இதுதான் எங்களுக்கு பண்டிகை நாள்… கருப்பு ரிலீஸ் தேதியை பார்த்ததும் கொண்டாடும் சூர்யா ரசிகர்கள்!
Karuppu Movie Release Date Announcement Viral On Social Media: தமிழ் சினிமா ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்தது சூர்யாவின் கருப்பு படத்தின் ரிலீஸ் எப்போது என்று. தற்போது தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகி பின்பு கதைகளின் நாயகனாக நடித்தது மட்டும் இன்றி தற்போது படத்தினை இயக்கவும் செய்து வருகிறார் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி. இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் கடந்த 2024-ம் ஆண்டு இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாக உள்ள 45-வது படத்தினை இயக்க ஒப்பந்தமானார். அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக படத்தின் பணிகள் நடைப்பெற்று வந்தது. இதில் படம் கடந்த 2025-ம் ஆண்டிலேயே கருப்பு படத்தின் வெளியீடு இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கபப்டவில்லை. மேலும் படம் தொடர்பான அப்டேட்கள் அவ்வபோது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
மேலும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நடித்துள்ளார். இவர்களின் கூட்டணி பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்று சேர்ந்துள்ள நிலையில் படத்தினை திரையரங்குகளில் பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவளுடன் எதிர்பார்த்தூ காத்திருக்கின்றனர். மேலும் இவர்களுடன் இணைந்து இந்தப் படத்தில் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். தொடர்ந்து இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.




மே மாதம் வெளியாகும் சூர்யாவின் கருப்பு படம் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
இந்த நிலையில் கடந்த ஆண்டு படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேட்டி ஒன்றில் பேசிய போது கருப்பு படம் நிச்சயமாக பண்டிகை நாளில் வெளியாகும் என்று தெரிவித்து இருந்தார். இதன் காரணமாக படம் கடந்த தீபாவளி பண்டிகைக்கே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை. தொடர்ந்து படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அப்போது வெளியாகவில்லை.
ஆனால் தற்போது படம் வருகின்ற 14-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்று கருப்பு படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த செய்தியைக் கேட்ட ரசிகர்கள் கருப்பு படம் வெளியாகும் நாள் தான் தங்களுக்கு பண்டிகை என்று கொண்டாடி வருகின்றனர்.
Also Read… ஜன நாயகன் படத்திற்கு பிறகு எச். வினோத்தின் அடுத்த ப்ளான் இதுதானா? வைரலாகும் தகவல்
கருப்பு படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
The announcement you all have been waiting for 🔥#Karuppu in theatres – on May 14th, 2026.@Suriya_offl @trishtrashers @RJ_Balaji @dop_gkvishnu @SaiAbhyankkar @prabhu_sr #Indrans @natty_nataraj #Swasika @SshivadaOffcl #SupreethReddy #AnaghaMayaRavi #VikramMor @kalaivananoffl… pic.twitter.com/9BuYmY7Eo8
— DreamWarriorPictures (@DreamWarriorpic) March 18, 2026
Also Read… தமிழில் ரீ மேக் செய்யப்படும் தெலுங்கில் சூப்பர் ஹிட் அடித்தப் படம் – ஆர்.கே.சுரேஷ் சொன்ன அப்டேட்