AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மதுரை நகைக்கடையில் கொள்ளை… திணறும் போலீஸ் – ஏஐ-யை நாட முடிவு

Madurai Tanishq Gold Heist : மதுரையல் புதிதாக திறக்கப்பட்ட தனிஷ்க் ஜுவல்லர்ஸ் நகைக்கடையில் இருந்து 15 கிலோவுக்கும் மேல் தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், 20 மணி நேரமாகியும் துப்பு கிடைக்காததால் காவல்துறையினர் ஏஐயை நாட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை நகைக்கடையில் கொள்ளை… திணறும் போலீஸ் – ஏஐ-யை நாட முடிவு
மதுரை தனிஷ்க் கொள்ளை
Karthikeyan S
Karthikeyan S | Published: 13 Nov 2026 16:52 PM IST

மதுரை, நவம்பர் 13 : மதுரையல் புதிதாக திறக்கப்பட்ட தனிஷ்க் ஜுவல்லர்ஸ் நகைக்கடையில் இருந்து 15 கிலோவுக்கும் மேல் தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், 20 மணி நேரமாகியும் துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் கொள்ளையில் ஈடுபட்ட நபர், சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்பே முகமூடி அணிந்து கடையை நோட்டமிட்டுச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து கொள்ளையனை பிடிக்க ஏஐ உதவியை நாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏஐ உதவியை நாடும் போலீசார்

மதுரை தனிஷ்க் ஜுவல்லர்ஸ் கடையில் 15 கிலோவிற்கும் அதிகமான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 9 தனிப்படைகள் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது இந்த நிலையில், ஏஐ உதவியை நாட காவல்துறையினர் போலிசார் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கொள்ளையில் ஈடுபட்ட நபரின் கைரேகை, தடயங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், ஏஐ உதவியுடன் உடல் தோற்றம் அடிப்படையில் கொள்ளையனை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிக்க : 37 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கு.. மேற்குவங்காளத்தை சேர்ந்த 4 பேருக்கு.. 12 ஆண்டுகள் சிறை.. கோவை நீதிமன்றம் தீர்ப்பு!

மதுரை சமீபத்தில் புதிதாக திறக்கப்பட்ட தனிஷ்க் ஜூவல்லர்ஸ் நகைக்கடைக்குள் நவம்பர் 12, 2026 அன்று அதிகாலையில் மர்ம நபர் ஒருவர் நுழைந்து, 15 கிலோவுக்கு மேற்பட்ட தங்க நகைகளைக் கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் மதுரை மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபரைப் பிடிப்பதற்காக 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து கொள்ளை நடந்த நகைக்கடையை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் ரயில் நிலையங்கள், போக்குவரத்து சிக்னல்கள், சுங்கச்சாவடிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் காவல் துறையினர் சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

கொள்ளைக்கு முன்பே நோட்டமிட்ட மர்ம நபர்

இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் முக்கிய திருப்பமாக, கடந்த நவம்பர் 5,2026 அன்று அதிகாலை நேரத்தில் முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் நகைக்கடைக்கு வந்து, கொள்ளையடிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து கடையை நோட்டமிட்டு சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து இந்த கொள்ளைச் சம்பவம் திடீரென அரங்கேற்றப்பட்டதா அல்லது முன்கூட்டியே பல நாட்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க : 64 சிம் கார்டுகள் பொருத்தக்கூடிய வசதி – நிதி மோசடி முதல் ஆபாச படங்கள் வரை… சென்னையில் செயல்பட்டு வந்த நெட்வொர்க்

கொள்ளையில் ஈடுபட்ட நபர் ஸ்கூட்டி மூலம் சம்பவ இடத்திற்கு வந்து நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறப்படும் நிலையில், கொள்ளைக்குப் பிறகு ஸ்கூட்டியை வேறு இடத்தில் நிறுத்திவிட்டு ரயில் மூலம் மதுரையை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், அதிகாலை நேரங்களில் மதுரையிலிருந்து புறப்படும் ரயில்கள் மற்றும் அவை செல்லும் வழித்தடங்கள் குறித்தும் தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us