AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஜேசனின் கேம் பிளே இதான்.. ஜேசனை கேம் தந்திரம் குறித்து பேசிய LP – வினோத் பாபு – ப்ரோமோ!

Bigg Boss Tamil Season 10 Day 68: தமிழில் விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிவருகிறது. இந்த நிகழ்ச்சி 10வது வாரத்தின் இறுதியில் உள்ள நிலையில், இந்த வாரத்திலும் எவிக்ஷன் இருக்கும். அந்த வகையில் இன்று வெளியான 2வது ப்ரோமோவில் லக்ஷ்மி பிரியா மற்றும் வினோத் பாபு ஜேசன் குறித்து பேசியுள்ளதாக காட்டப்பட்டுள்ளது.

ஜேசனின் கேம் பிளே இதான்.. ஜேசனை கேம் தந்திரம் குறித்து பேசிய LP – வினோத் பாபு – ப்ரோமோ!
பிக் பாஸ் சீசன் 10 ப்ரோமோImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 13 Nov 2026 14:22 PM IST

விஜய் தொலைக்காட்சியில் மக்களால் அதிகமாக ரசிக்கப்பட்டுவரும் ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருந்துவருவது பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10). இந்நிகழ்ச்சில் 2026 செப்டம்பர் 6ம் தேதியோடு தொடங்கிய நிலையில், இன்றுடன் (13/11/226) கிட்டத்தட்ட 68 நாட்களை கடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 19 போட்டியாளர்களுடன் ஆரம்பமான நிலையில், வைல்ட் கார்ட் என்ட்ரி மற்றும் எவிக்ஷன் எல்லாவற்றையும் கடந்து தற்போது வெறும் 12 போட்டியாளர்கள் மட்டுமே மீதம் இருகிறார்கள். அதிலும் இந்த வாரத்தில் சுவாரஸ்யமே இல்லாத ஜூனியர் பிக் பாஸ் டாஸ்க் (Junior Bigg Boss Task) நடந்த நிலையில், அதில் போட்டியாளர்கள் மத்தியில் சண்டைகள் அதிகம் இருந்தது.

இந்நிலையில் இந்த வாரத்தின் மோசமான போட்டியாளர்களின் முனியம்மாள் மற்றும் ஜேசன் என இருவருமே இடம்பிடித்திருந்தனர். தற்போது வெளியாகியுள்ள 2வது ப்ரோமோவில், லக்ஷ்மி பிரியா மற்றும் வினோத் பாபு இருவருமே, ஜேசனின் கேம் பிளே குறித்து வெளிப்படையாக பேசியுள்ளனர்.

இதையும் படிங்க: என் கணவர் அதை பற்றி கவலைப்பட்டதே இல்லை – கியாரா அத்வானி பகிர்ந்த விஷயம்!

ஜேசனின் கேம் பிளே குறித்து சரியாக கண்டுபிடித்த லக்ஷ்மி பிரியா – வினோத் பாபு:

இந்த ப்ரோமோவில், லக்ஷ்மி பிரியா மற்றும் வினோத் பாபு இருவருமே தனியாக அமர்ந்து பேசுவதுபோல காட்டப்பட்டுள்ளது. அதில் லக்ஷ்மி பிரியா பேச ஆரம்பிக்கையில், “ஜேசன் வாரம் முழுவதும் சண்டையிடும் நோக்கத்தோடு இருப்பார், நடுவில் தனது முரட்டுத்தனம் குறித்து ஒரு கேம் விளையாடுவார். மேலும் வாரத்தின் இறுதியில் நான் நல்லவன் என வந்து நிற்பார். நாம் அந்த வாரம் முழுவதும் எவ்வளவு கஷ்டப்பட்டு விளையாடினாலும், அந்த விளையாட்டை ஒரே நபராக அவர் கெடுத்துவிடுகிறார். 11 போட்டியாளர்களின் விளையாட்டை ஒரே ஆளாக ஜேசன் மோசமடைய வைக்கிறார்” என லக்ஷ்மி பிரியா கூறினார்.

இதையும் படிங்க: யாருமே ஒழுங்கு இல்ல.. பிக் பாஸில் மற்றவர்களின் குறையை கூறிய போட்டியாளர்கள் – ப்ரோமோ இதோ!

மேலும் வினோத் பாபு, “அவர் ஆவேசமாக இருப்பாரு, அந்த ஆவேசத்தை கேமில் காட்டுவாரு, மேலும் அதை சுயமாக மாற்றுவார். மேலும் அவரின் கேம் பிளேவே ஒவ்வொரு போட்டியாளர்களை சுயமாக தாக்குவதுதான்” என இந்த ப்ரோமோவில் அவர்கள் பேசுவதுபோல காட்டப்பட்டுள்ளது. ஜேசன் இந்த வீட்டில் தொடர்ந்து அடுத்தடுத்த பிரச்சனைகளை எழுப்பிவரும் நிலையில், சமீபத்தில் டிடிஃஎப் வாசனை அடிப்பதற்காக கையை ஓங்கியது தொடர்பான விஷயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 68வது நாளின் 2வது ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:

இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியினாது 10வது வாரத்தின் இறுதியில் உள்ளது. இந்த நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் சிறப்பாக வரவேற்பை பெற்றுவரும் நிலையில், இந்த வாரத்திலும் எவிக்ஷன் இருக்கும் என கூறப்படுகிறது. இன்னும் இந்நிகழ்ச்சியானது நிறைவடைய சில வாரங்களே இருக்கும் நிலையில், வெற்றியாளர் யார் என யூகிக்க முடியவில்லை என கூறலாம்.

Follow Us