AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மணிரத்னத்தின் இஞ்சி வெல்லம் படத்தின் கதை இதுதானா? வைரலாகும் தகவல்

Inji Vellam Movie Story Update | இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் இஞ்சி வெல்லம். இந்தப் படத்தின் கதை என்ன என்பது குறித்து சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

மணிரத்னத்தின் இஞ்சி வெல்லம் படத்தின் கதை இதுதானா? வைரலாகும் தகவல்
இஞ்சி வெல்லம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 28 Nov 2026 15:40 PM IST

தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளில் உச்ச இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் மணிரத்னம் (Director Manirathnam). தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் உள்ள முன்னணி நடிகர்கள் பலர் இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ் மொழியில் அதிக அளவில் இயக்குநர் மணிரத்னம் படங்களை இயக்கி இருந்தாலும் அவர் இயக்குநராக அறிமுகம் ஆனது என்னவோ கன்னட மொழியில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பான் இந்திய மொழிகளில் பிசியான இயக்குநராக வலம் வரும் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் அடுத்ததாக தமிழ் மொழியில் வெளியாக உள்ள படம் இஞ்சி வெல்லம். இந்தப் படத்தி படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.

மேலும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்து வரும் நிலையில் நடிகை சாய் பல்லவி நாயகியாக நடித்து வருகிறார். ரொமண்டிக் ட்ராமா பாணியில் உருவாகி வரும் இந்த இஞ்சி வெல்லம் படம் வருகின்ற ஜனவரி மாதம் 29-ம் தேதி 2027-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தின் கதை தொடர்பான அப்டேட்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

மணிரத்னத்தின் இஞ்சி வெல்லம் படத்தின் கதை இதுதானா?

இஞ்சி வெல்லம் திரைப்படம் மிகச் சிறந்த கதையைக் கொண்டிருப்பதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. இக்கதை இரட்டையர்களை மையமாகக் கொண்டது. விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி நடிக்கும் கதாபாத்திரங்கள், பிளஸ் டூ படிக்கும் காலத்தில் காதலித்து, பிற்காலத்தில் திருமணம் செய்துகொள்கிறார்கள். இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளே அந்த இரட்டையர்கள். மேலும், இந்தப் படம் நிஜ வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மணிரத்னத்தின் திரை வாழ்க்கையிலேயே மிகவும் யதார்த்தமான படங்களில் ஒன்றாக இது இருக்கும் என்றும், இதில் மிகைப்படுத்தப்பட்ட கற்பனை அம்சங்கள் மிகக் குறைவாகவே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read… என்ன தூக்கி வெச்சதே இல்லல நீ.. டிடிஃஎப் வாசனிடம் பொஸசிவ்-ஆன அவரின் மனைவி – ப்ரோமோ!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… அந்தப் பெண்ணை என்னால் மறக்க முடியவில்லை.. மகாராஜா பட நடிகை சாச்சனாவை பாராட்டிய ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ்!

Follow Us