Obsession Movie: பல நாள் காத்திருப்பு.. தமிழ் வெர்ஷனில் ஸ்ட்ரீமாகும் அப்செஷன்.. எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
Obsession Movie Tamil Version: ஹாலிவுட் சினிமாவில் கடந்த 2026ம் ஆண்டு மே மாதத்தில் திரையரங்குகளில் வெளியான ஹாரர் மற்றும் திரில்லர் திரைப்படம்தான் அப்செஷன். இந்த படமானது ஆங்கில மொழியில் திரையரங்குகளில் வெளியான நிலையில், ஓடிடியில் தமிழில் தற்போது ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது. எந்த ஓடிடியில் உள்ளது என்பது குறித்து தெளிவாக பார்க்கலாம்.
ஹாலிவுட் (Hollywood Movies) பட ரசிகர்கள் மத்தியில் கடந்த 2026ம் ஆண்டு மே மாதத்தில் அதிகமாக தேடப்பட்ட மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகமாக ஈர்க்கப்பட்ட திரைப்படம்தான் அப்செஷன் (Obsession). ஹாலிவுட் மொழியில் கடந்த 2025ம் ஆண்டில் இன்டர்நெஷனல் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டிருந்தது. அதன் பிறகு அதிகாரபூர்வமாக கடந்த 2026ம் ஆண்டு மே 15ம் தேதியில் உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் ஆங்கில மொழியில் வெளியாகிவந்தது. இந்த படத்தின் காட்சிகள் மற்றும் கதைகளை குறித்து இணையதளங்களில் பெரும் வரவேற்பு இருந்தது. மேலும் இப்படம் ஓடிடியில் (OTT Release) எப்போது வெளியாகும், அதுவும் தமிழில் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்த படமானது வெளியாகி கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கும் மேல் ஆகும் நிலையில், தற்போது ஓடிடி ரிலீஸ் மற்றும் எந்த ஓடிடியில் எந்தெந்த மொழிகளில் வெளியாகிறது என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.




இதையும் படிங்க: ஒரு இன்வஸ்ட்டிகேஷன் திரில்லர்.. அர்ஜுன் தாஸின் ஜான் டோ திரைப்படம் எப்படி இருக்கு?
அப்செஷன் படத்தை எந்த ஓடிடியில் காணலாம்:
இந்த அப்செஷன் திரைப்படத்தை கயூரி பார்க்கர் என்பவர் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர்களாக மைக்கில் ஜான்ஸ்டோன், இன்டே நவரெட் என்பவர்கள் இணைந்து நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் இப்படத்தில் நிக்கி மற்றும் பரோன் என்ற வேடத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த ஹாரர் மற்றும் திரில்லர் பாணியில் இப்படமானது வெளியாகியிருந்தது.
இதையும் படிங்க: இது ராம யுகம்.. முதல் வாரத்தின் முடிவில் உலகமெங்கும் ராமாயணா படம் வசூல் எவ்வளவு தெரியுமா?
அந்த விதத்தில் இப்படத்தின் இந்திய ரிலீஸ் உரிமையை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி நிறுவனம் பெற்றிருந்த நிலையில், முதலில் இந்தி மற்றும் ஆங்கில மொழியில் ஓடிடியில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டுவந்தது. அந்த வரிசையில் தற்போது இப்படமானது தமிழ் பதிலில் ஓடிடியில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறதாம். தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் ஸ்ட்ரீம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்செஷன் திரைப்படத்தின் தமிழ் வெர்ஷனில் ரிலீஸ் குறித்து வெளியான அறிவிப்பு:
You asked for it. The One Wish Willow answered!
Obsession: The Original Uncut Version, now streaming on The Peacock Hub on JioHotstar.
Now available in Tamil, Telugu, Malyalam, and Kannada, Hindi and English. https://t.co/l71fKOM8OZ
— JioHotstar (@JioHotstar) November 13, 2026
தற்போது இந்த அப்செஷன் படமானது தமிழ் மொழியில் ஓடிடியில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டுவரும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. மேலும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் தொடர்ந்து ரசிகர்கள் பார்வையிட்டுவருகிறார்கள். ஆங்கில மொழியில் இருந்த இந்த படமானது தற்போது இந்தி மொழிகளில் வெளியாகிவரும் நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.