Arjun Das: ஒரு இன்வஸ்ட்டிகேஷன் திரில்லர்.. அர்ஜுன் தாஸின் ஜான் டோ திரைப்படம் எப்படி இருக்கு?
John Doe Movie Review: தென்னிந்திய சினிமாவில் மக்கள் மத்தியில் தனது குரல் மற்றும் நடிப்பினால் மிகவும் பிரபலமானவர் அர்ஜுன்தாஸ். இவரின் நடிப்பில் தமிழில் பல படங்கள் உருவாகியுள்ளத்து. இயக்குநர் மதுமிதா இயக்கத்தில் இவரின் நடித்துள்ள புது படம்தான் ஜான் டோ. இப்படம் இன்று (13/11/2026) உலகமெங்கும் வெளியாகியுள்ள நிலையில், அதன் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் தனது குரல் மற்றும் நடிப்பினால் மக்களை வெகுவாக கவர்ந்தவர் அர்ஜுன்தாஸ் (Arjun Das). இவர் மாஸ்டர் (Master Movie) திரைப்படத்தில் தாஸ் என்ற வேடத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். ஆனால் அதற்கு முன்பே படங்களில் நடித்திருக்கிறார். மேலும் இவர் ஹீரோவாக படங்களில் நடிக்க ஆர்வம் காட்டிவரும் நிலையில், இதுவரை இவரின் நடிப்பில் சில படங்கள் வெளியாகியுள்ளது. இறுதியாக வெளியான திரைப்படம்தான் ஒன்ஸ் மோர் (Once More Movie). இந்த படமானது 2026ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில் வெளியானது. இந்த படத்தில் அர்ஜுன்தாஸ், அதிதி ஷங்கர் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இணைந்து நடித்திருந்தனர்.
இந்த படத்திற்கு பின் இவரின் நடிப்பில் இன்று (13/11/2026) வெளியாகியுள்ள திரைப்படம்தான் ஜான் டோ (John Doe). இதை இயக்குநர் மதுமிதா (Director Madhumitha) இயக்கியுள்ள நிலையில், இன்வெஸ்ட்டிகேஷன் திரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் விமர்சனங்கள் குறித்து விவரமாக பார்க்கலாம்.




இதையும் படிங்க: சீன் படத்தின் பார்ட் 2 வருமா? இயக்குநர் ஜித்து மாதவன் ஓபன் டாக்!
அர்ஜுன்தாஸின் ஜான் டே திரைப்படத்தின் விமர்சனங்கள்:
#JohnDoe – A Neat Crime Investigation Thriller. An Engaging 1st Half With An Unexpected Interval Block. 2nd Half Is Decent, But Could Have Been A Little Tighter. Madhumitha’s Writing Is A Big Plus. Usually, The Killer’s Flashback Portion In Investigation Thrillers Feels Lengthy, But Here, It Is Kept Short & Crisp. Good Performances From Arjun Das, Sanchana & The Entire Cast. BGM Also Works Well. Could Have Been Trimmed By 5–10 Minutes, But The Best Part Is That There Are No Unwanted Scenes From Start To Finish, With The Film Staying Focused Entirely On The Investigation Angle. Overall, A Watchable Crime Investigation Thriller. A Perfect Weekend Watch (3.25/5) 🤝
— Trendswood (@Trendswoodcom) November 13, 2026
பெரும்பாலும் விறுவிறுப்பான, தேவையற்ற விஷயங்கள் இல்லாத, எதிர்பாராத திருப்பங்களைக் கொண்ட ஒரு புலனாய்வுத் திரில்லர் படம்தான் ஜான் டே. ஆரம்பம் முதல் இறுதி வரை கதையை மையமாகக் கொண்ட படம், தேவையற்ற திருப்பங்களுக்கு இல்லாத, இப்படங்களில் மிகவும் உண்மையாக இருந்து, அதன் கச்சிதமான திரைக்கதையால் ரசிகர்களை ஈர்க்கிறது.
ஜான் டே படத்தில் நடிகர்களின் நடிப்பு எப்படி:
முக்கிய கதாபாத்திரங்கள் அனைவரும் ஏதோ ஒரு விதமான மன அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கும் அரிதான படங்களில் இதுவும் ஒன்று, இது கதைக்கு வலுவான உணர்ச்சிப்பூர்வமான தாக்கத்தை கொடுக்கிறது. இதில் அர்ஜுன் தாஸ் காவலராகவும், சச்சனா நடராஜன் புலனாய்வு காவலராகவும் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: கிரீஸ் வெட்டிங்.. அனிருத் – காவியா மாறனின் திருமண செலவு மொத்தம் எவ்வளவு தெரியுமா?
ஜான் டே படத்தின் கதைக்களம் என்ன:
இந்த படத்தின் கதைக்களத்தை ஒரே வார்த்தையில் சொல்லவேண்டும் என்றால், வெளிநாட்டிலிருந்து இந்திய திரும்பிய குடும்பத்திலிருந்து ஒரு சிறுவன் தொலைந்துவிடுகிறார். அந்த சிறுவனை தேடும் பணியில் இந்த படத்தின் கதை நகர்கிறது. மேலும் அந்த கடத்தல் மற்றும் க்ரைம் செய்யும் நபர் யார் என்பதே இந்த படத்தின் சுவாரஸ்ய விஷயமாக இருக்கிறது.
அர்ஜுன் தாஸின் ஜான் டே படத்தை திரையரங்குகளில் பார்க்கலாமா?:
இந்த படமானது முழுக்க முழுக்க இன்வெஸ்ட்டிகேஷன் திரில்லர் பானையில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் முழுக்க முழுக்க விறுவிறுப்பாக இருக்கும் நிலையில், திரில்லர் மற்றும் சுவாரஸ்யமான கதைகளை விரும்பும் ரசிகர்கள் குடும்பத்துடன் திரையரங்குகள் சென்று பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.