Arivu: உன்னை நீயே.. விஜய்குமாரின் அறிவு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்!
Unnai Neeye Song: தமிழில் உறியடி என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் பிரபலமானவர் நடிகர் விஜய்குமார். இவர் சினிமாவில் வெறும் நடிகராக மட்டுமல்லாமல், இயக்குநராகவும் படத்தை இயக்கி சினிமாவில் நுழைந்தார். இவரின் நடிப்பில் அறிவு என்ற படமானது புதிதாக உருவாகிவரும் நிலையில், அதற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். அந்த வகையில் இப்படத்தின் முதல் பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்துள்ளார்.
கோலிவுட் சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக கருதப்படுபவர் உறியடி விஜய் குமார் (Uriyadi Vijay Kumar). இவர் கடந்த 2016ம் ஆண்டில் தமிழில் வெளியான உறியடி (Uriyadi Movie) என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். இந்த படத்தில் அவர் நடிகர், இயக்குநர், எழுத்தாளர், தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பு என எல்லாவற்றையும் இவரே செய்திருந்தார். இந்த படமானது 90ஸ் காலகட்டத்தில் நடந்த கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்ட நிலையில், நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதன் பிறகு உறியடி 2, ஃபைட் கிளப் மற்றும் எலக்ஷன் போன்ற படங்களில் நாயகனாக நடித்திருந்தார். இந்த வரிசையில் இவரின் நடிப்பில் 5வது திரைப்படமாக உருவாகியுள்ளதுதான் அறிவு (Arivu Movie). இந்த படத்தை பிரபல இயக்குநர் சத்யசிவா (Director Sathyasiva) இயக்கியுள்ள நிலையில், விஜய் குமார் ஹீரோவாக நடித்துள்ளார்.
இப்படமானது கல்வி மற்றும் அதை கற்கும் தாழ்த்தப்பட்ட சமூதாயத்திற்கு நடக்கும் பிரச்சனை குறித்த கதையில் இப்படம் உருவாகியுள்ளது. இசையமைப்பாளர் டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கும் நிலையில், “உன்னை நீயே” (Unnai Neeye Song) என்ற முதல் பாடல் வெளியாகியுள்ளது. இதை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.




இதையும் படிங்க: தனுஷ் 56 படம் குறித்து இயக்குநர் கொடுத்த சூப்பர் அப்டேட்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
அறிவு திரைப்படத்தின் உன்னை நீயே என்ற பாடலை பகிர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான்:
Best of luck team ….
It’s a pleasure to present The First Single #UnnaiNeeye from #Arivu! 💥
My heartfelt wishes to the entire team.
Song Link 🔗: https://t.co/Z45XbTG3Rq
#Arivu from December 11 in Theatres Worldwide 🎞️💥
Produced By @movietronindia
@j_saivinoth @jksaiprabhuDirected By @Sathyasivadir
A @immancomposer Musical
@Vijay_B_Kumar @anandhiactress
@dop_dillraaju @offl_aravind @balaprasad006 @Vetrekrishnan @NikeshRs @teamaimpr @vanquishmedia__ @starmusicindia #digitallypowerful#ArivufromDecember11 #Movietron #Vijayakumar
#KayalAnandhi— G.V.Prakash Kumar (@gvprakash) November 26, 2026
அறிவு திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது:
இந்த அறிவு திரைப்படத்தில் நடிகர் விஜய் குமார் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை கயல் ஆனந்தி நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ஏ.எம்.விஜயன், சிங்கம்புலி, தீபா சங்கர், பிக் பாஸ் சுபிக்ஷா மற்றும் பல்வேறு நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இதை ஃப்ரீடம், கழுகு போன்ற படங்களை இயக்கிய சத்யசிவா இந்த திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். இந்த படம் முழுக்க கல்வி மற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாயம் போன்றவற்றை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆர்யாவின் ஹலோ காதல் திரைப்படத்திலிருந்து வெளியான மஜா மஜா வீடியோ பாடல்!
இப்படத்தின் முதல் பார்வையை நடிகர் சூர்யா பகிர்ந்து சிறப்பான பாராட்டை தெரிவித்திருந்தார். அந்த விதத்தில் இப்படமானது தற்போது வெளியீட்டிற்கு தயாராகியுள்ள நிலையில், அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகிவருகிறது. வரும் 2026ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதியில் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அந்த விதத்தில் தற்போது இதன் முதல் சிங்கிள் வெளியாகி இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.