AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND vs NZ: இந்தியா – நியூசிலாந்து டெஸ்ட்.. முக்கிய பந்துவீச்சாளரை நீக்கிய பிசிசிஐ.. ஏன் தெரியுமா?

India Test Squad Update: பிசிசிஐ நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது. இளம் வேகப்பந்து வீச்சாளர் குர்னூர் பிரார் சேர்க்கப்பட்டுள்ளார், அதேநேரத்தில் குல்தீப் யாதவ் விடுவிக்கப்பட்டுள்ளார். விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அணியில் இணைந்துள்ளார். ஒருநாள் தொடரில் பிரார் சிறப்பாக செயல்பட்ட நிலையில், குல்தீப் சொதப்பினார். இந்த மாற்றங்கள் டெஸ்ட் தொடருக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

IND vs NZ: இந்தியா – நியூசிலாந்து டெஸ்ட்.. முக்கிய பந்துவீச்சாளரை நீக்கிய பிசிசிஐ.. ஏன் தெரியுமா?
குன்னூர் பிரார்Image Source: AP
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 14 Nov 2026 15:23 PM IST

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, பிசிசிஐ (BCCI) தேர்வுக் குழு இந்திய டெஸ்ட் அணியில் 2 முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது. இந்த டெஸ்ட் தொடர் 2026 வருகின்ற 2026 நவம்பர் 19ம் தேதி முதல் வெலிங்டனில் தொடங்குகிறது. இளம் வேகப்பந்து வீச்சாளர் குர்னூர் பிரார், இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேநேரத்தில், சைனாமன் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் டெஸ்ட் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, குல்தீப் யாதவ் இந்தியா திரும்பி ரஞ்சி தொடரில் விளையாடலாம். இந்திய அணிக்கு (Indian Cricket Team) மற்றொரு நல்ல செய்தி என்னவென்றால், நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் வெலிங்டன் சென்று டெஸ்ட் அணியில் இணைந்துள்ளார்.

ALSO READ: காத்திருக்கும் சத வாய்ப்பு.. கரை சேர்வார்களா ரோஹித் – கோலி..? எதிர்பார்க்கும் ரசிகர்கள்!

குர்னூர் பிரார் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதால், நியூசிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் பங்கேற்க மாட்டார். பிராருக்கு பதிலாக வேறு எந்த வீரரையும் பிசிசிஐ தேர்வுக் குழு இன்னும் அறிவிக்கவில்லை. நியூசிலாந்து சுற்றுப்பயணம் குர்னூர் பிராருக்கு மிகவும் சிறப்பானதாக அமைந்துள்ளது. பிரார் நியூசிலாந்து அணிக்கு எதிராக இதுவரை 3 ஒருநாள் போட்டிகளில் 9 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். தற்போது ஒருநாள் தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்தவர் இவரே.

ஒருநாள் தொடரில் குல்தீப் யாதவுக்கு ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாட வாய்ப்பு கிடைத்தது. அதிலும், சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். பே ஓவலில் நடந்த 4வது ஒருநாள் போட்டியில் குல்தீப் யாதவ் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டார். இந்தப் போட்டியில், குல்தீப் 8 ஓவர்களில் 73 ரன்களை விட்டுக்கொடுத்தார். ஆனால், ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை.

இந்தியாவின் அப்டேட் செய்யப்பட்ட டெஸ்ட் அணி


சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் (துணை கேப்டன்), தேவ்தத் பாடிக்கல், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அன்ஷுல் காம்போஜ், ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், முகமது சிராஜ், குர்னூர் பிரார்.

இந்தியாவின் அப்டேட் செய்யப்பட்ட ஒருநாள் போட்டி அணி

ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, திலக் வர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்/துணை கேப்டன்), அக்சர் படேல், நமன் தீர், ஆக்கிப் நபி, ருதுராஜ் கெய்க்வாட், அர்ஷ்தீப் சிங், குமார் குஷாக்ரா (விக்கெட் கீப்பர்), முகமது சிராஜ்

Follow Us