Babar Azam: முதல் தர போட்டியிலும் பார்ம் அவுட்.. பேட்டை தரையில் ஓங்கி அடித்த பாபர் அசாம்..!
Babar Azam's Form Woes: இலங்கை டெஸ்ட் தொடருக்கு முன்னதாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் குவாய்ட்-இ-அஸாம் கோப்பையில் மோசமான ஃபார்ம் மற்றும் ஷாட் தேர்வு காரணமாக பின்னடைவை சந்தித்துள்ளார். 42 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்த மனவேதனையில், தனது பேட்டினை தரையில் அடித்து கோபத்தை வெளிப்படுத்தினார். இந்த சம்பவம் அவரது ஃபார்ம் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
வருகின்ற 2026 நவம்பர் 9ம் தேதி ராவல்பிண்டியில் தொடங்கும் இலங்கைக்கு எதிரான (PAK vs SL) டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, ஃபார்முக்கு வர முயற்சித்து வரும் பாகிஸ்தான் டெஸ்ட் கேப்டன் பாபர் அசாம் (Babar Azam), ஒரு பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளார். குவாய்ட்-இ-அஸாம் கோப்பைத் தொடரில் FATA அணிக்கு எதிராக லாகூர் ஒயிட்ஸ் அணிக்காக விளையாடிய பாபர், இரு இன்னிங்ஸ்களிலும் முறையே 28 மற்றும் 42 ரன்களை மட்டுமே எடுத்தார். இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு மோசமான ஷாட் மூலம் ஆட்டமிழந்த பிறகு, மிகுந்த மனவேதனை அடைந்த பாபர் அசாம், ட்ரெஸ்ஸிங் திரும்பும்போது தனது பேட்டினை கொண்டு தரையில் ஓங்கி அடித்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.




42 ரன்கள் எடுத்தும் தவறான ஷாட் செலக்ஷன்:
🚨 BABAR AZAM AGAIN FLOPS..!!
– Babar Azam dismissed for 42 Runs off 78 Balls.
– Frustrated after his dismissal, Babar angrily hit his bat on the pitch. https://t.co/TAw5OGd0VP
— Talha Digital. (@CallMeDigital1_) November 6, 2026
இரண்டாவது இன்னிங்ஸில், பாபர் அசாம் 77 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து சிறப்பான ஃபார்மில் இருந்தார். அப்போது, FATA பந்துவீச்சாளர் ஷாஹித் அஜீஸ் ஸ்டம்ப் கோட்டிற்கு வெளியே நகர்ந்துகொண்டிருந்த ஒரு பந்தில், பாபர் அடிக்க முயற்சித்தார். அதாவது, பந்தை விடுவிப்பதற்குப் பதிலாக, பாபர் தனது பேட்டினை உடலிலிருந்து விலக்கி நகர்த்தியதால், முதல் ஸ்லிப்பில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். இந்தத் தவறு, அவரது ஃபார்ம் மற்றும் ஷாட் தேர்வு குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
போட்டியில் நடந்தது என்ன..?
டாஸ் தோற்று முதலில் பேட் செய்த ஃபாதா அணி, ஃபவாத் அர்ஷத்தின் (115) நிதானமான சதத்தின் உதவியால் முதல் இன்னிங்ஸில் 362 ரன்கள் என்ற பிரம்மாண்டமான ஸ்கோரை பதிவு செய்தது. பதிலுக்கு ஆடிய லாகூர் ஒயிட்ஸ் அணி, அலி ஜர்யாப் (51) மட்டுமே ஓரளவு போராடிய நிலையில், வெறும் 234 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ALSO READ: ஐபிஎல் 2027 ஏலத்தில் பங்கேற்பா..? மறுத்த பாகிஸ்தான் வீரர் முகமது அமீர்!
ஃபாதா அணி இரண்டாவது இன்னிங்ஸிலும் தங்களது ஆதிக்கத்தைத் தொடர்ந்தது. முகமது ஃபாரூக்கின் சிறப்பான சதத்தின் உதவியால் 283 ரன்கள் எடுத்தது. 412 ரன்கள் என்ற பிரம்மாண்டமான இலக்கை துரத்திய லாகூர் அணி, இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 170 ரன்களுக்கு சுருண்டு, 241 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை இழந்தது. லாகூர் அணிக்காக விக்கெட் கீப்பர் ஜைன் பின் ஃபாரூக் 44 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரராக இருந்தார். பாபர் இருந்தபோதிலும், அவரது அணி தோல்வியை சந்தித்தது.