கமல் ஹாசன் – ரஜினிகாந்த் இணைந்து நடிக்கும் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்? வைரலாகும் தகவல்
Kamal Haasan and Rajinikanth movie shooting update | தமிழ் சினிமா ரசிகர்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்து இருந்த காம்போ நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் இருவரும் இணைந்து நடிப்பது தான். இந்தப் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக உச்ச நடிகர்களாக போட்டிப் போட்டு நடித்துக் கொண்டு வருபவர்கள் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன். நடிகர் கமல் ஹாசன் தனது 6 வயதிலேயே நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகம் ஆனா நடிகர் கமல் ஹாசன் பிறகு நாயகனாக நடிக்கத் தொடங்கி தொடர்ந்து படங்களில் நாயகனாக நடித்து வந்தார். தமிழ் சினிமாவில் நடிகர் கமல் ஹாசன் முன்னணி நாயகனாக வலம் வரும் போது அவரது படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார் நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth). அதன்படி அவர் கமல் ஹாசனின் படங்களில் அவரது நண்பராகவும், வில்லனாகவும் நடித்து வந்த ரஜினிகாந்த் அவருடன் போட்டிப் போடும் நாயகனாக தன்னை உருவாக்கிக் கொண்டார்.
தொடர்ந்து நடிகர்கள் கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் போட்டி நடிகர்களாக தமிழ் சினிமாவில் மாறினர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் இணைந்து தமிழ் மொழியில் படங்களில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இவர்கள் இருவரும் இணைந்து எப்போது நடிப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் இவர்கள் இருவரும் இணையும் படம் தொடர்பான அப்டேட் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.




கமல் – ரஜினி இணைந்து நடிக்கும் பட ஷூட்டிங் எப்போது தொடங்கும்?
இந்த நிலையில் இந்தப் படம் குறித்து திருப்பூர் சுப்ரமணியம் சமீபத்திய பேடி ஒன்றில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் அவர் பேசியதாவது, தர்மன் திரைப்படத்தை 2027-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. தர்மன் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், KH x RK திரைப்படத்திற்கான பணிகளைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளனர். இந்தப் படம் உறுதியாக உருவாகவுள்ளது. இதன் படப்பிடிப்பு 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் தொடங்க வாய்ப்புள்ளது.
இதற்கிடையில், கமல்ஹாசன் தனது சாண்டியர் திரைப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்குவார். அதேபோல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்மன் படத்தில் தனக்கு எஞ்சியுள்ள காட்சிகளை முடித்துக்கொடுப்பார். KH x RK திரைப்படம் நிச்சயமாக உருவாகும்; இந்தப் படம் கைவிடப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை. ரெட் ஜெயண்ட் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. 2027-ல் படப்பிடிப்பு தொடங்கி, 2028 பொங்கல் பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
Also Read… ஒரே கொஞ்சல்ஸ் தான்.. பிக் பாஸில் முனியம்மாளை பார்க்கவந்த குடும்பம் – ப்ரோமோ இதோ!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Dharman is planning for an April 14, 2027 theatrical release. After completing the shoot for #Dharman, they are planning to begin work on #KHxRK. The film is definitely happening, with shooting likely to commence in February or March 2027.
#KamalHassan will also begin shooting for his #Sandiyar movie, while #SuperstarRajinikanth has some portions left to shoot for #Dharman, which he will complete.
#KHxRK will 100% happen. There is no question of the project being dropped. Red Giant Studios is definitely taking up the film, with shooting set to commence in 2027 and a hopeful theatrical release planned for Pongal 2028.
— Tiruppur Subramaniam
https://t.co/J3pkHoplJo— Movies Singapore (@MoviesSingapore) November 27, 2026