IND vs NZ: இந்தியா vs நியூசிலாந்து 5வது ஒருநாள்.. வானிலை மாற்றமா? போட்டி நடைபெறுமா?
India vs New Zealand 5th ODI: இந்தியா-நியூசிலாந்து ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டி நாளை, நவம்பர் 15 அன்று மவுண்ட் மவுங்கானுயில் நடைபெறுகிறது. 2-1 என முன்னிலையில் உள்ள இந்திய அணி தொடரை வெல்ல தீவிரமாக உள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் களமிறங்கும் இந்திய அணி, சோனி ஸ்போர்ட்ஸ் மற்றும் சோனி லிவ்-வில் காலை 7:30 மணி முதல் நேரடியாக ஒளிபரப்பப்படும் இந்த போட்டியில் வெற்றி பெற போராடும்.
இந்தியா-நியூசிலாந்து ஒருநாள் தொடர் (IND vs NZ) தற்போது விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருக்கிறது. 4 போட்டிகளுக்குப் பிறகு, இந்திய அணி (Indian Cricket Team) தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. தொடரின் முடிவைத் தீர்மானிக்கவிருக்கும் இறுதி ஒருநாள் போட்டி நாளை அதாவது 2026 நவம்பர் 14ம் தேதி நடைபெற உள்ளது. இந்திய அணி தொடரை 3-1 என்ற கணக்கில் வெல்லும் அல்லது நியூசிலாந்து அணி தொடரை 2-2 என சமன் செய்யும். நான்காவது ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து அணி 333 ரன்களை எடுத்திருந்தது.
பதிலுக்கு ஆடிய இந்தியா, வெறும் 89 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 244 ரன்கள் என்ற மிகப்பெரிய வித்தியாசத்தில் போட்டியை இழந்தது. ரன்கள் அடிப்படையில், ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா சந்தித்த இரண்டாவது மிகப்பெரிய தோல்வி இதுவாகும். இந்தநிலையில், இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது ஒருநாள் எங்கே, எப்போது நடைபெறுகிறது உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: இந்தியா – நியூசிலாந்து டெஸ்ட்.. முக்கிய பந்துவீச்சாளரை நீக்கிய பிசிசிஐ.. ஏன் தெரியுமா?




ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்:
சுப்மன் கில் டெஸ்ட் தொடருக்குத் தயாராகி வருவதால், ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் இந்திய அணிக்குத் தலைமை தாங்குவார். ருதுராஜ் கெய்க்வாட் மீண்டும் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கலாம். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி வென்றால் தொடரை கைப்பற்றும்.
போட்டியை எப்போது, எங்கே நேரலையில் பார்க்கலாம்?
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது ஒருநாள் போட்டி, நாளை அதாவது 2026 நவம்பர் 15 ஆம் தேதி மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெறும். இரு அணிகளுக்கு இடையிலான இந்த போட்டி இந்திய நேரப்படி காலை 7:30 மணிக்குத் தொடங்கும்.
இந்த போட்டியை காண விரும்புவோர் தொலைக்காட்சியில் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் கண்டுகளிக்கலாம். அதேநேரத்தில், ஆன்லைனில் பார்க்க விரும்புவோர் போட்டியின் நேரடி ஒளிபரப்பு சோனி லிவ் ஆப்பில் பார்க்கலாம்.
போட்டியில் மழை குறுக்கிடுமா?
ஒருநாள் தொடரின் முதல் 3 போட்டிகளை மழை குறுக்கிட்டது. இருப்பினும், நான்காவது போட்டி எந்த இடையூறும் இன்றி நடைபெற்றது. ஐந்தாவது போட்டியின்போது மவுண்ட் மவுங்கானுயில் தெளிவான வானம் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. நியூசிலாந்து நேரப்படி பிற்பகல் 3:00 மணிக்கு போட்டி தொடங்கும். அப்போது வானத்தில் மேகங்கள் தோன்றக்கூடும், ஆனால் மழை பெய்ய வாய்ப்பில்லை.
ALSO READ: காத்திருக்கும் சத வாய்ப்பு.. கரை சேர்வார்களா ரோஹித் – கோலி..? எதிர்பார்க்கும் ரசிகர்கள்!
இந்திய அணி:
ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி , ருதுராஜ் கெய்க்வாட், நமன் தீர், திலக் வர்மா, அக்சர் படேல், இஷான் கிஷன், குமார் குஷாக்ரா, அகிப் நபி, குர்னூர் பிரார், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், குல்தீப் தாகூர், குல்தீப் யாஷ் தாகூர்.
நியூசிலாந்து அணி:
மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), ஃபின் ஆலன், வில் யங், மைக்கேல் பிரேஸ்வெல், ஜோஷ் கிளார்க்சன், நிக் கெல்லி, டீன் ஃபாக்ஸ்கிராஃப்ட், டிம் சீஃபர்ட், மைக்கேல் ஹே, கிறிஸ்டியன் கிளார்க், ஜேக்கப் டஃபி, பிரட் ராண்டெல், பிளேயர் டிக்னர், மேத்யூ ஃபிஷர்