AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

குதிரை பேர வழக்கில் அவசர கைது ஏன்? அதிமுக நிர்வாகியை உடனே விடுவியுங்கள்.. மதுரை நீதிபதி அதிரடி உத்தரவு!

AIADMK Functionary Mannan : தமிழ வெற்றிக் கழக எம்எல்ஏ முஸ்தபாவிடம் குதிரை பேரம் நடத்தியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி மன்னனை சிறையில் அடைக்க மறுப்பு தெரிவித்த மதுரை நீதிமன்றம் உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டது .

குதிரை பேர வழக்கில் அவசர கைது ஏன்? அதிமுக நிர்வாகியை உடனே விடுவியுங்கள்.. மதுரை நீதிபதி அதிரடி உத்தரவு!
அதிமுக நிர்வாகி மன்னன்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 06 Nov 2026 20:56 PM IST

தமிழக வெற்றி கழகத்தின் மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபாவிடம் குதிரை பேரம் பேசியதாக எழுந்த புகாரில் அதிமுக நிர்வாகி மன்னனை போலீசார் கைது செய்திருந்தனர். அவரை விடுவிக்குமாறு மதுரை மாவட்ட நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். மதுரை மத்திய தொகுதியின் எம்எல்ஏவாக இருந்து வருபவர் முஸ்தபா. இவரிடமும், இவரது உதவியாளர் கனி ராஜ் என்பவரிடமும் அதிமுகவின் நிர்வாகி மன்னன் என்பவர் ரூ. 15 முதல் ரூ. 30 கோடி வரை தருவதாகவும், தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து விலகி அதிமுகவில் இணையுமாறு குதிரை பேரம் பேசியதாக தெரிகிறது. அத்துடன், தமிழக வெற்றி கழக ஆட்சிக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் எதிராக வாக்களிக்கும் பட்சத்தில் பேரம் பேசிய தொகை வழங்கப்படும் என்று அதிமுக நிர்வாகி மன்னன் கூறியதாக தெரிகிறது.

அதிமுக நிர்வாகியிடம் 8 மணி நேரம் விசாரணை

இது தொடர்பாக புகார் எழுந்த நிலையில் அதிமுக நிர்வாகி மன்னனை போலீசார் அதிரடியாக கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். சுமார் 8 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற இந்த விசாரணையில் அவரிடம், குதிரை பேரம் பேசியது தொடர்பான பல்வேறு கேள்விகளை போலீசார் எழுப்பி இருந்தனர். இதற்கு, அவர் அளித்த பதில்களை போலீசார் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், அவரை சிறையில் அடைப்பதற்காக மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றனர்.

மேலும் படிக்க: ஊழல் உலகமாக மாறிய பெரியார் அறிவுலகம்.. மக்கள் மன்றத்தில் திமுக நிரந்தரமாக தலை குனிவது உறுதி.. முதல்வர் விஜய் அட்டாக்!

குதிரை பேர வழக்கில் அவசர கைது ஏன்

அங்கு, இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி விசாரணை மேற்கொண்டார். அப்போது, அதிமுக நிர்வாகி மன்னன் தரப்பு வழக்கறிஞர், குதிரை பேர விவகாரம் தொடர்பாக நாளை சனிக்கிழமை ( நவம்பர் 7- ஆம் தேதி) விசாரணைக்கு ஆஜராக கோரி மதுரை போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால், அதற்கு முன்னதாகவே அவசர அவசரமாக மன்னன் கைது செய்யப்பட்டுள்ளார் என்று வாதம் முன் வைக்கப்பட்டது. இதனை கேட்ட நீதிபதி, அதிமுக நிர்வாகி மன்னன் நாளை ஆஜராக கோரி சம்மன் அனுப்பிவிட்டு எதற்காக முந்தைய நாளே கைது செய்தனர் என்று போலீசாரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

சிறையில் அடைக்க மறுத்து விடுவிக்க உத்தரவு

அத்துடன், அதிமுக நிர்வாகி மன்னனை சிறையில் அடைக்க மறுப்பு தெரிவித்த நீதிபதி அவரை உடனே விடுவிக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார். அத்துடன் நாளை சனிக்கிழமை போலீசார் விசாரணைக்கு ஆஜராகுமாறு மன்னனுக்கு நீதிபதி அறிவுறுத்தினார். இதன் காரணமாக, அதிமுக நிர்வாகி மன்னன் சிறையில் அடைக்கப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ளார். நாளை மதுரை போலீசார் முன்னிலையில் மன்னன் ஆஜராக உள்ளார்.

மேலும் படிக்க: திமுகவினர் திராவிடம் பேசுவதே கொள்ள அடிக்கதான்.. ஊழல்வாதிகளை கூண்டோடு கைது செய்க.. மெயின் பாயிண்டில் கை வைத்த மாணிக்கம்!

Follow Us