AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

குழந்தைகளை காட்டில் விட்டு சென்றனரா பெற்றோர்? வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்த கலெக்டர்!

Krishnagiri 2 Children In Forest : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2 குழந்தைகளை பெற்றோர் காட்டில் விட்டு சென்றதாக வீடியோ காட்சிகள் வைரலான நிலையில் , அது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் குமார் விளக்கம் அளித்து உள்ளார் .

குழந்தைகளை காட்டில் விட்டு சென்றனரா பெற்றோர்? வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்த கலெக்டர்!
காட்டில் விடப்பட்டதாக கூறப்படும் சிறுவர்கள்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 26 Nov 2026 17:49 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரு குழந்தைகளை அவர்களது பெற்றோர் காட்டுப்பகுதியில் விட்டு சென்றதாக கூறப்படும் சம்பவத்தில் வீடியோ காட்சிகள் வைரலான நிலையில், அதற்கு மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். சிறுவர்களான இவர்களை பிறந்தநாளுக்கு கேக் வாங்கி தருவதாக அழைத்துச் சென்று கிருஷ்ணகிரி காட்டுப்பகுதியில் விட்டு சென்றதாக கூறப்படுகிறது. அந்த சிறுவர், சிறுமி இருவரும் இரவு முழுவதும் காட்டுப்பகுதிகள் இருந்ததாக கூறப்படுகிறது. மறுநாள் அதிகாலையில் காட்டை விட்டு வெளியேறிய சிறுவர், சிறுமியை பார்த்த ஒரு நபர் அவர்களிடம் விசாரித்துள்ளார்.

நடு காட்டில் இரு குழந்தைகள் விடப்பட்டனாரா

அப்போது, பிறந்தநாள் கேக் வாங்கி தருவதாக தனது பெற்றோர் அழைத்து வந்து இந்த காட்டுப்பகுதியில் விட்டு சென்றதாக தெரிவித்தனராம். அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞர் சிறுவர், சிறுமிகளை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஆள் நடமாட்டம் இல்லாத காட்டில் இரவு முழுவதும் சிறுவன், சிறுமி தனியார் பனியில் இருந்துள்ளனர் என்று அந்த இளைஞர் கூறுகிறார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரப்பப்பட்டு வந்தது. அந்த வீடியோவில், அந்த சிறுமியிடம் உனக்கு பிறந்த நாளா இன்று அந்த இளைஞர் கேள்வி எழுப்புகிறார். அதற்கு, அந்த சிறுமியும் பிறந்தநாள் தான் என்று பதிலளிக்கிறார்.

மேலும் படிக்க: ஊழலுக்கு எதிரான நடவடிக்கையால் சிலரின் பேஸ்மட்டம் ஆட்டம் கண்டுள்ளது..கல்வி விருது வழங்கும் விழாவில் முதல்வர் விஜய்!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் முக்கிய விளக்கம்

இந்த நிலையில், இந்த விவகாரம் பெரிதான நிலையில், இதற்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்த விளக்கத்தில், கெழமங்கலம் அருகே உள்ள நாராபனட்டியைச் சேர்ந்தவர்கள் குமார், சாந்தி தம்பதி. இவர்கள், கடந்த நவம்பர் 21- ஆம் தேதி ( சனிக்கிழமை) ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிக்கு கூலி வேலை பார்ப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது, தனது 6 வயது மகன் மற்றும் 3 வயது மகள் ஆகியோரை அவர்களது பாட்டி வீட்டில் விட்டு சென்றுள்ளனர். இந்த நிலையில், கடந்த நவம்பர் 23- ஆம் தேதி சாத்தநத்தம் பகுதியில் சிறுவன், சிறுமி ஆகியோர் தனியாக நின்றுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Anees (@aneescp_)

இந்த விவகாரத்தில் தவறான தகவலை பரப்ப வேண்டாம்

இதனைப் பார்த்த இளைஞர் அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். அதன் அடிப்படையில், அன்றைய தினமே போலீசார் அவர்களை மீட்டு பாட்டி மற்றும் அத்தையிடம் ஒப்படைத்துள்ளனர். எனவே, இந்த விவகாரத்தில் தவறான தகவலை பரப்ப வேண்டாம் என்று ஆட்சியர் தினேஷ்குமார் அறிவுறுத்தி உள்ளார்.

மேலும் படிக்க: எத்தனை முறை தோற்றாலும் தோற்பேன்! ஆனால் பொது வேட்பாளராக போட்டியிட யார் ஆதரவையும் கேட்கமாட்டேன்.. சீமான் ஆவேசம்!

Follow Us