AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அந்தப் பெண்ணை என்னால் மறக்க முடியவில்லை.. மகாராஜா பட நடிகை சாச்சனாவை பாராட்டிய ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ்!

Tom Hanks Praises Tamil Film Maharaja: ஹாலிவுட் சினிமாவில் இயக்குநர் மற்றும் நடிகராக பல சூப்பர் ஹிட் படங்களில் பணியாற்றியவர் டாம் ஹாங்க்ஸ். இவர் ஹாலிவுட் சினிமாவில் பிரம்மாண்ட நடிகர்களில் ஒருவர் என்ற நிலையில், தமிழில் 2024ல் வெளியான விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தை பாராட்டியுள்ளார். மேலும் குறிப்பாக நடிகை சாச்சனா நமிதாஸையும் பாராட்டியிருக்கிறார்.

அந்தப் பெண்ணை என்னால் மறக்க முடியவில்லை.. மகாராஜா பட நடிகை சாச்சனாவை பாராட்டிய ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ்!
டாம் ஹாங்க்ஸ் தமிழ்த் திரைப்படமான மகாராஜாவைப் பாராட்டினார்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 26 Nov 2026 20:32 PM IST

ஹாலிவுட் சினிமாவில் பிரம்மாண்டமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் டாம் ஹாங்க்ஸ் (Tom Hanks). இவர் அமெரிக்க மொழியில் பல திரைப்படங்களில் முன்னை நடிகர் மற்றும் இயக்குநராக அப்பணியாற்றியுள்ளார். இவர் கடந்த 1980ம் ஆண்டுகளில் இருந்து ஹாலிவுட் சினிமாவில் படங்களில் பணியாற்றிவருகிறார். இவரின் நடிப்பில் மீ இஃப் யு கேன் (Me if you can), தி டெர்மினல் (The Terminal), தி பசிஃபிக் (The Pacific), கேப்டன் பில்ஸ், அப்பலோ 13 உள்ளிட்ட பல திரைப்படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார். இவ்வாறு பிரபலமாக பலா படங்களில் நடித்து சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றுள்ளார்.

இவ்வாறு பழம்பெரும் பிரபலமான ஹாலிவுட் நடிகர், தமிழில் 2024ம் ஆண்டில், இயக்குநர் நித்திலன் சாமிநாதன் (Nithilan Saminathan) வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்த மகாராஜா (Maharaja) திரைப்படத்தை பாராட்டியிருக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதியின் (Vijay Sethupathi) மகளாக நடித்த சச்சனா நமிதாஸின் (Sachana Namidass) நடிப்பை பாராட்டி அவர் பேசியுள்ளார். இது தொடர்பான பதிவுகள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: உன்னை நீயே.. விஜய்குமாரின் அறிவு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்!

மகாராஜா பட சாச்சனா நமிதாஸை பாராட்டிய ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ்:

ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ், மகாராஜா திரைப்படத்தை பார்த்துள்ளார். அவர் அதை பார்த்திருந்த நிலையில், “அந்தப் பெண்ணை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை… என்னவொரு அற்புதமான நடிகை..என்னால் அதைச் செய்ய முடியும் என்று நான் நினைக்கவில்லை.. நான் அந்த ஆளைக் கொன்றிருப்பேன்” என அதில் அவர் நடிகை சாச்சனா நமிதாஸையும் மற்றும் மகாராஜா திரைப்படத்தை பார்த்த அவரின் ஆர்வத்தையும் தெரிவித்துள்ளார். இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் பரவிவருகிறது.

மகாராஜா திரைப்படத்தை ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் பாராட்டியதாக வைரலாகும் பதிவு:


கடந்த 2024ம் ஆண்டில் தமிழில் இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருந்த திரைப்படம்தான் மகாராஜா. இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க, அவரின் 50வது படமாக வெளியானது. இதில் திவ்யா பாரதி, சாச்சனா நமிதாஸ், அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இணைந்து நடித்திருந்தனர்.

இதையும் படிங்க: தனுஷ் 56 படம் குறித்து இயக்குநர் கொடுத்த சூப்பர் அப்டேட்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

இந்த படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக சச்சினா நடித்திருந்த நிலையில், இவருக்கு சிறந்த துணை நடிகைக்காக 2024ம் ஆண்டில் இந்திய தேசிய விருதும் இப்படத்திற்காக கிடைத்திருந்தது. இப்படமானது தமிழில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்த நிலையில், ஆங்கிலம், சைனீஸ் போன்ற மொழிகளிலும் வெளியிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இப்படத்தை பார்த்த ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் அதை பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us