AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இன்ஸ்டா ரீல்ஸ்க்காக அரிவாளை சுழற்றிய இளசுகள்.. பதிலுக்கு லத்தியை சுழற்றிய போலீசார்.. தூத்துக்குடியில் அதகளம்!

Thoothukudi 3 Youth Arrested : தூத்துக்குடி மாவட்டத்தில் கையில் அரிவாளுடன் பொதுமக்கள் அச்சுறுத்தும் வகையி ல் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் ரீல்ஸ் வெளியிட்ட 3 இளைஞர்களை சிப்காட் போலீசார் அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் .

இன்ஸ்டா ரீல்ஸ்க்காக அரிவாளை சுழற்றிய இளசுகள்.. பதிலுக்கு லத்தியை சுழற்றிய போலீசார்.. தூத்துக்குடியில் அதகளம்!
கைது செய்யப்பட்ட 3 இளைஞர்கள்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 13 Nov 2026 16:11 PM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் அரிவாளுடன் ரீல்ஸ் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட 3 இளைஞர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் ஆயுதங்களுடன் ரீல்ஸ் பதிவிடுவதை தடுக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் உத்தரவு பிறப்பித்து இருந்தார். அதன் அடிப்படையில், போலீசார் தீவிர நடவடிக்கைகளை கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், தூத்துக்குடி அருகே உள்ள மீளவிட்டான் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கையில் அரிவாளுடன் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரீல்ஸ் பதிவிட்டு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டதாக தூத்துக்குடி மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர்கள்

அந்த தகவலின் அடிப்படையில், சிப்காட் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரீல்ஸ் பதிவிட்ட இளைஞர்கள் மீளவிட்டான் பகுதியை சேர்ந்த சோமசுந்தரம் மகன் முகிலன் ( 19 வயது), தெற்கு சங்கரப்பேரி முத்து துரை என்பவரது மகன் பெரியசாமி என்ற விக்கி ( 19 வயது) மற்றும் குறிஞ்சி நகரை சேர்ந்த சுடர் வடிவேலன் மகன் சதீஷ்குமார் ( 19 வயது) ஆகிய 3 பேர் என்பது தெரியவந்தது. உடனடியாக சிப்காட் போலீசார் விரைந்து செயல்பட்டு அவர்கள் மூன்று பேரையும் அதிரடியாக கைது செய்தனர்.

மேலும் படிக்க: 37 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கு.. மேற்குவங்காளத்தை சேர்ந்த 4 பேருக்கு.. 12 ஆண்டுகள் சிறை.. கோவை நீதிமன்றம் தீர்ப்பு!

அதிக லைக்குகளுக்கு ஆசைப்பட்டு ரீல்ஸ் வெளியீடு

தொடர்ந்து, அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் அவர்கள் தங்களது சமூக வலைதளங்களில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சினிமா பாடலுக்கு வீடியோ பதிவு செய்து அதனை இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரீல்ஸாக பதிவு செய்து வந்துள்ளனர். அதில், அதிக அளவில் லைக்குகள், கமெண்டுகள், ஷேர்ஸ்கள் கிடைப்பதற்காக இத்தகைய செயலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து, அவர்கள் மூன்று பேர் மீதும் ஆயுதங்களை காண்பித்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வீடியோ பதிவு செய்ததாகவும்

சிறையில் அடைக்கப்பட்ட 3 இளைஞர்கள்

சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தியதாகவும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து, அவர்களை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அத்துடன், சமூக வலைத்தளங்களில் இது போன்று ரீல்ஸ் பதிவிடுவது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ். பி. சிவபிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: கதவும் உடைக்கல.. லாக்கரும் உடைக்கல.. ஆனா 50 பவுன் நகை மாயம்.. நாகர்கோவில் கூட்டுறவு வங்கியில் என்ன நடந்தது!

Follow Us