தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இல்லாமல் கொள்ளையர்களின் கூடாரமாக மாறிவிட்டது” – மௌனத்தை கலைப்பாரா? முதல்வர் விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி!
Edappadi Palaniswami To CM Vijay: தேர்தலுக்கு முன்பு மக்களின் பாதுகாப்பு குறித்து மேடைகளில் பேசிய விஜய், தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு செயல்படாமல் இருப்பதாகக் குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சரின் செயல்பாடுகள் சினிமா கேமரா முன்பு மட்டும்தானா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
நவம்பர் 13, 2026: தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலை, கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, முதலமைச்சர் விஜய்க்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளார். தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இல்லாமல் கொள்ளையர்களின் கூடாரமாக மாறிவிட்டதாக விமர்சித்துள்ள அவர், முதல்வர் தனது மௌனத்தைக் கலைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மௌனத்தை கலைப்பாரா முதல்வர் விஜய்?
தனது சட்டமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகளை பற்றி இதுவரை
மௌனம் கலைக்காதவர்,
தமிழ்நாடு இன்றைக்கு அமைதிப் பூங்காவாக இல்லாமல், கொள்ளையர்களின் கூடாரமாக மாறியிருப்பது குறித்தாவது தனது
கள்ள மௌனத்தை கலைப்பாரா
ரீல் முதல்வர் @actorVijay?பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல், மாநிலத்தின் மூலைமுடுக்கெல்லாம் கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் நடப்பது அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.
மதுரையில் பிரபல நகைக்கடை தனிஷ்க்-ல் 50 கோடி மதிப்புள்ள நகைகொள்ளை..
காஞ்சிபுரத்தில் டாஸ்மாக் வசூல் பணம்
1.5 கோடி கொள்ளை..நெல்லையில் 70 வயது மூதாட்டியிடம் 13 பவுன் நகை கொள்ளையடித்த தவெக நிர்வாகி..
விழுப்புரத்தில் பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து 16 சவரன் நகை கொள்ளை.
திருவாரூரில் ஏழு பேராசிரியர்கள் வீட்டில் கொள்ளை..
நாமக்கல் பள்ளிபாளையம் அருகே நள்ளிரவில் தெருவிளக்குகளை அணைத்து 7 வீடுகளில் கொள்ளை முயற்சி.
இப்படி தமிழ்நாடு முழுவதும் கொள்ளையர்களின் கை ஓங்கி,
மக்கள் பயத்தின் பிடியில் உறைந்து போயிருக்கும்போது கூட மௌன விரதத்தில் இருந்து கலைய மாட்டேன் என்றால் எப்படி?Confident ah இருங்க நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் அப்படின்னு வசனம் பேசினீங்களே!
இந்த வசனம் மக்களுக்கு சொன்னீங்களா? இல்ல குற்றவாளிகளுக்கு சொன்னீங்களா?நீங்கள் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தும் அதேநேரத்தில் தான் இங்கே பல குற்றச்சம்பவங்கள் நடந்துள்ளன..
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மேடைக்கு மேடை மக்கள் பாதுகாப்பு பற்றி அடுக்குமொழியில் பேசிய ரீல்
முதல்வர் அவர்களே!
உங்கள் “Action” எல்லாம் சினிமா கேமரா முன்னால் மட்டும்தானா?எனவே இனியாவது கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விடுபட்டு,
உடனடியாக இந்த கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என பொய்க்கால் குதிரை அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்.@CMOTamilnadu
@AIADMKOfficial— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) November 13, 2026
இதுதொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, தனது சட்டமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகள் குறித்து இதுவரை மௌனம் கலைக்காத முதலமைச்சர் விஜய், மாநிலத்தில் அதிகரித்து வரும் கொள்ளைச் சம்பவங்கள் குறித்தாவது பதிலளிப்பாரா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் படிக்க: சென்னையில் ‘நோ பார்க்கிங்’, நடைபாதை ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி.. AI தொழில்நுட்பத்துடன் புதிய திட்டத்தை கொண்டுவரும் காவல்துறை!!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகக் குறிப்பிட்ட அவர், மதுரையில் தனிஷ்க் நகைக்கடையில் ரூ.50 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது, காஞ்சிபுரத்தில் டாஸ்மாக் வசூல் பணம் ரூ.1.5 கோடி கொள்ளையடிக்கப்பட்டது உள்ளிட்ட சம்பவங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நெல்லையில் 70 வயது மூதாட்டியிடம் 13 பவுன் நகை கொள்ளை, விழுப்புரத்தில் பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து 16 சவரன் நகை பறிப்பு, திருவாரூரில் ஏழு பேராசிரியர்களின் வீடுகளில் கொள்ளை, நாமக்கல் பள்ளிபாளையம் அருகே ஏழு வீடுகளில் கொள்ளை முயற்சி உள்ளிட்ட சம்பவங்களையும் பட்டியலிட்டுள்ளார்.
முதலமைச்சரின் செயல்பாடுகள் சினிமா கேமரா முன்பு மட்டும்தானா?
முதலமைச்சர் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு தொடர்பாக ஆலோசனை நடத்தும் அதே நேரத்தில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.
தேர்தலுக்கு முன்பு மக்களின் பாதுகாப்பு குறித்து மேடைகளில் பேசிய விஜய், தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு செயல்படாமல் இருப்பதாகக் குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சரின் செயல்பாடுகள் சினிமா கேமரா முன்பு மட்டும்தானா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் படிக்க: பொங்கல் 2027: ஊருக்கு போற பிளான் இருக்கா? ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடக்கம்!
இறுதியாக, கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விடுபட்டு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் விஜய்யை வலியுறுத்தியுள்ளார்.