யூத் ஒலிம்பிக் பேட்மிண்டனில் வரலாறு படைத்த 15 வயது இந்திய வீராங்கனை! வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை!
Tanvi Patri Creates History: வியாழக்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில் நடப்பு உலக ஜூனியர் சாம்பியனான சீனாவின் ஜாங் யி சினை எதிர்கொண்ட தன்வி, கடைசி வரை போராடியும் தங்கப் பதக்கத்தைத் தவறவிட்டார். ஒரு மணி நேரம் 22 நிமிடங்கள் நீடித்த பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் 15-21, 21-13, 26-24 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
நவம்பர் 6, 2026: இந்திய பேட்மிண்டன் வரலாற்றில் 15 வயதே ஆன இளம் வீராங்கனை தன்வி பத்ரி புதிய சாதனை படைத்துள்ளார். செனகல் நாட்டின் டாக்கரில் நடைபெற்ற யூத் ஒலிம்பிக் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம், இந்தப் பிரிவில் யூத் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
வியாழக்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில் நடப்பு உலக ஜூனியர் சாம்பியனான சீனாவின் ஜாங் யி சினை எதிர்கொண்ட தன்வி, கடைசி வரை போராடியும் தங்கப் பதக்கத்தைத் தவறவிட்டார். ஒரு மணி நேரம் 22 நிமிடங்கள் நீடித்த பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் 15-21, 21-13, 26-24 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
6 மேட்ச் பாயிண்ட்களைத் தடுத்து போராடிய தன்வி
The first of many! 🌟
Tanvi Patri reacts after winning a historic Youth Olympic badminton medal for India at #Dakar2026. 🥈🇮🇳
#YouthOlympics https://t.co/z6Z36Tekiw
— Olympic Khel ™ (@OlympicKhel) November 5, 2026
விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் செட்டில் தொடக்கத்தில் தடுமாறிய தன்வி, பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 3-5 என்ற புள்ளிக் கணக்கில் பின்தங்கியிருந்த அவர், தொடர்ச்சியாக 7 புள்ளிகளைப் பெற்று 10-5 என முன்னிலை பெற்றார். வலைக்கு அருகே சிறப்பான ஷாட்களையும், துல்லியமான பந்துப் பரிமாற்றங்களையும் வெளிப்படுத்திய அவர், 25 நிமிடங்களில் முதல் செட்டை 21-15 எனக் கைப்பற்றினார்.
இரண்டாவது செட்டிலும் 4-0 என முன்னிலை பெற்று அசத்தினார். ஆனால், ஆட்டத்தின் சூழலில் ஏற்பட்ட மாற்றத்தைப் பயன்படுத்திக் கொண்ட சீன வீராங்கனை ஜாங், சிறப்பாக விளையாடி 21-13 என இரண்டாவது செட்டைக் கைப்பற்றினார்.
மேலும் படிக்க: கேப்டன்சியில் எனக்கும் சுதந்திரம் இல்லை.. பல நாள் உண்மையை உடைத்த சச்சின்!
இதனால் வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது செட் நடைபெற்றது. இதில் ஜாங் 19-10 என முன்னிலை பெற்றபோதும், தன்வி மனம் தளராமல் போராடி 19-15 என நெருங்கினார். ஒரு கட்டத்தில் ஜாங் 5 மேட்ச் பாயிண்ட்களைப் பெற்றார். அவற்றை அனைத்தையும் தன்வி தடுத்து, தங்கப் பதக்கத்தை வெல்ல தனக்குக் கிடைத்த 3 வாய்ப்புகளையும் பயன்படுத்த முயன்றார். இருப்பினும், இறுதியில் 26-24 என ஜாங் வெற்றி பெற்றார்.
இந்திய பேட்மிண்டனுக்கு பெருமை
இதற்கு முன்பு ஆடவர் ஒற்றையர் பிரிவில் எச்.எஸ். பிரணாய் (2010), லக்ஷ்யா சென் (2018) ஆகியோர் யூத் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளனர். 2018ஆம் ஆண்டு லக்ஷ்யா சென் கலப்பு அணிப் பிரிவில் தங்கமும் வென்றிருந்தார்.
தன்வியின் சாதனை குறித்து இந்திய பேட்மிண்டன் சங்கத்தின் பொதுச் செயலாளர் பாராட்டு தெரிவித்துள்ளார். 15 வயதிலேயே சர்வதேச அரங்கில் வெள்ளிப் பதக்கம் வென்றிருப்பது இந்தியாவுக்குப் பெருமையான தருணம் என்றும், அவரது விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இளம் விளையாட்டு வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: இது எனக்கும் உத்வேகம்.. பாரா ஆசியப் பதக்கம் வென்றவர்களைச் சந்தித்த பிரதமர் மோடி!
தங்கப் பதக்கத்தைத் தவறவிட்டாலும், யூத் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று இந்திய மகளிர் பேட்மிண்டனில் புதிய வரலாறு படைத்துள்ள தன்வி பத்ரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.