AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Jailer 2: எவனுக்குமே இது புரியாதே… நோரா ஃபதேஹியின் நடனத்தில் ஜெயிலர் 2 படத்திலிருந்து வெளியான பிந்தாஸ் வீடியோ பாடல்!

Bindaas Video Song: தமிழில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில், 2026ம் ஆண்டில் அதிகமாக எதிர்பார்க்கப்பட்டுவந்த திரைப்படம்தான் ஜெயிலர் 2. இதை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்த நிலையில், கடந்த 2026ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதியில் வெளியானது. தற்போது ஓடிடியிலே இப்படம் ஸ்ட்ரீம் செய்யப்பட்டுள்ள நிலையில், இதிலிருந்து பிந்தாஸ் என்ற வீடியோ பாடலை படக்குழு பகிர்ந்துள்ளது.

Jailer 2: எவனுக்குமே இது புரியாதே… நோரா ஃபதேஹியின் நடனத்தில் ஜெயிலர் 2 படத்திலிருந்து வெளியான பிந்தாஸ் வீடியோ பாடல்!
பிந்தாஸ் வீடியோ பாடல்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 14 Nov 2026 20:30 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (Superstar Rajinikanth) நடிப்பில் இதுவரை மொத்தமாக 172 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் இறுதியாக வெளியாகி சுமார் ரூ 800 கோடிகளுக்கு மேல் வசூலில் சூறையாடிய திரைப்படம்தான் ஜெயிலர் 2 (Jailer 2 Movie). இதை கோலிவுட் பேமஸ் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் (Director Nelson Dilipkumar) இயக்கியிருந்த நிலையில், சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் கலாநிதிமாறன் தயாரித்திருந்தார். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லீட் ஹீரோவாக நடிக்க, 2023ம் ஆண்டில் வெளியான ஜெயிலர் படத்தின் தொடர்ச்சியாக அமைக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் ரஜினிகாந்துடன், ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன், சிவராஜ்குமார் (Shivarajkumar), மோகன்லால் (Mohanlal) மற்றும் ஹிருத்திக் ரோஷன் உள்ளிட்ட பல்வேறு ஸ்டார் நடிகர்களும் இணைந்து நடித்திருந்தனர்.

கடந்த 2026ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதியில் பான் இந்திய மொழிகளில் இப்படமானது திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இந்த படமானது வெளியாகி ஒரு மாதமான நிலையில், தற்போது அமேசான் பிரைம் ஓடிடியில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.அந்த விதத்தில் தற்போது இப்படத்தில் பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி நடனமாடிய பிந்தாஸ் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: புதிய மைல்கல்லை எட்டிய தாய் கிழவி படம்… மகிழ்ச்சியில் படக்குழு

ஜெயிலர் 2 படக்குழு வெளியிட்ட பிந்தாஸ் வீடியோ பாடல் குறித்த பதிவு:

ஜெயிலர் 2 படத்திற்கு ஓடிடியில் வரவேற்பு எப்படி இருக்கு:

ஜெயிலர் 2 படமானது அமேசான் பிரைம் வீடியோ மற்றும் சன் நெக்ஸ்ட் என இரு ஓடிடியிலும் கிடைக்கிறது. இந்த படத்தில் பல்வேறு நட்சத்திர நடிகர்களும் இணைந்து கேமியோ வேடத்தில் நடித்திருந்தனர். ஆனால படத்தின் நீளம் காரணமாக பல நடிகர்களின் கேமியோ காட்சிகள் பல நீக்கப்பட்டிருந்தது. நடிகர் சந்தானம், ஜெயிலர் 2 படத்தில் கேமியோ வேடத்தில் நடித்திருந்த நிலையில், அவரின் காட்சிகள் படத்திலிருந்து முழுமையாக நீக்கப்பட்டிருந்தது. இது ஓடிடியில் வெளியாகும் என பலரும் எதிர்பார்த்தனர்.

இதையும் படிங்க: சாதிகாவின் ஃபேவரடிசம்.. தாறுமாறாக கேள்வி கேட்ட விஜய் சேதுபதி – ப்ரோமோ இதோ!

பல நடிகர்களின் காட்சிகள் நீக்கப்பட்டிருந்த நிலையில், ஓடிடியில் அந்த காட்சிகள் எல்லாம் சேர்த்து நீட்டிக்கப்பட்ட காட்சிகளுடன் ஓடிடி வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தற்போது ஓடிடியில் இப்படம் திரையரங்குகளில் வெளியான அதே நேரம் கொண்டு வெளியாகியுள்ளது. எந்த நீட்டிக்கப்பட்ட காட்சிகள் மற்றும் எந்த கூடுதல் காட்சிகளும் ஓடிடியில் வெளியாகும் ஜெயிலர் 2 படத்தில் இல்லை. இது ஓடிடி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை கொடுத்திருந்தது என கூறலாம். ஓடிடியில் இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்ப்பே கிடைத்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us