AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஜெம் வீரமணி வீட்டில் சிறுமி சடலம் புதைப்பு.. கற்பழித்து கொலையா? ஜேசிபி மூலம் தோண்டும் பணி தீவிரம்!

Gem Veeramani : சென்னையில் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி வீட்டில் சிறுமியின் சடலம் புதைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் படி, பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டும் பணியை எஸ்ஐடி குழுவினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

ஜெம் வீரமணி வீட்டில் சிறுமி சடலம் புதைப்பு.. கற்பழித்து கொலையா? ஜேசிபி மூலம் தோண்டும் பணி தீவிரம்!
ஜெம் வீரமணி வீட்டில் ஜேசிபி மூலம் தோண்டும் பணி
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 14 Nov 2026 14:41 PM IST

சென்னையில் சுமார் 10- க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணியை சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர் மீது, 8 போக்சோ வழக்குகள் மற்றும் 1 பாலியல் வன்கொடுமை வழக்கு என 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஜெம் வீரமணிக்கு உடனடியாக செயல்பட்டதாக அவரது உதவியாளர் சாந்தி, அவரது கணவர் மகேந்திரா சிம்ஹன், மற்றொரு உதவியாளர் பாலாஜி, கார் ஓட்டுனர் பாலா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், ஜெம் வீரமணியின் ஓட்டுனரிடம்  சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டிருந்தனர். இதில், அதிர்ச்சிகரமான தகவலை அவர் தெரிவித்தார்.

ஜெம் வீரமணி  சிறுமி சடலம் புதைத்ததாக வாக்குமூலம்

அதாவது, ஜெம் வீரமணி ஒரு சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து வந்து அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதில்,  திடீரென சிறுமிக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அந்த சிறுமி உயிரிழந்தார். இதனால், ஜெம் வீரமணி ராயப்பேட்டையில் உள்ள தனது வீட்டின் வளாகத்தில் உள்ள தென்னை, வாழை உள்ளிட்ட மரங்கள் இருக்கும் தோட்டத்தில் சுமார் 10 அடிக்கு குழி  தோண்டிசிறுமியின் சடலத்தை புதைத்ததாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் உடனடியாக ஜெம் வீரமணி வீட்டுக்கு விரைந்து சென்றனர்.

மேலும் படிக்க: செஞ்சி சிறுமி மாயமான விவகாரம்.. காட்டில் எலும்பு கூடுகள் மீட்பு.. அதிர்ச்சியில் பெற்றோர்.. நடந்தது என்ன!

ஜெம் வீரமணி வீட்டில் ஜேசிபி இயந்திரம் மூலம் தோண்டும் பணி

முன்னதாக, ஜெம் வீரமணியின் ஓட்டுநர் பாலாவின் முகத்தை கருப்பு துணியால் மூடியபடி தங்களது காரில் ராயப்பேட்டையில் உள்ள ஜெம் வீரமணி வீட்டுக்கு அழைத்து சென்றனர். அங்கு, அவரது வீட்டின் கதவை மூடிவிட்டு,  கார் ஓட்டுனர் பாலா குறிப்பிட்ட இடத்தில் ஜேசிபி இயந்திரம் மூலமாக மண்ணைத் தோண்டும் பணியில் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் ஈடுபட்டனர். சுமார் 10 அடி வரை ஆழமான குழி  தோண்டப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவரது வீட்டின் உள்ளே யாரும் அனுமதிக்கப்படவில்லை.

சிறுமி கற்பழித்து கொலை செய்து புதைக்கப்பட்டாரா

அத்துடன் குழி தோண்டப்பட்டு வரும் இடத்தின்  அருகில் உள்ள கட்டடங்களின் மேல் பகுதியில் இருந்து யாரும் பார்க்காத வகையில் பச்சை நிற துணியால் மறைக்கப்பட்டு, அதன் கீழ் ஜேசிபி இயந்திரம் மூலமாக குழி தோண்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில், அந்த சிறுமியை ஜெம் வீரமணி கட்டாய பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்து தனது தோட்டத்தில் புதைத்தாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அது தொடர்பாக எஸ். ஐ. டி.  அதிகாரிகள் வீர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: தவெக பெண்களுக்கு ஆபாச மெசெஜ்.. அட்ஜெஸ்ட் செஞ்சா பதவி.. மா.செ.வின் அந்தரங்க தொல்லை.. கொந்தளித்த மகளிரணி!

Follow Us