AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

64 சிம் கார்டுகள் பொருத்தக்கூடிய வசதி – நிதி மோசடி முதல் ஆபாச படங்கள் வரை… சென்னையில் செயல்பட்டு வந்த நெட்வொர்க்

Chennai SIM Box Racket Exposed : தமிழ்நாடு சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் மேற்கொண்ட சோதனையில் சைதாப்பேட்டையில் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்த சிம் பாக்ஸ் நெட்வொர்க் அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னணியில் நிதி மோசடி போன்ற தீவிர சைபர் குற்றங்கள் நடைபெற்று வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

64 சிம் கார்டுகள் பொருத்தக்கூடிய வசதி –  நிதி மோசடி முதல் ஆபாச படங்கள் வரை… சென்னையில் செயல்பட்டு வந்த நெட்வொர்க்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 13 Nov 2026 15:47 PM IST

சென்னை, நவம்பர் 13 : தமிழ்நாடு சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் மேற்கொண்ட சோதனையில் சைதாப்பேட்டையில் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்த சிம் பாக்ஸ் நெட்வொர்க் அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டு வந்த 2 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

64 சிம் கார்டுகள் பொருத்தக்கூடிய வசதி கொண்ட நெட்வொர்க்

தமிழ்நாடு சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு மத்திய தொலைத்தொடர்புத் துறையின் தமிழ்நாடு உரிமம் பெற்ற சேவைப் பகுதியிடம் இருந்து 64 சிம் கார்டுகளை பயன்படுத்தி ஒரே நேரத்தில் அழைப்புகளை மேற்கொள்ளும் வகையில் தொலைத்தொடர்பு அமைப்பு செயல்பட்டு வருவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் பேரில் தமிழ்நாடு சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் சைதாப்பேட்டையில் அமைந்துள்ள பாலி டவர்ஸ் என்ற கட்டிடத்தில் செயல்பட்டு வந்த ஃபோர்ட் மேனேஜ்மென்ட் சர்வீஸ் என்ற நிறுவனத்தில் உரிய அனுமதியின்றி ஒரே நேரத்தில் ஏராளமான சிம் கார்டுகளைப் பயன்படுத்தி அழைப்புகளை மேற்கொள்ளும் சட்டவிரோத 10 சிம் கார்டு நெட்வொர்க் செயல்பட்டு வந்தது கண்டுபடிக்கப்பட்டது.

இதையும் படிக்க : செஞ்சி சிறுமி மாயமான விவகாரம்.. 33வது நாளாக தொடரும் தீவிர தேடுதல்.. காப்புக்காட்டில் மோப்ப நாய்களுடன் களமிறங்கிய சிபிசிஐடி!

‘நிதி மோசடி முதல் ஆபாச படங்கள் வரை’

இது தொடர்பாக தமிழ்நாடு சைபர் குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,சென்னையில் கண்டுபிடிக்கப்பட்ட Forte Management Services நிறுவனம் கடன் வசூல் மற்றும் கடன் மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனமாக வெளிப்படையாகச் செயல்பட்டு வந்துள்ளது. ஆனால், அதன் பின்னணியில் நிதி மோசடி, இ-காமர்ஸ் மோசடி மற்றும் குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்களைப் பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு தீவிர சைபர் குற்றங்கள் நடைபெற்று வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிறுவனத்தின் உரிமையாளரான சதீஷ் என்பவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மேலாளர் சீனிவாசன் கடந்த 13 ஆண்டுகளாகவும், தகவல் தொழில்நுட்ப வல்லுநர் சஞ்சய் கடந்த 7 ஆண்டுகளாகவும் அங்கு பணியாற்றி வந்துள்ளனர். மேலும் அந்த நிறுவனத்தில் 100க்கும் மேற்பட்டோர் தொலைபேசி அழைப்புகள் மூலம் வாடிக்கையாளர்களைத் தொடர்புகொள்ளும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர்.

இதையும் படிக்க : “டாஸ்மாக் மதுபானங்களுக்கு கூடுதலாக ரூ.10 வசூலா?”.. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பொதுமக்களுக்கு எச்சரிக்கை

மேலும், தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒருவரது குரலைப் போலவே பேசி அவரது குடும்பத்தினரிடம் பணம் கேட்டு மோசடி செய்யும் புதிய முறைகளும் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற மோசடிகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தமிழகத்தில் சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்கள் கடந்த சில ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்துள்ளன. கடந்த 2021-ஆம் ஆண்டு 23 ஆயிரம் புகார்கள் பதிவாகின. இதன்மூலம் சுமார் ரூ. 1,110 கோடி இழப்பு ஏற்பட்ட நிலையில், அதில் ரூ. 288 கோடி மட்டுமே அதாவது 25 சதவீதம் பணம் முடக்கப்பட்டுள்ளத என்று தெரிவித்தார்.

Follow Us