AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நான் இத சொல்லியே ஆகனும், நீ அவ்வளவு அழகு… 18 ஆண்டுகளைக் கடந்தது சூர்யாவின் வாரணம் ஆயிரம் படம் – கொண்டாடும் ரசிகர்கள்!

18 Years Of Vaaranam Aayiram Movie | நடிகர் சூர்யாவின் நடிப்பில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் வாரணம் ஆயிரம். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 18 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

நான் இத சொல்லியே ஆகனும், நீ அவ்வளவு அழகு… 18 ஆண்டுகளைக் கடந்தது சூர்யாவின் வாரணம் ஆயிரம் படம் – கொண்டாடும் ரசிகர்கள்!
வாரணம் ஆயிரம் படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 14 Nov 2026 16:30 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா (Actor Suriya). இவரது நடிப்பில் தமிழ் மொழியில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி இந்திய சினிமாவில் அதிக அளவில் இரட்டை அல்லது மூன்று வேடங்களில் நடிகர்கள் நடித்து வருவது மிகவும் இயல்பான ஒன்றாக உள்ளது. அந்த வகையில் நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பலப் படங்களில் இரண்டு அல்லது மூன்று வேடங்களில் படங்களில் நடித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நடிகர் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் வாரணம் ஆயிரம். இதில் நடிகர் சூர்யா அப்பா – மகன் என இரட்டை வேடத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் எழுதி இயக்கி உள்ளார். படம் கடந்த நவம்பர் மாதம் 14-ம் தேதி 2008-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யா உடன் இணைந்து நடிகர்கள் சிம்ரன், ரம்யா, சமீரா ரெட்டி என மூன்று நாயகிகள் நடித்து உள்ளனர். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

18 ஆண்டுகளைக் கடந்தது சூர்யாவின் வாரணம் ஆயிரம் படம்:

ரொமாண்டிக் ட்ராமா பாணியில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் சூர்யா ஒரு ரொமாண்டிக் மேனாக நடித்து ரசிகர்களிடையே அதிக அளவில் பாராட்டைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் சூர்யாவின் காதல் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் வெளியான பாடல்கள் என இவை அனைத்தும் இணைந்து ஒரு கலவையாக ரசிகர்களை கொண்டாட வைத்தது குறிப்பிடத்தக்கது. படம் திரையரங்குகளில் வெளியானதில் இருந்து தற்போது 18 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இதனை ரசிகர்கள் வெகுவாகக் கொண்டாடி வருகின்றனர்.

Also Read… தல-யின் தீபாவளி.. அஜித் குமார் – ஷாலினி அஜித் குமாரின் தீபாவளி கிளிக்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… தனுஷின் 57-வது படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்? வைரலாகும் தகவல்

Follow Us