அஜித்தின் ரசிகர்களுக்காக மாஸ் காட்சி.. டேர் டெவில் படத்தில் சர்ப்ரைஸான சம்பவம் செய்த இயக்குநர்!
Ajith Kumar Action Stunts: பேமஸான நடிகராக மற்றும் கார் ரேஸராக இருந்துவருபவர் அஜித் குமார். இவரின் நடிப்பிலும், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்திலும் உருவாகிவரும் புதிய படம்தான் டேர் டெவில். இப்படத்தில் தற்போது மாஸான காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளதாக இணையத்தில் தகவல்கள் வைரலாகிவருகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தென்னிந்திய திரைத்துறையில் சிறந்த இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran). இவரின் இயக்கத்தில் அஜித் குமார் (Ajith Kumar) முதல் விஷால் (Vishal) வரை பல்வேறு நட்சத்திர நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர். இறுதியாக இவரின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly). கடந்த 2025ம் ஆண்டில் வெளியான இந்த படம் மக்கள் மத்தியில் இவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்தது. இந்த படத்தில் அஜித் குமார் ஹீரோவாக நடித்திருந்த நிலையில், அவரின் நடிப்பில் சினிமாவில் அதிகமாக வசூலை பெற்ற முதல் படமாக இது அமைந்திருந்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, அஜித் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரனின் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படம்தான் டேர் டெவில் (Dare Devil Movie).
இதில் அஜித் ஹீரோவாக நடிக்க, பல்வேறு நட்சத்திர நடிகர்களும் இணைந்து நடித்துவருகிறார்கள். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், ரசிகர்களுக்காக சர்ப்ரைஸான விஷயம் ஒன்றை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் செய்துள்ளாராம்.




இதையும் படிங்க: பிக்பாஸில் யார் வீட்டார் உள்ளே வரும்போது பயந்தீர்கள்… போட்டியாளர்கள் ஓபன் டாக்!
டேர் டெவில் படத்தில் ரசிகர்களுக்காக சர்ப்ரைஸான விஷயம் செய்த ஆதிக் ரவிச்சந்திரன்:
இந்த டேர் டெவில் படத்தின் ஷூட்டிங்கில் சமீபத்தில், அஜித் குமார் மற்றும் உன்னி முகுந்தன் இருவருமே ஒரு பிரமிக்க வைக்கும் சண்டைக் காட்சியில் நடித்துள்ளார்களாம். இந்த காட்சியானது சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு அஜித் குமார் இவ்வளவு வேகத்துடன் காணப்பட்டதில்லை என்பதால், ஸ்டண்ட் குழுவினர் பிரமித்துப்போனதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மணிரத்னத்தின் இஞ்சி வெல்லம் படத்தின் கதை இதுதானா? வைரலாகும் தகவல்
தனது நெகிழ்வுத் தன்மை மற்றும் ஆற்றல் நிறைந்த சக்தியால் அவர் அனைவரையும் திகைக்க வைத்துள்ளார் என கூறப்படுகிறது. அதனால் உன்னி முகுந்தன் மற்றும் அஜித் இடையே சிறப்பான காட்சிகள் இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
டேர் டெவில் திரைப்படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
A glimpse of the #DareDevil Pooja Ceremony! 🎬
#AjithKumar #Daredevil #ShaliniAjithKumar #DareDevilPooja@Braveheartsprod @Adhikravi @anirudhofficial
@Iamunnimukundan
@sreeleela14
@rparthiepan @suneeltollywood
@SureshChandraa @AbinandhanR @editorvijay @supremesundar #Subbhunaarayan @itsanuvardhan @kayoas13 @valentino_suren @Donechannel1 @AbdulNassarOffl @AMBANINSK @riseandroar_inc @directorsiva @ARMurugadoss @vp_offl @dirsaran #DirectorSelva #RajKapoor #HVinoth #Vijay #ChozhaPonnurangam @SathyaJyothi @theVcreations @gkmtamilkumaran @iamVikramPrabhu @shamleeofficial @aktxt @richardrishi— Suresh Chandra (@SureshChandraa) November 6, 2026
அஜித் குமாரின் இந்த டேர் டெவில் திரைப்படத்தில் அவருடன், ஸ்ரீலீலா, உன்னி முகுந்தன், ஆர்.பார்த்திபன், பிரபு, சுனில், ரெட்டின் கிங்ஸ்லீ மற்றும் பல்வேறு நடிகர்கள் இணைந்து நடித்துவருவதாக கூறப்படுகிறது. மேலும் கன்னட நடிகர் சிவராஜ்குமார் இப்படத்தில் மெயின் வில்லன் வேடத்தில் நடிக்கவைக்க பேசப்பட்டுவருவதாக கூறப்படுகிறது.