AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

டைனோசர்களைக் குறை சொல்ல மனிதர்களுக்குத் தகுதி இருக்கிறதா?

Dinosaurs Fossil: நவீன மனிதர்கள் பழமைவாதிகளைக் கிண்டல் செய்யவும், புதைபடிவ எரிபொருட்களை ஒழிக்கவும் டைனோசர்களைக் குறியீடாகப் பயன்படுத்தினாலும், அவை இயற்கைக்கு எதிராகச் செயல்படவில்லை. இன்றைய பறவைகள் மற்றும் கோழிகள் வடிவில் தங்களின் மரபணுக்களைத் தக்கவைத்துள்ள டைனோசர்கள், எந்தவொரு காலநிலை மாநாடுகளுமின்றி சுமார் 180 மில்லியன் ஆண்டுகள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்துள்ளன.

டைனோசர்களைக் குறை சொல்ல மனிதர்களுக்குத் தகுதி இருக்கிறதா?
டைனோசர்கள்Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 13 Nov 2026 15:00 PM IST

நவீன மனிதர்கள் எதையாவது அழிக்க வேண்டும் என்று விரும்பும்போது, ​​பிளாஸ்டிக் முதல் அரசியல் எதிரிகள் வரை அனைத்தையும் ஒரே நொடியில் ஒழித்துக்கட்ட வேண்டும் என்று பெரிய முழக்கங்களை எழுப்புகிறார்கள். ஆனால், பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்த டைனோசர்களை (Dinosaurs Fossil )நாம் சற்று திரும்பிப் பார்க்க வேண்டும். பழமைவாதமாக சிந்திப்பவர்களையும், இன்டர்நெட் தொழில்நுட்பத்தை புரிந்து கொள்ளாத பெற்றோர்களையும், அச்சு ஊடகங்களை நேசிக்கும் ஆசிரியர்களையும் நாம் எளிதில் டைனோசர் என்று கிண்டல் செய்கிறோம். மனிதர்களைப் போல எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாமலும், டைனோசர்கள் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் சுமார் 180 மில்லியன் ஆண்டுகள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்துவிட்டுச் சென்றன.

Also Read: காலையில் தூங்கி எழுந்ததும் முகம் வீங்கி காணப்படுவது ஏன்?

டைனோசர்களை வில்லனாக்கும் ஐ.நா.வின் கருத்தும் உண்மையும்

பழமைவாதம் மற்றும் தேவையற்ற தன்மையின் குறியீடாக டைனோசர்களைச் சித்தரிக்கும் வரிசையில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் ஆண்டோனி குட்டெரெஸ் சமீபத்தில் புதைபடிவ எரிபொருட்களை டைனோசர்களைப் போல மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால், டைனோசர்கள் எப்போதுமே கெட்டவர்களாகக் கருதப்படுவது ஏன் என்ற கேள்வி எழுகிறது. நிலக்கரி ஆலைகளை டைனோசர்கள் கண்டுபிடிக்கவில்லை; எண்ணெய் நிறுவனங்களுக்கு நிதியுதவி செய்யவுமில்லை. சொல்லப்போனால், டைனோசர்கள் தங்களை அழிவிலிருந்து காப்பாற்ற லாபி செய்திருக்க முடியும். விண்கல் மோதலைப் போலியானது என்று கூறி தேர்தல் வெற்றிகளைப் பெற்றிருக்கவும் வாய்ப்பிருந்தது.

அழிந்துபோனதாக நம்பப்படும் டைனோசர்களின் மரபணுக்கள்

உண்மையில் டைனோசர்கள் தங்களைச் சுற்றியுள்ள எதையும் அழிப்பதில் வல்லவர்களாக இருக்கவில்லை, ஏன் தங்களைக்கூட அவர்களால் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை. அவர்கள் பூமியிலிருந்து மறைந்துவிட்டாலும், அவர்களின் மரபணுக்கள் முழுமையாக அழியவில்லை. நம் வீட்டு ஜன்னல்களில் அமரும் புறாக்களையும், ஈகில்களையும் பார்க்கும்போது அதில் இன்னமும் டைனோசரின் அம்சங்கள் இருப்பதை உணரலாம். டைனோசர்களின் பாரிய உடல் அமைப்பு மறைந்துவிட்டாலும், இன்றைய மனிதர்களின் உணவில் கோழிகள் இன்றியமையாத இடத்தைப் பிடித்துள்ளன. பரிணாம வளர்ச்சியின் உண்மையான வெற்றியை அவை இட்ட முட்டைகளின் எண்ணிக்கையிலும் மனிதர்களின் சமையலறைகளிலும் காணலாம்.

Also Read: காலையில் தூங்கி எழுந்ததும் முகம் வீங்கி காணப்படுவது ஏன்?

நவீன மனிதர்களின் நாகரிகமும் அழிவை நோக்கிச் செல்லும் போக்கும்

ஆனால், நாகரிகம் மற்றும் புத்தாக்கம் என்ற பெயரில் நவீன மனிதன் பூமியிலிருந்து புதைபடிவ எரிபொருட்களைத் தோண்டி எடுத்து, அவற்றை எரிப்பதையே தன் நாகரிகமாக மாற்றிவிட்டான். மிகக் குறுகிய காலக்க்கட்டத்தில் குண்டுகளை உருவாக்கி, காடுகளை அழித்து, பெருங்கடல்களை மாசுபடுத்திய மனிதன், இப்போது அவற்றை அழிப்பதற்கான மாநாடுகளை நடத்தி வருகிறான். எந்தவொரு மாநாடுகளையும் நடத்தாமலும், மனிதர்களைப் போல எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாமலும், டைனோசர்கள் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் சுமார் 180 மில்லியன் ஆண்டுகள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்துவிட்டுச் சென்றன.

Follow Us