பொங்கல் 2027: ஊருக்கு போற பிளான் இருக்கா? ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடக்கம்!
Pongal Train Ticket Booking: ரயில்வேயின் 60 நாட்கள் முன்பதிவு விதிப்படி, பயணத் தேதிக்கு ஏற்ப டிக்கெட் முன்பதிவு தொடங்கும் நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜனவரி 12ஆம் தேதி பயணம் செய்ய நவம்பர் 13ஆம் தேதியான இன்று முன்பதிவு தொடங்கியுள்ளது. ஜனவரி 13ஆம் தேதி பயணம் செய்ய நவம்பர் 14ஆம் தேதியும், ஜனவரி 14ஆம் தேதி போகிப் பண்டிகையன்று பயணம் செய்ய நவம்பர் 15ஆம் தேதியும் முன்பதிவு செய்யலாம்.
நவம்பர் 13, 2026 – சென்னை: 2027ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ள பயணிகளுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று (நவம்பர் 13) தொடங்கியுள்ளது. இந்திய ரயில்வேயின் 60 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்யும் நடைமுறையின்படி, ஜனவரி 12ஆம் தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் இன்று முதல் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். பண்டிகைக் காலத்தில் அதிகப்படியான பயணிகள் சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள் என்பதால் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
2027 பொங்கல் பண்டிகை எப்போது?
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை அடுத்த ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதற்கு முந்தைய நாள் ஜனவரி 14ஆம் தேதி போகிப் பண்டிகையும், ஜனவரி 16ஆம் தேதி மாட்டுப் பொங்கலும், ஜனவரி 17ஆம் தேதி காணும் பொங்கலும் கொண்டாடப்பட உள்ளன. தொடர்ந்து நான்கு நாட்கள் பண்டிகை வருவதால் சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்லத் திட்டமிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: குழந்தைகள் தினக் கொண்டாட்டம் – 61.84 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு கேக், வாழ்த்து அட்டை..
எந்த தேதிக்கு எப்போது முன்பதிவு?
ரயில்வேயின் 60 நாட்கள் முன்பதிவு விதிப்படி, பயணத் தேதிக்கு ஏற்ப டிக்கெட் முன்பதிவு தொடங்கும் நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜனவரி 12ஆம் தேதி பயணம் செய்ய நவம்பர் 13ஆம் தேதியான இன்று முன்பதிவு தொடங்கியுள்ளது. ஜனவரி 13ஆம் தேதி பயணம் செய்ய நவம்பர் 14ஆம் தேதியும், ஜனவரி 14ஆம் தேதி போகிப் பண்டிகையன்று பயணம் செய்ய நவம்பர் 15ஆம் தேதியும் முன்பதிவு செய்யலாம்.
அதேபோல், ஜனவரி 15ஆம் தேதி தைப்பொங்கல் அன்று பயணம் செய்ய நவம்பர் 16ஆம் தேதியும், ஜனவரி 16ஆம் தேதி மாட்டுப் பொங்கலன்று பயணம் செய்ய நவம்பர் 17ஆம் தேதியும், ஜனவரி 17ஆம் தேதி காணும் பொங்கலன்று பயணம் செய்ய நவம்பர் 18ஆம் தேதியும் முன்பதிவு தொடங்குகிறது.
மேலும் படிக்க: “தனி ஒருவனின் கைவரிசையா?”.. மதுரை நகைக்கடை கொள்ளையில் திடீர் திருப்பம்?.. விடிய விடிய தனிப்படை போலீசார் தீவிர விசாரணை!!
சென்னைக்குத் திரும்புவதற்கான முன்பதிவு
பொங்கல் பண்டிகையைக் கொண்டாடிவிட்டு மீண்டும் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்குத் திரும்ப விரும்புபவர்கள் ஜனவரி 18ஆம் தேதி பயணம் செய்ய நவம்பர் 19ஆம் தேதியும், ஜனவரி 19ஆம் தேதி பயணம் செய்ய நவம்பர் 20ஆம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
காலை 8 மணிக்கு முன்பதிவு தொடக்கம்
ஐஆர்சிடிசி அதிகாரப்பூர்வ இணையதளம், மொபைல் செயலி மற்றும் ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் வாயிலாக காலை 8 மணி முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். தொடக்க நாள் முன்பதிவுக்கு காலை 8 மணிக்குப் பிறகே அனுமதி வழங்கப்படும். பொங்கல் பண்டிகையின்போது பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்குவது தொடர்பான அறிவிப்புகள் பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.