AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

திருப்பரங்குன்றம் மலையில் 50 பேர்களுக்கு மட்டுமே அனுமதி – நீதிபதிகள் அறிவிப்பு

Thiruparankundram Deepam Row : உச்சநீதிமன்ற உத்தரவின்படி நவம்பர் 28, 2026 இன்று மாலை 5 மணிக்கு திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் நிகழ்வைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வந்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் மலையில் 50 பேர்களுக்கு மட்டுமே அனுமதி – நீதிபதிகள் அறிவிப்பு
திருப்பரங்குன்றம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 28 Nov 2026 15:37 PM IST

மதுரை, நவம்பர் 28 : திருப்பரங்குன்றம் (Thiruparankundram) மலை ஏற 50 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி எனவும் உரிய அனுமதி பெற்ற 50 பேரும் நவம்பர் 28, 2026 இன்று 3 மணிக்குள் மலை ஏறலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் இதர பொதுமக்கள், பக்தர்களுக்கு மலை ஏற அனுமதி இல்லை எனவும் சட்டம்-ஒழுங்கை காக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

திருப்பரங்குன்றம் மலையில் 50 பேர்களுக்கு மட்டுமே அனுமதி

உச்சநீதிமன்ற உத்தரவின்படி நவம்பர் 28, 2026 இன்று மாலை 5 மணிக்கு திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் நிகழ்வைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வந்துள்ளனர். இந்த நிலையில் அனுமதிபெற்ற 50 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : தொகுதி மறுவரையறை ஆதரவு.. “தமிழிக உரிமையை காப்பாற்றியுள்ளோம்”.. மு.க.ஸ்டாலின் விளக்கம்!!

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், தீபத்தூண் தயார் செய்யப்பட்டு வருகிறது. காவல்துறையினரின் பலத்த பாதுகாப்பையும் மீறி திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்றுவதை காண மலை உச்சிக்குச் சென்ற பக்தர்களை கீழே இறங்குமாறு CRPF வீரர்கள் அறிவுறுத்தினர். மலைக்குச் செல்ல 50 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், பக்தர்கள் அனைவரும் கீழே இறங்குமாறு வலியுறுத்தினர்.

சரச்சையின் பின்னணி

கடந்த நவம்பர் 24, 2026 கார்த்திகை தீபத்திருநாள் அன்று, திருப்பரங்குன்றத்தில் உள்ள கல் தூணில் தீபம் ஏற்றலாம் என்றும், இந்த முறை மட்டுமே இது பொருந்தும் எனவும் நவம்பர் 20, 2026 அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், கோயில் அறங்காவலர் குழு கல் தூணில் தீபம் ஏற்றாமல், எப்போதும் பின்பற்றும் நடைமுறையை செயல்படுத்தியது. அதன்படி, உச்சிப் பிள்ளையார் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

கடும் விமர்சனங்களை பெற்ற இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தவில்லை எனக் கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், கோயில் அறங்காவலர் குழுவை கலைத்து உத்தரவிட்டது. மேலும், இன்றைய தினம் மலை உச்சியில் உள்ள கல்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் எனவும், பக்தர்கள் மலையேற தடைவிதிக்கக் கூடாது என்றும் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. கல் தூணில் தீபமேற்றும் நடைமுறைகளை கவனிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழுவையும் அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதையும் படிக்க : தொகுதி மறுவரையறை: “திமுகவின் ஆதரவு நிலைப்பாடு பெரும் அதிர்ச்சியை தருகிறது”.. திருமாவளவன் கவலை!!

இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றி திருப்பரங்குன்றம் மலை உச்சியில், சிக்கந்தர் பாதுஷா தர்ஹாவின் அருகே இருக்கும் கல் தூணில் இன்று தீபம் ஏற்றப்படுகிறது. இந்த நேரத்தில் இஸ்லாமியர்களும் தர்ஹாவில் தொழுகைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

Follow Us