இதுவரை ஏன் வாய் திறக்கவில்லை? – முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கேள்வி
Thiruparankundram Deepam Row : திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தால் மாநில அரசின் உரிமைகளும் நமது பல்லாண்டுகால மரபுமுறைகளும் பறிபோனதைப் பற்றி, தமிழ்நாடு முதலமைச்சர் ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, நவம்பர் 28 : உச்சநீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றத்தில் நவம்பர் 28, 2026 இன்று மாலை 5 மணியளவில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபம் ஏற்றப்பட்டது. இதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் ஆதரவு தெரிவித்த நிலையில் திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிப்பு தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் (MK Stalin), திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பாக முதல்வர் விஜய்க்கு கேள்வி எழுப்பியுள்ளார். அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்
கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு கடந்த நவம்பர் 24, 2026 அன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. ஆனால் கார்த்திகை தீபம் அன்று வழக்கமாக ஏற்றப்படும் உச்சி பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றப்பட்டது. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் நவம்பர் 28, 2026 இன்று மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டனர்.
இதையும் படிக்க : வெற்றிவேல் முருகனுக்கு… திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டது! – விண்ணை முட்டிய பக்தர்கள் கோஷம்!




அதன் படி இன்று மாலை தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டது. இதனையடுத்து பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகராஎன கோஷங்கள் எழுப்பினர். பாஜகவினர் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர். இந்த நிலையில் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் முதல்வர் விஜய்யிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் தனது பதிவில், திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தால் மாநில அரசின் உரிமைகளும் நமது பல்லாண்டுகால மரபுமுறைகளும் பறிபோனதைப் பற்றி, தமிழ்நாடு முதலமைச்சர் ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார்.
முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கேள்வி
மேலும் அவர் தனது பதிவில், சனி, ஞாயிறு வார இறுதி விடுறை முடிந்து திங்கள்கிழமை வந்தால் தான் பேசுவாரா? அதிகாரிகளை முன்னிறுத்தி ஒளிந்துகொண்டு, அவர்களைப் பழி சுமக்க வைத்து, ஒரு மாவட்ட ஆட்சியரை இன்று கல்தூணுக்கு எண்ணெய்ச் சட்டி தூக்க வைத்ததுதான் இப்போதுள்ள முதலமைச்சரின் நிர்வாகத் திறன்! முதலமைச்சரானால் தமிழ்நாடு காப்பாற்றப்படும் என இரவோடு இரவாகத் தாவிச் சென்ற கட்சிகள், அவரிடம் எந்த பொறுப்புணர்வு மற்றும் கருத்தும் கோராமல், தி.மு.க.வைப் பார்த்து மட்டும் கேள்வி எழுப்புவது ஏன்? என் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க : ஏற்காடு மலைப்பாதை பள்ளத்தில் 12 வயது சிறுமி சடலம் மீட்பு – கொலை செய்யப்பட்டாரா? துணிக்கடைகளில் விசாரணை தீவிரம்
நீதித்துறையின் வரம்பு மீறலால் மாநில அரசுகளின் உரிமைகள் பறிபோவதைத் தடுத்திட அரைநூற்றாண்டு காலமாகப் பலப்பல போராட்டங்களை நடத்திக் களம் கண்ட தி.மு.க.வுக்கு இதுகுறித்து யாரும் பாடம் எடுக்க வேண்டியது இல்லை! ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, மாநில உரிமைகளையும் மதநல்லிணக்கத்தையும் நிலைநாட்டிடத் தி.மு.க. என்றென்றும் உறுதியாகத் தொடர்ந்து போராடும்! வெல்லும்! என தெரிவித்துள்ளார்.