Scene Movie: 9 நாட்கள் முடிவில்… சூர்யாவின் சீன் படம் தமிழகத்தில் மொத்தம் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?
Scene Movie TN Collection: தென்னிந்திய மக்கள் மத்தியில் சினிமாவில் லீட் நடிகர்களில் ஒருவராக அறியப்படுபவர் தி ஒன் சூர்யா. இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக மிக பிரம்மாண்டமாக வெளியான படம் சீன். மலையாள இயக்குநர் இயக்கத்தில் வெளியான இப்படம் 9 நாட்கள் முடிவில் தமிழகத்தில் மொத்தம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா (Suriya) தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் இதுவரை மொத்தம் 47 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் இறுதியாக 47வது திரைப்படமாக பான் இந்திய அளவில் வெளியானது தான் சீன் (Scene Movie). இந்த படத்தை மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் (Director Jithu Madhavan) இயக்க, சூர்யா மற்றும் ஜோதிகா தங்களின் ழகரம் ஸ்டூடியோஸ் என்ற புது நிறுவனத்தின் கீழ் தயாரித்திருந்தனர். இந்த படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை நஸ்ரியா நஸீம் (Nazriya Nazim) நடித்துள்ளார். இப்படத்தில் மலையாள இளம் நடிகர் நஸ்லென் (Naslen) வில்லன் வேடத்தில் நடித்திருந்த நிலையில், சிறப்பாக வரவேற்கப்பட்டிருந்தார். இப்படம் 2026ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது.
இந்த படமானது வெளியாகி கிட்டத்தட்ட சில நாட்களிலே உலகமெங்கும் சுமார் ரூ 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. இன்றுடன் (13/11/2026) இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 9 நாட்களை கடந்துள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.




இதையும் படிங்க: முடிவுகளைப் பற்றி எனக்குக் கவலையில்லை.. நடிகர் யாஷ் பகிர்ந்த விஷயம்!
சூர்யாவின் சீன் படத்தின் தமிழக வசூல் விவரம்:
இந்த படத்தில் நடிகர் சூர்யா பார்வையற்ற நபராக நடித்துள்ளார். அவர் இதில் ஒரு புலனாய்வு அதிகாரியாக நடித்துள்ளார். இதில் அவருக்கு இணையான வேடத்தில் நஸ்ரியா நடித்துள்ளார். இவர் கிட்டத்தட்ட 12ன் ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் இந்த படத்தின் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: அன்பே சிவம் போன்ற படங்களை மீண்டும் இயக்காததற்கு இதுதான் காரணம் – இயக்குநர் சுந்தர் சி ஓபன் டாக்
சூர்யாவின் சீன் படமானது வெளியாகி 9 நாட்களை கடந்திருக்கும் நிலையில், தமிழகத்தில் மட்டும் இப்படமானது சுமார் ரூ 85 கோடிகளுக்கு மேல் வசூலை ஈட்டியுள்ளதாம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை, சீன் பட தமிழக ரிலீஸ் உரிமையை பெற்ற சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யா – நஸ்ரியாவின் சீன் திரைப்படத்தின் தமிழக வசூல் விவரம் குறித்து வெளியான பதிவு:
#Scene storms past ₹85 CRORE TN GROSS by the 9th Day🔥
The one @Suriya_offl sir turns the box office into a MASSIVE SAMBAVAM! 💥 A thunderous weekend and phenomenal collections setting the screens on fire! 🔥👑
@Suriya_offl @jithumadavan #Jyotika #NazriyaFahadh #Naslen @sushintdt @Ashwini90372999 @masharhamsa_ @_VishnuGovind @ChethanDsouza @Dravid_Selvam @rajpriyan007 @kabilanchelliah @ZhagaramOffl @rajsekarpandian @2D_ENTPVTLTD @SakthiFilmFctry @pharsfilm @SonyMusicSouth @SceneTheMovie @Linqmarqet @prosathish
— Sakthi Film Factory (@SakthiFilmFctry) November 14, 2026
இந்த சீன் திரைப்படமானது தற்போதும் திரையரங்குகளில் சிறப்பா வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த 2026ம் ஆண்டில் சூர்யாவின் நடிப்பில் வெளியான 3வது திரைப்படமாக இந்த சீன் படமானது அமைந்துள்ளது. இதற்கு முன் கருப்பு மற்றும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என் இரு திரைப்படங்கள் வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரு படங்களுமே சுமாரா ரூ 200 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.