AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

திரையரங்கில் வெளியாவதற்கு முன்பே சாதனைப் படைத்த அறிவு திரைப்படம் – கொண்டாட்டத்தில் படக்குழு

Arivu Movie Selected For Screening At International Film Festival of India | நடிகர் உறியடி விஜயகுமார் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் அறிவு. இந்தப் படம் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது.

திரையரங்கில் வெளியாவதற்கு முன்பே சாதனைப் படைத்த அறிவு திரைப்படம் – கொண்டாட்டத்தில் படக்குழு
அறிவு படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 15 Nov 2026 13:03 PM IST

தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி பிறகு இயக்குநராகவு தயாரிப்பாளராகவும் ஆவது. அல்லது இயக்குநராக அறிமுகம் ஆகி பிறகு நாயகனாகவும், தயாரிப்பாளராகவும் ஆவது என்று பலர் செய்து பார்த்து இருப்போம். ஆனால் சினிமாவில் அறிமுகம் ஆகும் தனது முதல் படத்திலேயே அந்தப் படத்தின் நாயகனாகவு, இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், பின்னணி இசைக்கலைஞராகவும் அறிமுகம் ஆனவர் உறியடி விஜயகுமார். இவரை உறியடி விஜயகுமார் என்று அடையாளப் படுத்த காரணம் அவரது முதல் படம் உறியடி என்பதாலே ஆகும். அதன்படி இவர் அறிமுகம் ஆன முதல் படமே தமிழ் சினிமா ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக அதிக அளவில் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து பெரிய அளவில் சினிமா வாய்ப்புகள் இவருக்கு குவியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்து மூன்று ஆண்டுகளுக்கு எந்த படமும் இவர் செய்யவில்லை.

அதனைத் தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு தானே இயக்கி நாயகனாக உறியடி 2 படத்தில் நடித்தார். இந்தப் படமும் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து மற்ற இயக்குநர்களின் படங்களில் நடிக்கத் தொடங்கினார் விஜயகுமார். அதன்படி வரிசையாக ஃபைட் கிளப் மற்றும் எலெக்‌ஷன் ஆகியப் படங்கள் தற்போது வரை வெளியாகி உள்ளது.

திரையரங்கில் வெளியாவதற்கு முன்பே சாதனைப் படைத்த அறிவு திரைப்படம்:

மேலும் நடிகர் விஜய்குமார் நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் அறிவு. இந்தப் படத்தை இயக்குநர் சத்யசிவா எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் விஜயகுமார் உடன் இணைந்து நடிகர்கள் கயல் ஆனந்தி, ஐ.எம்.விஜயன், சிங்கம்புலி, தீபா சங்கர், சுபிக்ஷா குமார், ஜோஷிகா மாயா மற்றும் இஸ்மத் பானு ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகின்ற 11-ம் தேதி டிசம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே ஒரு முக்கியமான சாதனைப் படைத்துள்ளது. அது என்ன என்றால் இந்த அறிவு படம் இந்தியாவில் மிகவும் பிரமாண்டமாக நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது. இது படக்குழுவினர் இடையே அதிக அளவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… அந்தப் படம் வெற்றியடையுமா என்று பயந்துகொண்டே இருந்தேன் – இயக்குநர் சுந்தர் சி

நடிகர் விஜயகுமார் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… நடிகர் கார்த்தியின் மார்ஷல் படத்தின் தற்போதைய நிலை என்ன? வைரலாகும் தகவல்

Follow Us