கிரீஸ் வெட்டிங்.. அனிருத் – காவியா மாறனின் திருமண செலவு மொத்தம் எவ்வளவு தெரியுமா?
Anirudh And Kavya Maran Wedding Cost: தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடிவரும் முன்னணி இசையமைப்பாளராக இருந்துவருபவர்தான் அனிருத் ரவிச்சந்தர். இவர் தனது நீண்டநாள் காதலியான காவியா மாறனை, கடந்த 2026 நவம்பர் 11ம் தேதியில் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரின் திருமண செலவு குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.
கோலிவுட் மக்களிடையே பேமஸான இசையமைப்பாளராக இருந்துவருபவர் அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander). இவர் தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக இருந்தாலும் இந்தி மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் படங்களில் பணியாற்றிவருகிறார். இவரின் இசையில் தமிழில் இறுதியாக வெளியாகியிருந்த திரைப்படம் ஜெயிலர் 2 (Jailer 2). சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (Superstar Rajinikanth) இந்த படமானது இவருக்கு மாபெரும் வரவேற்பை பெற்றுக்கொடுத்தது. இந்த பிரம்மாண்ட வெற்றியுடன் அனிருத் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக அறிவித்திருந்தார். அனிருத் மற்றும் காவியா மாறன் (Kavya Maran) இருவருமே சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அந்த விதத்தில் இவர்கள் இருவரின் காதல் பந்தம் தற்போது திருமணத்தில் இணைந்துள்ளது.
பல ஆண்டுகளாக காதலில் இந்த இந்த ஜோடியானது, கடந்த 2026 நவம்பர் 11ம் தேதியில் திருமண பந்தத்தில் இணைந்திருந்தது. இவர்கள் இருவரின் திருமணம் கிரீஸ் நாட்டில் நடைபெற்றிருந்த நிலையில், அந்த திருமண செலவுகள் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.




இதையும் படிங்க: இது ராம யுகம்.. முதல் வாரத்தின் முடிவில் உலகமெங்கும் ராமாயணா படம் வசூல் எவ்வளவு தெரியுமா?
அனிருத் – காவியா மாறனின் திருமண செலவு விவரங்கள்:
அனிருத் மற்றும் காவியா மாறன் இவர்கள் இருவரின் திருமணம் (11/11/2026) அன்று கிரீஸ் நாட்டில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றிருந்தது. காலையில் 11:11 மணியளவில் இவர்கள் இருவரின் திருமணம் நடைபெற்றிருந்தது என கூறப்படுகிறது. இவர்களின் திருமணத்திற்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: சீன் படத்தின் பார்ட் 2 வருமா? இயக்குநர் ஜித்து மாதவன் ஓபன் டாக்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் குடும்பம் மற்றும் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் குடும்பம் இந்த திருமணத்தில் கலந்துகொண்டுள்ளனர். அந்த வகையில் அனிருத் திருமணமத்திற்கு மொத்தமாக ரூ 100 கோடிகளுக்கு மேல் செலவாகியுள்ளதாம். அதில் 50 சதவீதம் போக்குவரத்து செலவுக்கே ஆனதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
அனிருத் – காவியா மாறனின் திருமணத்தின் செலவு குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு:
వంద కోట్ల పెళ్లి…నూరేళ్ళు కలిసి ఆనందంగా ఉండండి 💐
#AnirudhKavyaWedding expenses are estimated about 100cr
It is heard that 50% of it goes for charted flights https://t.co/4T1UinOpLr
— Taraq(Tarak Ram) (@tarakviews) November 13, 2026
அனிருத் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்துவருகிறார். மேலும் காவியா மாறன் சன் ரைஸஸ் ஆப் ஹைதராபாத் அணியின் மேலாளராக இருந்துவருகிறார். இவர்கள் இருவருமே கடந்த சில ஆண்டுகளாக டேட்டிங் செய்துவந்தனர்.
இத்தாலி போன்ற நாடுகளில் இவர்கள் இருவருமே ஒன்றாக சுற்றித்திருவது போன்ற புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி இணையத்தில் வைரலாகிவந்தது. அந்த விதத்தில் நீண்ட நாட்களாக காதலில் இருந்த இவர்கள், திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இவர்களுக்கு பல்வேறு நட்சத்திர நடிகர்கள் மற்றும் அரசியல் பிரபலங்களும் வாழ்த்து கூறிவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.