2027-ல் டிரெண்டாகப் போகும் 6 வித்தியாசமான சுற்றுலா பயணங்கள்!
Six Unusual Travel: 2027-ம் ஆண்டில் பேய்கள் தொடர்பான சுற்றுலா, தம்பதிகளுக்கான மலைப்பயணம், கோதிக் பாணி விடுதிகளில் தங்குவது போன்ற வித்தியாசமான பயண முறைகள் பிரபலமடையலாம். ஒரே மாதிரியான பொழுதுபோக்கு ஆர்வங்களைக் கொண்ட புதிய நபர்களுடன் பயணம் செய்வதும், மன அமைதிக்காகத் தூக்கத்தை மையமாகக் கொண்ட சுற்றுலாவும் கவனம் பெறலாம்.
வழக்கமான சுற்றுலா பயணங்களைத் தாண்டி, வித்தியாசமான அனுபவங்களைத் தேடும் ஆர்வம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. அந்த வகையில், 2027-ம் ஆண்டில் சுற்றுலாத் துறையில் பல புதிய மற்றும் வித்தியாசமான பயண முறைகள் பிரபலமடைய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. புதிய இடங்களைப் பார்ப்பதை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாமல், தங்களுடைய விருப்பங்கள், பொழுதுபோக்குகள் மற்றும் மனநலத் தேவைகளுக்கு ஏற்றவாறு பயணங்களைத் திட்டமிட மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அப்படிப்பட்ட ஆறு வித்தியாசமான சுற்றுலாப் போக்குகள் குறித்து பார்க்கலாம்.
Also Read: சிவப்பு அதிசயம்… இந்தியாவின் கிராண்ட் கேன்யனை பார்த்திருக்கீங்களா?
1. பேய்களைத் தேடிச் செல்லும் சுற்றுலா!
சுற்றுலா என்றாலே அழகான மலைப்பகுதிகள், கடற்கரைகள் எனத் திட்டமிடும் காலம் மாறி வருகிறது. இனி மர்மமான இடங்களையும் பேய்கள் இருப்பதாகக் கூறப்படும் பழமையான கட்டிடங்களையும் தேடிச் செல்லும் பயணங்கள் பிரபலமடையலாம். இதற்காகப் பழைய அரண்மனைகள், மர்மமான விடுதிகள் மற்றும் இரவு நேர பேய்கள் தொடர்பான சுற்றுலாக்களைப் பயணிகள் விரும்பலாம்.
2. உறவை மேம்படுத்த மலைப்பயணம்!
தம்பதிகள் தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளையும் மனக்கசப்புகளையும் பேசித் தீர்த்துக்கொள்ள மலைப்பகுதிகளில் ஒன்றாக நடைப்பயணம் மேற்கொள்ளும் முறை கவனம் பெறுகிறது. இயற்கையான சூழலில் செல்போன் உள்ளிட்ட கவனச்சிதறல்களிலிருந்து விலகி மனம் விட்டுப் பேசுவதற்கு இது உதவியாக இருக்கும்.
3. கோதிக் பாணி தங்கும் விடுதிகள்!
நவீன வசதிகளைக் கொண்ட ஆடம்பர விடுதிகளைத் தாண்டி, பழமையான கட்டிட அமைப்புகள், விண்டேஜ் அலங்காரங்கள், மங்கலான விளக்குகள் கொண்ட கோதிக் பாணி விடுதிகளில் தங்குவதற்கும் பயணிகள் ஆர்வம் காட்டலாம்.
4. பொழுதுபோக்கிற்காகப் புதியவர்களுடன் பயணம்!
புகைப்படம் எடுத்தல், ஓவியம், விளையாட்டு, நட்சத்திரங்களை ரசித்தல் போன்ற ஒரே மாதிரியான ஆர்வங்களைக் கொண்ட முன்பின் தெரியாத நபர்களுடன் இணைந்து பயணம் செய்வது மற்றொரு புதிய போக்காக உருவெடுக்கலாம். இதன் மூலம் புதிய நட்புகளையும் உருவாக்க முடியும்.
5. தூக்கத்திற்காகத் திட்டமிடப்படும் சுற்றுலா!
சுற்றுலா சென்றால் அதிகாலையில் எழுந்து இடங்களைச் சுற்றிப் பார்ப்பது வழக்கம். ஆனால், சோர்வைப் போக்கி நிம்மதியாகத் தூங்குவதற்காகவே விடுமுறையைத் திட்டமிடும் ‘ஸ்லீப் டூரிசம்’ முறையும் பிரபலமாகலாம். அமைதியான அறைகள், வசதியான படுக்கைகள் மற்றும் ஓய்வுக்கான சிறப்பு வசதிகள் இதில் இடம்பெறும்.
Also Read: சிவப்பு அதிசயம்… இந்தியாவின் கிராண்ட் கேன்யனை பார்த்திருக்கீங்களா?
6. மீண்டும் குழந்தைப் பருவத்திற்குத் திரும்பும் பயணம்!
பெரியவர்களாக வளர்ந்த பிறகு வேலை, குடும்பப் பொறுப்புகள் எனப் பலவற்றில் மூழ்கிவிடுகிறோம். இதிலிருந்து சிறிது நேரம் விடுபட்டு குழந்தைப் பருவ மகிழ்ச்சியை மீண்டும் அனுபவிக்கச் சுற்றுலா செல்லும் ஆர்வம் அதிகரிக்கலாம். பொழுதுபோக்குப் பூங்காக்கள், விளையாட்டுகள் மற்றும் பழைய நினைவுகளைத் தூண்டும் செயல்பாடுகள் இந்தப் பயணங்களில் முக்கியத்துவம் பெறும்.