AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தெலங்கானாவில் 17 வயது கிரிக்கெட் வீராங்கனை தற்கொலை.. அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்!

17 Year Old Female Cricketer Self Harm: தெலங்கானாவைச் சேர்ந்த 17 வயது பெண் கிரிக்கெட் வீராங்கனை நந்தினி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, சமீபத்தில் பிசிசிஐ (BCCI) 19 வயதுக்குட்பட்டோர் அணியில் நந்தினி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலங்கானாவில் 17 வயது கிரிக்கெட் வீராங்கனை தற்கொலை.. அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்!
Cricket Accident
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 13 Nov 2026 22:08 PM IST

தெலங்கானாவைச் சேர்ந்த 17 வயது பெண் கிரிக்கெட் வீராங்கனை நந்தினி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, சமீபத்தில் பிசிசிஐ (BCCI) 19 வயதுக்குட்பட்டோர் அணியில் நந்தினி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று அதாவது 2026 நவம்பர் 13ம் தேதி தெலங்கானாவின் விகாராபாத் மாவட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டார். தெலங்கானாவை அடுத்த விகாராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் நந்தினி உயிரிழந்ததைத் தொடர்ந்து, உள்ளூர் இளைஞர்கள் இருவர் அவருக்குத் தொல்லை கொடுத்ததே தற்கொலைக்கு காரணம் என உயிரிழந்த நந்தினியின் குடும்பத்தினரும் உறவினர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ALSO READ: யூத் ஒலிம்பிக் பேட்மிண்டனில் வரலாறு படைத்த 15 வயது இந்திய வீராங்கனை! வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை!

என்ன நடந்தது..? முழு விவரம்:

பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோர் அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கிரிக்கெட் வீராங்கனை நந்தினி வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார். தெலங்கானாவை அடுத்த விகராபாத் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயதான நந்தினி யலால் மண்டலத்தின் சங்கய்யப்பள்ளியைச் சேர்ந்தவர். இவர் விகாராபாத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கிப் படித்து வந்தார்.

கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டு சிறப்புப் பயிற்சி பெற்று, கிரிக்கெட்டில் தனது நல்ல திறமையை வெளிப்படுத்தினார். இவரது திறமையின் காரணமாக சமீபத்தில் பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோர் அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், கிரிக்கெட்டில் நல்ல எதிர்காலம் இருந்ததாகவும் தெரிகிறது. இந்தநிலையில், கடந்த சில மாதங்களாக நந்தினி வசிக்கும் அதே பகுதியை சேர்ந்த அனில் மற்றும் கிருஷ்ணா என்ற 2 இளைஞர்கள் நந்தினியைத் துன்புறுத்தி வந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். அனில் காதல் என்ற பெயரில் அவரைத் துன்புறுத்திய நிலையில், கிருஷ்ணா என்ற நபர் அனிலை காதலிக்க சொல்லி நந்தினியிடம் வற்புறுத்தியதாக உறவினர்கள் கூறுகின்றனர்.

நந்தினியின் மரணத்திற்குக் காரணமானவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று கூறி, விகாராபாத் நகரில் குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர். இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்து, பதற்றமான சூழல் உருவானது.

ALSO READ: வீரருக்குப் பலத்த காயம்.. ஸ்ட்ரெச்சரில் கொண்டு செல்லப்பட்ட சோகம்!

இன்னும் சில நாட்களில் இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட தங்கள் மகள், மீள முடியாத ஒரு நிலைக்குச் சென்றுவிட்டதால், பெற்றோர் கதறி அழுது கொண்டிருக்கின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும், நந்தினியின் தற்கொலைக்கான சரியான காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. காவல்துறையின் விசாரணைக்குப் பிறகு உண்மைகள் வெளிவர வாய்ப்புள்ளது.

Follow Us