சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு.. பிப்ரவரி 16ஆம் தேதி தொடக்கம்!
CBSE Board Exam Dates : சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 2027ஆம் ஆண்டு பொதுத்தேர்வு தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 2027 ஆம் ஆண்டு சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், எந்தெந்த தேதிகளில் என்னென்ன பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறவுள்ளன என்பதையும் விரிவாக பார்க்கலாம்.
சிபிஎஸ்இ (CBSE) பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 2027ஆம் ஆண்டு பொதுத்தேர்வு தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் 2027ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வெழுத உள்ள மாணவர்கள் தேர்வு அட்டவணை மற்றும் பாடவாரியான தேர்வு தேதிகள் உள்ளிட்ட விவரங்களை சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.gov.in மூலம் தெரிந்துகொள்ளலாம்.
சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு
2027-ஆம் ஆண்டிற்கான 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணையை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. தேர்வுகள் தொடங்குவதற்கு 101 நாட்களுக்கு முன்பாகவே இந்த கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, 46 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வெழுத உள்ளனர்.
இதையும் படிக்க : தீபாவளிக்கு டிக்கெட் கிடைக்கலையா.. கன்னியாகுமரிக்கு நாளை சிறப்பு ரயில் இயக்கம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு!




10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வு 2027 – கால அட்டவணை
2027-ஆம் ஆண்டு சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதவுள்ள மாணவர்கள் மிகவும் எதிர்பார்த்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற பிப்ரவரி 16, 2027 அன்று தொடங்கவுள்ள தேர்வுகளுக்கான கால அட்டவணையை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. வருகிற பிப்ரவரி 16, 2026 அன்று தொடங்கவுள்ள 10ஆம் வகுப்புத் தேர்வுகள் மார்ச் 9, 2026 அன்றும், 12 ஆம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 9, 2027 அன்றும் நிறைவடையும். மொத்தம் 46 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வுகளில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் 2027 ஆம் ஆண்டு சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், எந்தெந்த தேதிகளில் என்னென்ன பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறவுள்ளன என்பதையும் விரிவாக பார்க்கலாம்.
2026 – 27 கல்வி ஆண்டிற்கான செய்முறைத் தேர்வுகள், திட்டப்பணிகள் மற்றும் அக மதிப்பீடுகளை நடத்துவது குறித்த வழிகாட்டுதல்களை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. வழக்கமான பள்ளிகளில், செய்முறைத் தேர்வுகள் 2027 ஜனவரி 1 அன்று தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளன. குளிர்கால பாதிப்புள்ள பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிகளுக்குத் தனி அட்டவணை பொருந்தும்.
இதில், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 83 பாடங்களுக்கும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 121 பாடங்களுக்கும் தேர்வுகள் நடத்தப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. இதன்படி, மாணவர்கள் தேர்வு செய்துள்ள தங்களின் பாடத்திட்டங்களுக்கு ஏற்ப தேர்வுகளை எழுதுவது கட்டாயமாகும். இந்தத் தேர்வுகள் அனைத்தும் காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணிவரை சுமார் 3 மணிநேரங்களுக்கு நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் போலியான புத்தகங்கள்…. திமுக பரபரப்பு குற்றச்சாட்டு
தேர்வு அட்டவணையை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது?
மாணவர்கள் சிபிஎஸ்இ-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.cbse.gov.in/ என்ற தளத்திற்குச் செல்ல வேண்டும். அங்குள்ள ‘Examination Circulars’ (தேர்வு சுற்றறிக்கைகள்) பகுதிக்குச் சென்று, ‘Class 10 Date Sheet 2027’ அல்லது ‘Class 12 Date Sheet 2027’ என்பதற்கான இணைப்பைக் கிளிக் செய்து, பிடிஎஃப் (PDF) கோப்பைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.