த சேட்டைகளை அர்ஜுன் பேட்டி ஒன்றில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஜெய்ஹிந்த் படத்தின் ஷூட்டிங்கில் கவுண்டமணி பன்ன சேட்டை:

அதன்படி அர்ஜூன் பேசியதாவது, ஜெய்ஹிந்த் படத்தில் ஒரு காட்சியில் வில்லன்கள் இருக்கும் இடத்தை மலை மேல் ஏறி சென்று காட்டுவேன். இதுதான் எதிரிகள் இருக்கும் இடம் என்று. அதற்கு கவுண்டமணி அதான் பாத்தாச்சுல வாங்க போலாம் என்று சொல்லுவார். அது படத்திலேயே இல்லாத வசனம். கவுண்டமணி கூறியது அங்கு இருந்தவர்கள் அனைவரையும் சிரிக்க வைத்தது என்று அர்ஜுன் பேசியுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… பவன் கல்யாணின் உஸ்தாத் பகத் சிங் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டா? ரசிகர்களின் கருத்து இதுதான்!

இணையத்தில் வைரலாகும் அர்ஜுன் பேச்சு:

Also Read… அஜித் குமாரின் 64-வது படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இல்லையா? வைரலாகும் தகவல்

Follow Us