AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

உங்களின் மெய்யழகன் யார்? எமோஷனல் வெளிப்பாட்டில் பிக் பாஸ் வீடு!

Bigg Boss 10 Tamil Promo: தமிழில் இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் விறுவிறுப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் ஜூனியர் பிக் பாஸ் டாஸ்கானது ஓரளவு நன்றாகவே இருந்தது. அந்த விதத்தில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், இந்த வீட்டில் தங்களின் மெய்யழகன் யார் என்பது குறித்து சக போட்டியாளர்கள் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

உங்களின் மெய்யழகன் யார்? எமோஷனல் வெளிப்பாட்டில் பிக் பாஸ் வீடு!
பிக் பாஸ் 10 தமிழ் ப்ரோமோImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 13 Nov 2026 16:13 PM IST

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் (Star Vijay TV) மக்கள் மத்தியில் அதிகமாக பார்க்கப்படும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஒன்றுதான் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10). இந்த நிகழ்ச்சியானது தமிழில் ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் நிலையில், 2026ம் ஆண்டிற்கான பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி கடந்த, செப்டம்பர் 6ம் தேதி முதல் தொடங்கியிருந்தது. இந்த நிகழ்ச்சியை சீசன் 8 முதல் நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுப்பாளராக தொகுத்துவருகிறார். கடந்த வாரத்தில் இந்த பிக் பாஸ் வீட்டி டபுள் எவிக்ஷன் நடைபெற்றிருந்த நிலையில், அக்ஷிதா மற்றும் அஸ்மிதா இருவருமே வெளியேற்றப்பட்டிருந்தனர். அதே போல இந்த வாரத்திலும் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் ஒரு எவிக்ஷன் இருக்கும் என கூறப்படுகிறது. அது முத்தழகியாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது.

பிக் பாஸில் ஜூனியர் பிக் பாஸ் என்ற டாஸ்க் நடக்கும் நிலையில், அன்சர் ஜூனியர் பிக் பாஸாக இருக்கிறார். இந்நிலையில் இவர் மற்ற போட்டியாளர்களுக்கு, இந்த வீட்டில் உங்களின் மெய்யழகன் யார் என்ற டாஸ்க் கொடுத்துள்ளார். அது தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: ஜேசனின் கேம் பிளே இதான்.. ஜேசனை கேம் தந்திரம் குறித்து பேசிய LP – வினோத் பாபு – ப்ரோமோ!

பிக் பாஸில் நடக்கும் உங்களின் மெய்யழகன் யார் என்ற டாஸ்க்:

இந்த ப்ரோமோவில், உங்களின் மெய்யழகன் யார் என போட்டியாளர்கள் தங்களின் ஷாக் போட்டியாளர்களின் ஒருவரை தேர்வு செய்யவேண்டும். அந்த விதத்தில், முதலில் எழுந்த சாதிகா, எதையும் எதிர்பார்க்காமல் எனக்கு அன்பை மட்டும் கொடுப்பவர் முகேஷ் என கூறினார். அதன் பிறகு வந்த அவினாஷ், ஜேசன் தனக்கு ஒரு அரவிந்த் சுவாமி என கூறியிருந்தார். மேலும் தன்யா டிடிஃஎப் வாசனை கூறியிருந்தார்.

இதையும் படிங்க: இது ராம யுகம்.. முதல் வாரத்தின் முடிவில் உலகமெங்கும் ராமாயணா படம் வசூல் எவ்வளவு தெரியுமா?

அதன்பிறகு வந்த வினோத் பாபுவும், டிடிஃஎப் வாசன் பற்றி கூறியிருந்தார். அதில் எமோஷனலாக பேசிய வினோத் பாபு, அவனுக்கு நிஜத்துக்கும் ஒன்றும் தெரியாது. இந்த கேமில் உன்னை அடிப்பார்கள் என அவருக்கு தெரியவில்லை. என்னடா இவன இப்படி பண்ணுறாங்கனு இருக்கும் என வினோத் பாபு அதில் எமோஷனலாக பேசி கண்ணீர் விட்டிருந்தார். இது தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 68வது நாளின் 3வது ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:

இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 10வது வாரமானது ஆரம்பத்தில் சுமாராகவே இருந்தது. தற்போது இதில் இந்த வாரம் உள்ள நிலையில், எமோஷனலான டாஸ்கை போட்டியாளர்களுக்கு அன்சர் கொடுத்திருந்தார். இந்த டாஸ்க் மற்ற போட்டியாளர்களின் எமோஷனல் மற்றும் அவரக்ளின் மெய்யழகன் இந்த வீட்டில் யார் என்பதை கூறும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us