தமிழகத்தில் அடுத்த பேரதிர்ச்சி.. ஒரே நாளில் 7 பெண்கள் உள்பட 12 பேர் மாயம்.. காவல் துறை என்ன செய்கிறது.. வலுக்கும் கேள்வி!
Cuddalore 12 People Missing : கடலூரில் ஒரே நாளில் பல்வேறு பகுதிகளில் 7 இளம் பெண்கள் உள்பட 12 பேர் காணாமல் போய் உள்ளனர். இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கா தவாக வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 7 இளம்பெண்கள் உள்பட 12 பேர் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடலூர் மாவட்டத்தில் நேற்று நாளில் 7 இளம் பெண்கள் உள்பட 12 பேர் காணாமல் போய் உள்ளதாக வெளியாகி வரும் தகவல்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காணாமல் போனவர்களில் 16 வயது சிறுவனும், 17 வயது சிறுமியும் இருப்பது இந்த சம்பவத்தின் தீவிரத்தை வெளிக்கொணர்கிறது.
ஒரே நாளில் 12 பேர் காணாமல் போகும் அளவுக்கு . . .
ஒரு மாவட்டத்தில் ஒரே நாளில் இவ்வளவு பேர் காணாமல் போகும் சூழல் உருவாகி இருப்பது சாதாரணமாக கடந்து செல்லும் விஷயம் கிடையாது. ஒவ்வொரு குடும்பமும் தங்களது குழந்தைகளையும், உறவினர்களையும் எங்கு தேடுவது என்று தெரியாமல் தவிக்கும் நிலையில், போலீசாரின் விசாரணை வேகமும், தேடுதல் நடவடிக்கையில் முன்னேற்றமும் மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டியது மிக மிக அவசியமானதாகும். ஒரே நாளில், 12 பேர் காணாமல் போகும் அளவுக்கு காவல்துறை கண்காணிப்பு பலவீனம் ஆகிவிட்டதா என்ற கேள்வி எழுகிறது.
மேலும் படிக்க: பூமிக்கு அடியில் பல கோடி மதிப்பிலான போதைப்பொருள்.. தவெக நிர்வாகி வீட்டில் அதிரடி சோதனை.. தோண்டி துளாவிய புலனாய்வு அதிகாரிகள்!




பெண்கள் பாதுகாப்பில் தவெக அரசின் வாக்குறுதி எங்கே
இளம்பெண்கள் மாயமான விவகாரத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்த தவெக அரசின் வாக்குறுதி எங்கே. சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன ஆனது. புகார் பதிவு செய்வதோடு போலீசாரின் கடமை முடிந்து விடாமல் காணாமல் போனவர்களையும் மீட்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு விசாரணையின் முன்னேற்றம் குறித்த தகவல்களை தெரிவிக்க வேண்டும். காணாமல் போன ஒவ்வொருவரும் பாதுகாப்பாக மீட்கப்படும் வரை அரசு பொறுப்பேற்குமா.
மக்கள் பாதுகாப்பு என்பது அரசின் அடிப்படை கடமை
காணாமல் போனவர்களின் குடும்பங்களின் கண்ணீருக்கு ஆறுதல் வார்த்தைகள் மட்டும் தீர்வாகாது. ஒவ்வொருவரையும் விரைந்து கண்டறிந்து அவர்கள் காணாமல் போனதற்கான பின்னணியே வெளிகொண்டு வந்து குற்றச்செயல் உறுதிப்படுத்தப்பட்டால் தொடர்புடைய நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மக்களின் பாதுகாப்பு என்பது அரசின் விளம்பரத்திற்கான வாசகம் கிடையாது. அது அரசின் அடிப்படை கடமையாகும். பெண்களும், குழந்தைகளும் அச்சமின்றி வாழ முடியாத சூழல் உருவானால் ஆட்சி நிர்வாகத்தின் பாதுகாப்பு வாக்குறுதிகளுக்கு என்ன மதிப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: மேகதாது அணைக்கு செக்.. முக்கிய பைலுடன் டெல்லி விரையும் முதல்வர் விஜய்.. பிரதமர் மோடியுடன் சந்திப்பு!