மூன்றாவது மொழி பாடத்தில் தேர்ச்சி கட்டாயம் – சிபிஎஸ்சி வெளியிட்ட புதிய அறிவிப்பு
2026-27 கல்வியாண்டில் 9-ம் வகுப்பில் படிக்கும் மாணவர் மூன்றாம் மொழி மதிப்பீட்டில் தேர்ச்சி பெறாவிட்டாலும், அவர் 10-ம் வகுப்பிற்கு முன்னேற்றப்படுவார். ஆனால், 10-ம் வகுப்பு படிக்கும் காலத்திலேயே 9-ம் வகுப்பிற்கான மூன்றாவதுது மொடி பாடத்தில் நடத்தப்படும் மதுப்பீடிலும் தேர்ச்சி பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 14, 2026: 10-ம் வகுப்பில் மூன்றாவது மொழி பொதுத்தேர்வில் இடம்பெறாது. இருப்பினும், பள்ளி அளவில் நடத்தப்படும் அந்த மொழிக்கான மதிப்பீட்டுத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றால்தான் 10-ம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் புதிய சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது. ஜூலை 10-ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்த வழிகாட்டுதல், 2027-28 கல்வியாண்டில் 10-ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு பொருந்தும்.
பள்ளி நடத்தும் மூன்றாம் மொழி மதிப்பீட்டில் மாணவர் தோல்வியடைந்தால், இறுதி முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன், அவருக்கு மீண்டும் மதிப்பீடு நடத்தி தேர்ச்சி பெறச் செய்வது பள்ளியின் பொறுப்பாகும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
3வது மொழி தேர்ச்சி என்பது கட்டாயம் – சிபிஎஸ்சி:
மேலும், 2026-27 கல்வியாண்டில் 9-ம் வகுப்பில் படிக்கும் மாணவர் மூன்றாம் மொழி மதிப்பீட்டில் தேர்ச்சி பெறாவிட்டாலும், அவர் 10-ம் வகுப்பிற்கு முன்னேற்றப்படுவார். ஆனால், 10-ம் வகுப்பு படிக்கும் காலத்திலேயே 9-ம் வகுப்பிற்கான மூன்றாவதுது மொடி பாடத்தில் நடத்தப்படும் மதுப்பீடிலும் தேர்ச்சி பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: டிடர்ஜெண்ட் பவுடர் மற்றும் பாமாயில் கலந்த பால்.. 2 லட்சம் கிலோ தரமற்ற பால் பவுடர் – மகாராஷ்டிராவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..
முன்னதாக, ஜூன் 29-ஆம் தேதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், 6-ம் வகுப்பு முதல் மூன்று மொழிக் கொள்கை அமல்படுத்தப்படும் என்றும், மாணவர்கள் மூன்று மொழிகளை கற்க வேண்டும் என்றும், அவற்றில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்திருந்தது.
ஏற்கனவே 7, 8 மற்றும் 9-ம் வகுப்புகளில் ஆங்கிலத்துடன் வெளிநாட்டு மொழியை தேர்வு செய்த மாணவர்கள், அந்த மொழியைத் தொடர்ந்து படிக்கலாம். அதே நேரத்தில், கூடுதலாக ஒரு இந்திய மொழியையும் கற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை யாருக்கு பொருந்தும்?
இதன் மூலம், 2026-27 கல்வியாண்டு முதல் 9-ம் வகுப்பிலும், 2027-28 முதல் 10-ம் வகுப்பிலும் மூன்றாவது மொழி கட்டாயமாகிறது. இருப்பினும், தற்போது 2026-27 கல்வியாண்டில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவர்களுக்கு இந்த நடைமுறை பொருந்தாது.
இதற்கிடையில், மூன்று மொழிக் கொள்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய கல்வி அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், கல்வி இந்திய அரசியலமைப்பின் ஒருங்கிணைந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளதால், தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ செயல்படுத்துவது ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் கூட்டுப் பொறுப்பு என்று தெரிவித்துள்ளது.
மேலும், மூன்று மொழிக் கொள்கை பன்மொழித் திறனை ஊக்குவித்தல், இந்திய மொழிகளை பாதுகாத்தல், மாணவர்களின் அறிவாற்றலை மேம்படுத்துதல், தேசிய ஒருமைப்பாடு மற்றும் பண்பாட்டு பன்முகத்தன்மையை வலுப்படுத்துதல் போன்ற நோக்கங்களுக்காகவே அமல்படுத்தப்படுவதாகவும் மத்திய அரசு தனது பதில் மனுவில் விளக்கம் அளித்துள்ளது.