இலங்கை கடற்படையால் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது.. 1 மாத சிறை வாசத்துக்கு பின் விடுதலை.. தமிழகம் வந்தடைந்த 8 மீனவர்கள்!
Rameswaram Fishermen Released : கடலில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 8 மீனவர்கள் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட நிலையில், அவர்கள் விமானம் மூலமாக இன்று வெள்ளிக்கிழமை தமிழக வந்தடைந்தனர் .
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 8 மீனவர்கள் இன்று தமிழகம் வந்தடைந்தனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 8 மீனவர்கள் தங்களது மீன்பிடி படகுகளில் கடந்த அக்டோபர் 3- ஆம் தேதி மீன்பிடிப்பதற்காக ஆழ் கடலுக்கு சென்றனர். அங்கு நெடுந்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படை அதிகாரிகள் தமிழக மீனவர்கள் படகுகளை சுற்றி வளைத்தனர். தொடர்ந்து, அவர்களது படகில் இறங்கி தீவிர சோதனை மேற்கொண்டதுடன், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 8 மீனவர்களையும் கைது செய்து இலங்கைக்கு அழைத்துச் சென்றனர். அவர்களது விசைப் படகுகள், மீன்பிடி வலைகள் உள்ளிட்ட உபகரணங்களையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்கள்
தொடர்ந்து, தமிழக மீனவர்கள் 8 பேரையும் இலங்கை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவர்களிடம் கடற்படை உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அத்துடன், எல்லை தாண்டி மீன்பிடித்தது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டது. இதன் பின்னர், அவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அந்நாட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அதன்படி, ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரும் இலங்கை நாட்டில் உள்ள யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் படிக்க: பள்ளி வேனில் காத்திருந்த சிறுமி.. கழிவறைக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை.. திருவள்ளூரில் வக்கிர புத்தியுடைய வேன் ஓட்டுநர் கைது!




மீனவர்களை விடுவிக்க கோரி மத்திய, மாநில அரசு வலியுறுத்தல்
இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக ராமேஸ்வரம் மீனவர்களை சிறையில் இருந்து விடுவித்து தமிழகம் கொண்டுவர வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் கடிதம் எழுதி இருந்தார். அதன் அடிப்படையில், தமிழக அரசியல் மற்றும் மத்திய அரசு மீனவர்கள் மீட்பதற்காக பல்வேறு கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தது. அதன் வாயிலாக, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இலங்கையிலிருந்து தமிழக வந்தடைந்த 8 மீனவர்கள்
அவர்கள், இலங்கையில் இருந்து நேற்று வியாழக்கிழமை ( நவம்பர் 5- ஆம் தேதி) இரவு விமானத்தில் சென்னை வந்தடைந்தனர். அவர்களை தமிழக அரசு அதிகாரிகள் வரவேற்ற நிலையில், அங்கிருந்து அரசு ஏற்பாடு செய்த வாகனத்தில் ராமேஸ்வரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் பாதுகாப்பாக தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றடைந்தனர். கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்கள் சுமார் 1 மாத காலத்துக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டு தமிழகத்தை வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: EX காதலி எத்தனை பேரை காதலித்துள்ளார்.. திருமணம் ஆகிவிட்டதா.. RTI-இல் 1886 கேள்விகளை எழுப்பிய விழுப்புரம் இளைஞர்