வாய்சொல் வீரன்… சக போட்டியாளர்களின் அதிருப்தியை பெற்ற ஜேசன் – வைரலாகும் புரோமோ வீடியோ!
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த 10-வது வாரம் தலைவராக ஜேசன் தேர்வாகி இருந்தார். இந்த வாரம் முழுவதும் அவரது கேப்டன்ஸி எப்படி இருந்தது என்பது குறித்து போட்டியாளர்கள் வெளிப்படையாக பேசியுள்ளனர்.
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வரும் நிகழ்ச்சியாக உள்ளது பிக்பாஸ் தமிழ் (Bigg Boss Tamil). இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் வாரம் வாரம் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் இருந்து ஒருவர் வீட்டின் கேப்டனாக தேர்வாவார்கள். அவர் அந்த வாரம் முழுவதும் பிக்பாஸிற்கு அடுத்த நிலையில் இருந்து மற்ற போட்டியாளர்களை வழிநடத்த வேண்டும். அப்படி பிக்பாஸ் வீட்டில் கேப்டனாக தேர்வாகும் நபர்களுக்கு பிக்பாஸ் வீட்டில் ஒரு சலுகையும் வழங்கப்படும். அது என்ன என்றால் போட்டியாளர் கேப்டனாக தேர்வாகும் போது அந்த வாரம் மற்ற போட்டியாளர்கள் யாரும் அவரை எவிக்ஷனுக்காக நாமினேட் செய்ய முடியாது. இதன் காரணமாக கேப்டனாக தேர்வாகும் போட்டியாளர் தொடர்ந்து பிக்பாஸ் இரண்டு வாரங்கள் இருக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாகவே பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் வாரம் வாரம் கேப்டனாக தொடர்ந்து போட்டியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் தொடங்கியதில் இருந்தே பல முறை கேப்டன் பதவிக்காக போட்டியிட்டு இறுதியில் 10-வது வாரத்தில் கேப்டன் பதவியை பெற்றார் ஜேசன். இவர் மற்றவர்கள் கேப்டன் பதவியில் இருக்கும் போது பல கேள்விகளையும் சலசலப்பையும் ஏற்படுத்தி வந்த நிலையில் தனது கேப்டன்ஸியை சரியாக செய்தாரா என்பது குறித்து இன்றைய எபிடோடில் விஜய் சேதுபதி சக போட்டியாளர்களிடையே கேள்வி எழுப்பி உள்ளார்.




வாய்சொல் வீரன்… சக போட்டியாளர்களின் அதிருப்தியை பெற்ற ஜேசன்:
அதன்படி இன்று பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் 70வது நாளிற்கான முதல் புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அந்த புரோமோவில் இந்த வாரம் ஜேசனின் கேப்டன்ஸி எப்படி இருந்தது என்பது குறித்து போட்டியாளர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதன்படி கேப்டனாக தேர்வாவதற்கு முன்பு வீட்டில் உள்ள அனைவரிடம் தான் சிறந்த கேப்டனாக இருப்பேன் என்று கூறிவிட்டு சொன்ன எதையும் ஜேசன் செய்யவில்லை என்றும் அவர் ஒரு வாய் சொல் வீரனாக இருந்ததாக வாசன் கருத்து தெரிவிக்க. அவரைத் தொடர்ந்து பேசிய வினோத் பாபு மற்றும் முகேஷும் அதே கருத்தை வெளிப்படுத்தும் விதமாக பேசியுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… சாதிகாவின் ஃபேவரடிசம்.. தாறுமாறாக கேள்வி கேட்ட விஜய் சேதுபதி – ப்ரோமோ இதோ!
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day70 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/FNGkLsZk67
— Vijay Television (@vijaytelevision) November 15, 2026